- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்சற்று வித்தியாசமான சுவையில் இந்த கொத்தமல்லி தொக்கை செய்துகொண்டால் போதும். மூன்று நாட்களுக்கு வைத்து சாப்பிட்டாலும்...

சற்று வித்தியாசமான சுவையில் இந்த கொத்தமல்லி தொக்கை செய்துகொண்டால் போதும். மூன்று நாட்களுக்கு வைத்து சாப்பிட்டாலும் கெட்டுப் போகாது

- Advertisement -

திடீரென்று வெளியூர் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டாலோ அல்லது இரண்டு, மூன்று நாட்கள் தொடர்ந்து பயணம் செய்வதாக இருந்தாலும் சாப்பிட வீட்டிலிருந்து உணவுகளைக் கொண்டு செல்ல வேண்டியிருக்கும். அப்பொழுது ஏதேனும் ஒரு நாள் மட்டும் தான் நாம் கொண்டு செல்லும் உணவு நன்றாக இருக்கும். ஆனால் இரண்டு, மூன்று நாட்களுக்கு தேவையான உணவை செய்து கொண்டு செல்ல வேண்டும் என்றால் அதற்கு ஊறுகாய் போன்று ஏதாவது ஒரு உணவு பொருளை செய்தால் மட்டும் தான் நன்றாக இருக்கும். அப்படி இட்லி, தோசை, சப்பாத்தியுடன் தொட்டுக் கொண்டு சாப்பிடவும் அல்லது சாதத்துடன் சேர்த்துப் பிசைந்து சாப்பிடுவதற்கும் ஏற்றார் போன்ற இந்த கொத்தமல்லி தொக்கை ஒரு முறை செய்து பாருங்கள். இதன் சுவை மிகவும் அற்புதமாக இருக்கும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
கொத்தமல்லி – இரண்டு கட்டு, புளி – பெரிய நெல்லிக்காய் அளவு, கடுகு – ஒன்றரை ஸ்பூன், வெந்தயம் – கால் ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன், பெருங்காயம் சிறிய துண்டு – ஒன்று, காய்ந்த மிளகாய் – 25, பூண்டு – 7 பல், மஞ்சள்தூள் – அரை ஸ்பூன், சாம்பார் பொடி – ஒரு ஸ்பூன், வெல்லம் – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 50 கிராம்.

- Advertisement -

செய்முறை:
முதலில் இரண்டு கட்டு கொத்தமல்லியை தண்ணீரில் அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும் பிறகு ஏற்படும் சிறிய உரலில் வைத்து தட்டி வைக்க வேண்டும் பின்னர் கடாயை அடுப்பில் வைத்து அதில் ஒரு ஸ்பூன் கடுகு முக்கால் ஸ்பூன் வெந்தயம் இவற்றைத் தனித்தனியாக வறுத்தெடுக்க வேண்டும்.

பிறகு அதே கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, அதில் 25 வரமிளகாய் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். பிறகு அதே கடாயில் சிறிய துண்டு பெருங்காயத்தையும் வறுத்து இவற்றுடன் சேர்க்க வேண்டும். பின்னர் இவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் அதே கடாயில் கொத்தமல்லி தழைகளை சேர்த்து நன்றாக சுருண்டு வரும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு நெல்லிக்காய் அளவு புளியை ஊறவைத்து, கரைத்து ,அந்த புளி கரைசலை கொத்தமல்லியுடன் சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும். இவை கொதிக்கும் பொழுது இவற்றுடன் அரை ஸ்பூன் மஞ்சள் தூள், உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் சாம்பார் பொடி சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

பின்னர் இவை நன்றாக கொதித்து கெட்டியாக மாறியதும், இவற்றுடன் அரைத்து வைத்துள்ள மசாலா பொடியையும் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பிறகு ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பின் மீது வைத்து, அதில் 50 கிராம் எண்ணெய் சேர்த்து, அதனுடன் ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு மற்றும் தட்டி வைத்த பூண்டு சேர்த்து நன்றாகப் பொரித்து, கொத்தமல்லி கிரேவியுடன் சேர்த்து கலந்து விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான கொத்தமல்லி தொக்கு தயாராகிவிட்டது.

சற்று முன்