- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்முட்டையை அவிக்க இப்படி எல்லாம் கூட செய்வீங்களா? இது தெரிஞ்சா இனி இப்படி செய்ய மாட்டீங்க!

முட்டையை அவிக்க இப்படி எல்லாம் கூட செய்வீங்களா? இது தெரிஞ்சா இனி இப்படி செய்ய மாட்டீங்க!

- Advertisement -

பொதுவாக முட்டையை வாங்கி வந்தவுடன் நாம் நன்கு கழுவி சுத்தம் செய்த பின்பு தான் பிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைக்க வேண்டும். வாங்கி வந்து அப்படியே பிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைப்பது சரியல்ல. இந்த வகையில் முட்டையை அவிக்கும் பொழுது சிலர் சாதத்துடன் சேர்த்து அவிப்பதும் அல்லது பருப்பு வேக வைக்கும் பொழுது சேர்த்து அவிப்பதும் உண்டு. இப்படி செய்வது சரியா? தவறா? என்பதை தெரிந்து கொள்ள இந்த பதிவை நோக்கி தொடர்வோம்.

பொதுவாக முட்டையை அவிக்க பலரும் வித்தியாசமான முறையை கையாளுகின்றனர். ஒரு சிலர் முட்டையை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைப்பார்கள். இவ்வளவு நேரம் தான் முட்டையை அவிக்க வேண்டும் என்பது இல்லாமல் சமையல் செய்யும் நேரத்திற்கு ஏற்ப அவிக்க விட்டு விடுவார்கள். முட்டையை அவிப்பது கூட ஒரு கை தேர்ந்த கலை ஆகும்.

- Advertisement -

சாதாரணமாக முட்டையை அதிக நேரம் வைத்து அவித்தால் சுவை மாறிவிடும். முட்டையின் மஞ்சள் கருவை விழுங்குவதற்கு சிரமமாக இருக்கும். குறைவான நேரத்தில் வைத்து எடுத்தால் முட்டையின் பச்சை வாசம் அப்படியே இருக்கும். இந்த வாடை பலருக்கும் பிடிப்பதில்லை. சரியான நேரத்தில் வைத்து அவித்து எடுக்கும் முட்டை, சத்துக்களையும் முழுமையாக நமக்குக் கொடுக்கின்றது. அதே சமயத்தில் சுவையாகவும் இருக்கின்றது.

கோழியில் இருந்து வரும் முட்டை ஓட்டை யாரும் சுத்தம் செய்து விற்பனைக்கு கொண்டு வருவது கிடையாது. அதில் அழுக்குகளும், கழிவுகளும் ஒட்டிக் கொண்டு தான் இருக்கும். கண்ணுக்கு தெரியும் பொழுது அதனை நாம் சுத்தம் செய்து விட்டு அவித்து விடுகிறோம் ஆனால் கண்ணுக்கு தெரியாமல் எவ்வளவோ கிருமிகள் அதன் மீது ஒட்டிக் கொண்டிருக்கும் எனவே சுத்தம் செய்யாமல் பருப்பு வேக வைக்கும் பொழுது அதனுடன் சேர்த்து அப்படியே அவிப்பது கூடாது, இதனால் அந்த கழிவுகள் மற்ற உணவுப் பொருட்களுடனும் கலந்து விடும் அபாயம் உண்டு.

- Advertisement -

சிலர் சாதம் வேக வைக்கும் பொழுது முட்டையையும் சேர்த்து வேக வைப்பது உண்டு. இது போல் நேரத்தை மிச்சப்படுத்த செய்யும் செயல்களை யோசித்து செய்வது நல்லது. அதிகபட்சம் 10 நிமிடத்திற்கு மேல் முட்டையை அவிக்க வேண்டிய அவசியம் இல்லை! அப்படி இருக்கும் பொழுது இந்த முறைகளை கையாள்வது அவ்வளவு நல்லதல்ல.

முட்டையை பிரிட்ஜில் இருந்து எடுத்தவுடன் அப்படியே அவிக்கவும் கூடாது. சிறிது நேரம் அதன் குளிர்ச்சியான தன்மை குறைந்த உடன் அவித்து எடுப்பது நல்லது. அரைவேக்காடுடன் எடுக்கும் முட்டையை 3 நிமிடம் தண்ணீரில் நன்கு அவித்து எடுத்தால் போதும். அதில் உப்பு, மிளகு தூவி சாப்பிடும் பொழுது ரொம்ப ருசியாக இருக்கும். ஒரு முட்டையை சாதாரணமாக வேகா வைக்க அதிகபட்சம் ஒன்பது முதல் பத்து நிமிடம் ஆகும். ஒன்பது நிமிடங்களில் அடுப்பை அணைத்து அந்த தண்ணீரைக் கொட்டிவிட்டு வேறு ஒரு தண்ணீரை நிரப்பி ஆற விட்டு விடுங்கள். அதன் பிறகு ஐந்து நிமிடத்திற்கு பிறகு முட்டையின் ஓட்டை தனியாக பிரித்து எடுத்து பரிமாறிக் கொள்ளலாம்.

முட்டை வேக வைக்கும் போது அதில் ஒரு ஸ்பூன் வினிகர் சேர்த்து அவித்து எடுத்தால் முட்டை ஓடு உடைவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. முட்டை அப்படியே உடைந்தாலும் உள்ளே இருக்கும் கரு வெளியில் வராது. வினிகர் இல்லை என்றால் கால் ஸ்பூன் கல் உப்பு சேர்த்து வேக வைக்கலாம். அல்லது பேக்கிங் சோடா எனப்படும் சமையல் சோடா சேர்த்து வேக வைத்தால் முட்டை சீக்கிரம் உடையாது. முட்டையை குறைந்த தீயில் 2 நிமிடம் வேக வைத்த பின்னர் அதிகரித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் முட்டை உடையவும் செய்யாது, சரியான பதத்தில் வேகவும் செய்யும். இந்த முறையில் நீங்களும் முட்டையை ஒருமுறை அவித்துப் பாருங்கள்.

சற்று முன்