- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதினமும் பயம் இல்லாமல் வண்டி வாகனத்தில் பயணம் செய்யலாம். விபத்துக்கள் எதுவும் நடக்காமல் இருக்க உங்களுடன்...

தினமும் பயம் இல்லாமல் வண்டி வாகனத்தில் பயணம் செய்யலாம். விபத்துக்கள் எதுவும் நடக்காமல் இருக்க உங்களுடன் இந்த 1 பொருளை வைத்துக் கொண்டால் போதும்.

- Advertisement -

அவசர அவசரமாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த உலகத்தில், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எந்த வாகனத்தில் செல்வதாக இருந்தாலும் எல்லோருக்கும் ஒரு பயம் வருகிறது. எந்த நேரத்தில் விபத்து நடக்குமோ என்று. நீங்கள் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் ஆக இருந்தாலும் சரி, சைக்கிளில் பயணம் செய்பவர்களாக இருந்தாலும் சரி, கார் ஓட்டுபவர்கள் ஆக இருந்தாலும் சரி, அல்லது தினம்தோறும் பஸ்ஸில் அலுவலகம் சென்று வருபவர்களாக இருந்தாலும் சரி, உங்களுடைய கையில் இந்த ஒரு பொருளை வைத்துக் கொண்டாலே போதும். விபத்து நடக்கும், அந்த விபத்தின் மூலம் நமக்கு ஆபத்து வரும் என்ற மனபயம் இருக்காது.

இது ஒரு பொருளை கையில் வைத்துக் கொண்டால் விபத்து நடப்பதற்கு வாய்ப்பே இருக்காது. இந்த பொருளை வண்டியில் வைத்துக் கொண்டு வேகமாக வாகனத்தை ஓட்டலாமா. இப்படியெல்லாம் யோசிக்காதீங்க. ‘விபத்து நடந்து விடுமோ, நமக்கு ஏதாவது ஆகிவிடுமோ, என்ற மனபயம் நமக்குள் வரும் போது, சில சமயங்களில் நம்முடைய எண்ணங்கள் பளிப்பதற்கு வாய்ப்பு உள்ளது.’ மன பயம் என்பதை நீக்கிவிட்டு, நம்பிக்கையோடு ‘விபத்து நடக்காது’ என்று உறுதியாக பயணத்தை செய்தால் நிச்சயம் விபத்து நடப்பதற்கு வாய்ப்புகள் குறைவாக இருக்கும். நம்பிக்கை தான் எல்லாம். நாளை உயிரோடு இருப்போம் என்ற நம்பிக்கையில் தானே உறங்க செல்கின்றோம். நம்பிக்கையின் அடிப்படையில் செய்வதே பரிகாரங்கள். சரி விஷயத்திற்கு வருவோம்.

- Advertisement -

எதிர்மறை எண்ணங்கள், எதிர்மறை சக்திகள் அடுத்தவர்களுடைய கெட்ட எண்ணங்கள், இவைகளை பஸ்பமாக்க கூடிய சக்தி ஒரு எலுமிச்சம் பழத்திற்கு உள்ளது. இதனால் தான் இதை தேவலோகத்து கனி என்று சொல்கிறார்கள். நீங்கள் எப்போதும் உங்களுடைய வண்டியில், இந்த ஒரு எலுமிச்சம்பழத்தை வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் சைக்கிள் ஓட்டுபவர்கள் ஆக இருந்தாலும் உங்களுடைய பையில் எப்போதும் ஒரு எலுமிச்சம்பழம் இருக்கட்டும். நீங்கள் பஸ்ஸில் வேலைக்கு, பள்ளிக்கூடத்திற்குச் சென்றாலும், உங்களுடைய பையில் எப்போதும் ஒரு எலுமிச்சம் பழத்தை போட்டு வைத்துக்கொள்ளுங்கள்.

இந்த எலுமிச்சம்பழமானது எதிர்மறை ஆற்றலை உங்களிடம் நெருங்கவிடாது. எதிர்மறை எண்ணங்களை உங்களிடம் கொண்டு வராது. எப்போதுமே நம்மை சுற்றி பாசிட்டிவ் எனர்ஜி இருந்தால், நமக்கு கெடுதல் நடப்பதற்கு வாய்ப்பே கிடையாது. அந்த அம்பாள் சக்தியே, தேவியே எலுமிச்சை பழம் ரூபத்தில் உங்களுடன் இருப்பதாக நம்பினால் மட்டும் போதும்.

- Advertisement -

புதியதாக வாங்கிய எந்த வண்டி வாகங்களாக இருந்தாலும் அந்த வாகனத்தை பார்க்கும்போது அடுத்தவர்களுடைய மனதில் இதுபோல நம்மிடம் ஒரு வண்டி இல்லையே என்ற ஏக்கம், பெருமூச்சு இருக்கத்தான் செய்யும். அப்படி அடுத்தவர்களுடைய கண் திருஷ்டி படும் போது, நம்முடைய வண்டிக்கு விபத்து ஏற்படவோ அல்லது வேறு ஏதாவது பிரச்சினைகள் உண்டாக வாய்ப்புகள் உள்ளது. அடுத்தவர்களுடைய கண்திருஷ்டியை கூட இந்த எலுமிச்சம்பழம் பொசுக்கிவிடும்.

இந்த எலுமிச்சம்பழம் காய்ந்து வரும் போது பழைய எலுமிச்சம் பழத்தை எடுத்து குப்பையில் போட்டு மீண்டும் புதிய எலுமிச்சம்பழத்தை வைத்துக் கொண்டால் போதும். நம்பிக்கை உள்ளவர்களுக்காக சொல்லப்பட்டுள்ள பரிகாரம் இது. நம்பிக்கை இருந்தால் இந்த பரிகாரத்தை பின்பற்றலாம் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்