- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்வறுக்க வேண்டாம், பொடிக்க வேண்டாம். உடனடியாக 2 நிமிடத்தில் இட்லி மிளகாய்பொடி செய்வது எப்படி?

வறுக்க வேண்டாம், பொடிக்க வேண்டாம். உடனடியாக 2 நிமிடத்தில் இட்லி மிளகாய்பொடி செய்வது எப்படி?

- Advertisement -

வறுக்காமல் பொடிக்காமல் ஒரு இட்லி பொடி ரெசிபி உங்களுக்காக. இட்லி தோசைக்குத் தொட்டுக்கொள்ள எதுவுமே இல்லை என்று யோசிக்கும்போது, இந்த இட்லிபொடி, உங்களுக்கு உடனடியாக கை கொடுக்கும். நிறைய பேருக்கு இந்த ரெசிபி தெரிந்திருக்கலாம். இருப்பினும் வித்தியாசமான முறையில் சில பொருட்களை சேர்த்து இந்த உடனடி இட்லி மிளகாய் பொடி செய்யும் போது, இதனுடைய சுவை இன்னும் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். அருமையான அவசர இட்லி பொடி ரெசிபியை இப்போதே தெரிந்துகொள்வோம்.

பொடி 1:
ஒரு அகலமான சிறிய கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மிளகாய்தூள் – 2 ஸ்பூன், உப்பு – 1 ஸ்பூன், பெருங்காயத்தூள் – 1/2 ஸ்பூன், இந்த மூன்று பொடியையும் போட்டு நன்றாக கலந்து விட்டு, உங்கள் தேவைக்கு ஏற்ப கொதிக்கவைத்த நல்லெண்ணையை இந்த பொடியோடு சேர்த்து, நன்றாக கலந்து விட வேண்டும். அதன் பின்பு 1 டேபிள்ஸ்பூன் தயிரை இந்த இட்லிப் பொடியுடன் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, அப்படியே சுடச்சுட இலையில் தொட்டு சாப்பிட்டு பாருங்கள். அத்தனை சுவையாக இருக்கும். சட்னியும் சாம்பாரும் இதன் சுவைக்கு தோற்றுப்போகும்.

- Advertisement -

இதே மிளகாய் பொடியில் இன்னும் 2 டேபிள்ஸ்பூன் தயிரை அதிகமாக ஊற்றி கலந்து இட்லியின் மேலே தடவி, அந்த இட்லியை அப்படியே டிபன் பாக்ஸில் போட்டு லஞ்சுக்கு எடுத்துச் சென்றால், மிளகாய் பொடியில் ஊறிய அந்த இட்லியின் சுவை இன்னும் கூடுதலாக இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க.

பொடி 2:
இந்த இட்லி பொடியை தயிர் இல்லாமல் எப்படி செய்வது. ஒரு கிண்ணத்தில் மிளகாய் தூள் – 2 ஸ்பூன், உப்பு – 1 ஸ்பூன், பெருங்காயத்தூள் – 1/2 ஸ்பூன் சேர்த்து சுட சுட நல்லெண்ணெயை ஊற்றி கலந்து விட்டு, தேவையான அளவு புளிப்பு சுவைக்கு எலுமிச்சை பழச்சாறு பிழிந்து கொண்டாலும் இந்த மிளகாய்ப்பொடி அருமையான சுவையில் இருக்கும்.

- Advertisement -

பொடி 3:
இந்த மிளகாய் பொடியை பூண்டு சேர்த்தும் செய்யலாம். தேவையான அளவு தோல் உரித்த பூண்டு பற்களை சிறிய உரலில் போட்டு நசுக்கி கொள்ள வேண்டும். ஒரு சிறிய கிண்ணத்தில் மிளகாய்தூள் – 2 ஸ்பூன், உப்பு – 1 1/2 ஸ்பூன், நசுக்கி  வைத்திருக்கும் பூண்டு, இந்த மூன்று பொருட்களை போட்டு நல்லெண்ணையை காய்ச்சி ஊற்றி கலந்து பரிமாறலாம். அப்படி இல்லை என்றால் பச்சை நல்லெண்ணெய் ஊற்றியும் பரிமாறிக்கொள்ளலாம். இதன் சுவையும் நன்றாகத்தான் இருக்கும்.

பொடி 4:
அடுப்பில் ஒரு கடாயை வைத்து ஒரு குழி கரண்டி அளவு நல்லெண்ணெயை ஊற்றி, நல்லெண்ணெய் மிதமாக சூடு ஆன பின்பு, நசுக்கிய பூண்டை நல்லெண்ணெயில் சேர்த்து, பூண்டு லேசாக வறுபட்டு வந்தவுடன் அடுப்பை அணைத்து விட வேண்டும். சூடாக இருக்கும் இந்த எண்ணெயில் மிளகாய் தூள் – 2 ஸ்பூன், உப்பு – 1 ஸ்பூன் சேர்த்து கலந்து விட்டு சாப்பிட்டாலும் இது ஒருவகையான சுவையைக் கொடுக்கும். உங்களுக்கு எந்த ரெசிபி பிடிக்குதோ அதை ட்ரை பண்ணி பாருங்க. 4 பொடி ரெசிபியும் பிடிச்சிருந்தா, 4 ரெசிபியும் வாரத்தில் ஒவ்வொரு நாள் ட்ரை பண்ணி பாருங்க. பச்சை மிளகாய் தூள் என்பதால் வயிற்றுக்கு காரம் ஒத்துவராது. தினம்தோறும் சாப்பிடாதீங்க.

சற்று முன்