- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபணம் வீண் விரயமாகாமல் மேலும் பன்மடங்கு அதிகரிக்க பணம் வைக்கும் இடத்தில், கணக்கு எழுதி வைக்கும்...

பணம் வீண் விரயமாகாமல் மேலும் பன்மடங்கு அதிகரிக்க பணம் வைக்கும் இடத்தில், கணக்கு எழுதி வைக்கும் புத்தகத்தில் இப்படி செய்து பாருங்கள்!

- Advertisement -

புத்திக்கு அதிபதியாக விளங்கும் புத்தி பகவான் நம்முடைய அறிவாற்றலையும், ஞானத்தையும் அதிகரிக்கச் செய்கிறார். ஒருவர் திறமையுடன், புத்திக் கூர்மையுடன் செயல்படுவதற்குத் புதனுடைய அருள் கண்டிப்பாக தேவை. இவருடைய அருளை பெறவும், பணம் பன்மடங்கு அதிகரிக்கவும் நாம் பணம் வைக்கும் இடங்களில் என்ன செய்ய வேண்டும்? அதுமட்டுமல்லாமல் கணக்கு எழுதி வைக்கும் புத்தகத்தை எப்படி வைத்திருக்க வேண்டும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

புதன் பலத்துடன் பிறந்தவர்களுக்கு புத்திக்கூர்மை அதிகரித்து காணப்படும். என்ன செய்தால் முன்னேறலாம் என்கிற ஒரு நுணுக்கம் அவர்களுக்கு தெரிந்திருக்கும். இத்தகையவர்கள் ரியல் எஸ்டேட், பங்கு வர்த்தகம் போன்றவற்றில் அதிகம் ஈடுபடுவார்கள். நீங்கள் ஒரு மாதம் முழுவதும் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை, இவர்கள் எளிதில் தன்னுடைய அறிவாற்றலால் சம்பாதித்து காட்டுவார்கள்.

- Advertisement -

எல்லாவற்றுக்குமே ஒரு கொடுப்பினை வேண்டும் என்று சொல்வார்கள். அதிர்ஷ்டமும், அறிவும் சேரும் இடங்களில் செல்வச் செழிப்பிற்கு குறைவிருக்காது. இதற்கு எப்போதும் பணத்தை செலவு செய்யும் முன்பு ஒரு நோட்டு புத்தகத்தில் கணக்கு எழுதி வைக்க வேண்டும். தொழில், வியாபாரம், உத்தியோகம் செய்பவர்கள், இல்லத்தரசிகள் என்று யாராக இருந்தாலும் நீங்கள் செலவு செய்யும் பணத்தை ஒரு நோட்டுப் போட்டு குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் எவ்வளவு செலவு செய்கிறோம்? எவ்வளவு சிக்கனமாக இருக்க வேண்டும்? என்கிற ஒரு புரிதல் உண்டாகும்.

இந்த நோட்டுப் புத்தகம் வைத்து இருக்கும் இடத்தில் ஒரு பச்சை துணியில், ஒரு சிறு துண்டு பச்சை கற்பூரத்தை வைத்து மூட்டையாக கட்டி வைக்க வேண்டும். பச்சை நிறம் புதன் பகவானுக்கு உரியது ஆகும். பச்சை கற்பூரம் மகாலட்சுமியை குறிப்பது ஆகும் எனவே இப்படி செய்து வைப்பதால் நமக்கு எவ்வளவு செலவு செய்ய வேண்டும்? என்கிற ஒரு நுணுக்கம் வளருமாம். கடை வைத்து நடத்துபவர்கள் அல்லது தொழில் ஸ்தாபனங்கள் வைத்து இருப்பவர்கள் தங்களுடைய பணம் வைக்கும் இடம் அல்லது கல்லாப்பெட்டியில் எப்போதும் பச்சை நிறத் துணியில் பச்சை கற்பூரத்தை முடிந்து வைத்திருக்க வேண்டும்.

- Advertisement -

மேலும் புதன் கிழமைகளில் பச்சை நிற உடை அணிந்து கொள்வது ரொம்பவே சிறப்பான பலன்களை கொடுக்கும். புத்திக்கு அதிபதி புதன் பகவான் என்றாலும் பத்தாம் இடத்தில் தொழில் ஸ்தானம் அமைந்துள்ளதால் அதற்கு அதிபதியாக இருப்பவரை அடிக்கடி கவனிக்க வேண்டும். உங்கள் ஜாதகப்படி பத்தாம் இடத்திற்கு அதிபதியாக விளங்குபவர் யார்? என்பதை அறிந்து கொண்டு நவக்கிரக சந்நிதிக்கு சென்று அவருக்கு உரிய வஸ்திரம் சாற்றி வழிபட்டு வாருங்கள்.

மேலும் மகாலட்சுமியின் அருளைப் பெற பணம் வைக்கும் இடங்களில் அதாவது மணி பர்ஸ், பீரோ போன்ற இடங்களில் ஒரு சிறு துண்டு பச்சை கற்பூரத்தை எப்போதும் கரையாமல் வைத்துக் கொள்ளுங்கள். பணத்துடன் பச்சைக் கற்பூரத்தின் வாசனை சேரும் பொழுது நிச்சயம் அங்கு செல்வ வளம் பெருகும். வீண் விரயங்கள் ஆகாமல், எதற்காக செலவு செய்ய வேண்டும்? இந்த செலவு செய்வது நமக்கு லாபத்தைக் கொடுக்குமா? அல்லது நஷ்டத்தை கொடுக்குமா? என்கிற ஒரு முடிவை நமக்கு எடுக்கக் கூடிய தெளிவான புத்தி கூர்மையை கொடுக்கும். பணம் பத்தும் செய்யும் என்றாலும், பணம் வைக்கும் இடத்தில் பச்சை கற்பூரம் நின்று செய்யும்.

சற்று முன்