- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்எப்படி செஞ்சாலும் நீங்க செய்ற பிரியாணியில் வாசமும் சுவையும் வரவே மாட்டேங்குதா? ஒருமுறை இந்த பிரியாணி...

எப்படி செஞ்சாலும் நீங்க செய்ற பிரியாணியில் வாசமும் சுவையும் வரவே மாட்டேங்குதா? ஒருமுறை இந்த பிரியாணி மசாலா ட்ரை பண்ணி பாருங்க. நீங்க செய்ற பிரியாணி வாசம் பக்கத்து வீட்டு வரை வீசும்.

- Advertisement -

சில பேருக்கு எப்படித்தான் பிரியாணி செய்தாலும் அதில் ஒரு சுவையோ மணமோ இருக்கவே இருக்காது. ஆனால் பக்கத்து வீட்டில் பிரியாணி செய்தால் மட்டும் நம்முடைய வீடு வரைக்கும் வாசம் வீசும். அது வெஜிடபிள் பிரியாணி ஆக இருக்கட்டும், அல்லது சிக்கன் பிரியாணி ஆக இருக்கட்டும். அல்லது மட்டன் பிரியாணி ஆக இருக்கட்டும். இந்த ஒரு மசாலா பொடியை அரைத்து வைத்துக் கொண்டால் 1 கிலோ பிரியாணியை அருமையாக செய்யலாம். வாங்க அந்த பிரியாணி மசாலா ரெசிபியை நாமும் தெரிந்துகொள்வோம்.

பின் சொல்லக்கூடிய அளவுகள் ஒரு கிலோ அரிசி பிரியாணிக்கு சரியானதாக இருக்கும். ஏலக்காய் – 7, கிராம்பு – 10, சுருள் பட்டை விரல் நீளத்தில் – 3, வரமல்லி – 3 டேபிள்ஸ்பூன், மிளகு – 10, வர மிளகாய் – 8, இந்த எல்லா பொருட்களையும் எடுத்து ஒரு கடாயில் போட்டு 2 நிமிடம் போல சூடுபடுத்தி எடுத்தால் போதும். அதாவது இந்த மசாலா பொருட்கள் அனைத்தையும் அடுப்பில் வைத்து வறுக்க வேண்டும். மணக்க மணக்க நிறம் மாறும் அளவிற்கு வறுக்கக்கூடாது. இந்த எல்லா பொருட்களும் சூடு ஏறி லேசாக மனம் வீசும் போது அடுப்பை அணைத்துவிடுங்கள்.

- Advertisement -

இந்த பொருட்களில் இருக்கும் ஈரத்தன்மை நீங்கினால் மட்டும் போதும். இந்த மசாலாவை நாம் நிறைய சூடு கூட செய்யப்போவது கிடையாது. லேசாக சூடாக்கி இருக்கும் இந்த மசாலாப் பொருட்களை மிக்ஸி ஜாரில் போட்டு அப்படியே பவுடராக அரைத்துக் கொள்ளுங்கள்.

இது கரம்மசாலா போல நன்றாகப் பொடியாக மைய அறைந்துவிடும். சில பேருக்கு பிரியாணி மசாலா 90% வரை அறைபட்டால் பிடிக்கும். அப்படியும் கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம் தான். அவ்வளவு தான். பிரியாணி மசாலா தயார். இந்த மசாலாவை பிரியாணியில் போட்டு சமைத்தால் வாசமாகவும் சுவையாவும் இருக்கும்.

- Advertisement -

எவ்வளவு மிளகாய்தூள் சேர்ப்பது, எவ்வளவு மல்லித்தூள் சேர்ப்பது, எவ்வளவு கரம்மசாலாத்தூள் சேர்ப்பது, என்ற எந்த கவலையும் வேண்டாம். 1 கிலோ பிரியாணி செய்தால் இந்த மசாலா பொடியை அப்படியே கொட்டி பிரியாணிக்கு தம் போட்டு பாருங்கள். வாசம் எப்படி வருதுன்னு உங்களுக்கே தெரியும். 1/2 கிலோ பிரியாணி செய்ய வேண்டும் என்றால் இதில் பாதி பொடியை எடுத்துக் கொள்ளுங்கள். மீதி பொடியை கண்ணாடி பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டு மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

கிலோ கணக்கில் அரைத்து வைத்தால் பிரியாணி மசாலா பொடியில் இருக்கும் வாசம் குறைந்து போகும் அல்லவா. குறைந்த அளவே அரைத்து ஸ்டோர் செய்து வைத்துக்கொள்ளுங்கள். இந்த பொடி, பிரியாணிக்கு மட்டும் கிடையாது. சால்னா, வெஜிடபிள் குருமா, சிக்கன் குருமா, மட்டன் குருமா இப்படி எல்லா வகையான குருமாவுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

கடையில் இருந்து எவ்வளவு பிரியாணி மசாலாவை வாங்கி ட்ரை பண்ணி பாத்து இருப்பீங்க. ஆனால் இப்படி ட்ரை பண்ணி பாருங்களேன். நிச்சயமா அட்டகாசமான சுவை உங்க வீட்டு பிரியாணிக்கும் கிடைக்கும். கூடுமானவரை கடையில் இருந்து வாங்கும் போது சுருள் பட்டை என்று கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். அது பிரியாணிக்கு கூடுதல் வாசத்தையும், கூடுதல் சுவையையும் கொடுக்கக் கூடியது. உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருக்கா மிஸ் பண்ணாதீங்க. உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்