மன அழுத்தம் இல்லாமல் மனதை லேசாக வைத்திருந்தாலே நம்முடைய அழகு கூடும். கவலைப்பட்டால் அழகு குறையும். மன அழுத்தத்தை போக்க, கண்பார்வையை சரி செய்ய, சருமம் பளபளப்பாக, முடி உதிர்வு குறைய, முடி அடர்த்தியாக வளர ரொம்ப ரொம்ப சுலபமான ஒரு ரெமிடி தான் இன்னைக்கு நாம பார்க்கப் போறோம். தினமும் 1 டம்ளர் மோர் இப்படி குடித்தால் போதும். உங்களுடைய எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வு கிடைக்கும்.

முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கறிவேப்பிலை – 2 கொத்து, இஞ்சி- தோல் சீவியது – 1 சிறிய துண்டு, பச்சை மிளகாய் – 1, வறுத்த சீரகம் – 1/4 ஸ்பூன், லெமன் ஜூஸ் – 2 டேபிள்ஸ்பூன், தயிர் – 1/4 கப், தண்ணீர் – 3/4 கப், இந்த பொருட்களை சேர்த்து மிக்ஸியில் நன்றாக அடித்துக் கொள்ளவும். (பச்சை மிளகாய் வேண்டாம் என்று நினைப்பவர்கள் அதை மட்டும் போடாமலும் இந்த மோர் தயார் செய்து குடிக்கலாம்.)
இதை அப்படியே ஒரு வடிகட்டியில் வடிகட்டி விட்டு 2 சிட்டிகை உப்பு போட்டு கலந்து அப்படியே குடித்து விட வேண்டியது தான். நெஜமாவே தினம்தோறும் இப்படி நீங்கள் மோர் குடித்து வந்தால் உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில், முடி வளர்ச்சியில், சரும நிறத்தில் நல்ல வித்தியாசத்தை பார்க்க முடியும். குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்களும் இந்த மோர் தினமும் எடுத்துக்கொள்ளலாம்.

இப்போது வரப்போவது வெயில் காலம் என்பதால் இந்த மோர் உங்களுக்கு மேலும் பல நன்மைகளை செய்யக்கூடியதாக இருக்கும். உங்களால் எந்த நேரத்தில் இதை குடிக்க முடியுமோ அந்த நேரத்தில் குடிக்கலாம். இந்த நேரத்தில் தான் கொடுக்க வேண்டும் என்ற எந்த கட்டுப்பாடும் கிடையாது.
இரண்டாவதாக இன்னொரு ஜூஸ் ரெசிபி. இது உங்களுடைய உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி, உங்களை எப்போதும் உற்சாகமாக வைத்திருக்கும். ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் பொடியாக வெட்டிய கேரட் – 1, பொடியாக வெட்டிய ஆப்பிள் துண்டுகள் – 1/2, தோல் சீவிய இஞ்சி – 1/2 இன்ச் அளவு, தோல் சீவிய பச்சை மஞ்சள் – 1/2 இன்ச், கொட்டைகள் நீக்கி பொடியாக வெட்டிய நெல்லிக்காய் – 2, மிளகு தூள் – 1/2 ஸ்பூன், ஆளி விதை – 1/2 ஸ்பூன், தண்ணீர் – 3/4 கப், இந்த எல்லாப் பொருட்களையும் மிக்சியில் நன்றாக மைய அரைத்து விடுங்கள்.

இதை வடி கட்ட கூடாது. அப்படியே ஒரு டம்ளரில் ஊற்றி குடித்து விடுங்கள். வாரத்தில் 1 நாள் வெறும் வயிற்றில் இந்த ஜுஸ் குடித்துவர உங்களுடைய உடல் எல்லா விதத்திலும் ஆரோக்கியமடையும். வாரத்தில் ஒரு நாள் இதை செய்ய முடியவில்லை என்றால் மாதத்தில் இரண்டு நாட்கள் மட்டுமாவது வெறும் வயிற்றில் இந்த ஜூஸ் குடுத்து பாருங்க. ரொம்ப ரொம்ப நல்லது.