- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்கத்தரிக்காயை ஒருமுறை இவ்வாறு ஃப்ரை செய்து கொடுத்துப் பாருங்கள். கத்தரிக்காய் பிடிக்காதவர்கள் கூட...

கத்தரிக்காயை ஒருமுறை இவ்வாறு ஃப்ரை செய்து கொடுத்துப் பாருங்கள். கத்தரிக்காய் பிடிக்காதவர்கள் கூட இன்னும் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்

- Advertisement -

காய்கறிகளை விரும்பி சாப்பிடுபவர்கள் அதிகம் இருப்பதில்லை. அசைவ உணவை மட்டுமே இன்றைய தலைமுறையினர் விருப்பமாக சாப்பிடுகிறார்கள். குழந்தைகளிடம் கூட என்ன வேண்டும் சாப்பிட என்று கேட்டால் உடனே பிரியாணி என்றுதான் சொல்கிறார்கள். அந்த அளவிற்கு அசைவ உணவு மக்களிடையே பெரும் மயக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் சுவை பலருக்கும் மிகவும் பிடித்துள்ளது. ஆனால் அசைவ உணவைவிட காய்கறி உணவில் மட்டுமே உடம்புக்குத் தேவையான நன்மை தரக்கூடிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருக்கிறது. எனவே அசைவ உணவை விரும்பி சாப்பிட்டாலும், சைவ உணவையும் எடுத்துக் கொண்டால் மட்டுமே நமது உடலின் ஆரோக்கியம் வலுப்படும். உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியதும், பெரும்பாலும் அனைவரும் சாப்பிட விருப்பப் படாத காய்கறி என்னவென்றால் கத்தரிக்காய். இதன் சுவை பலருக்கு பிடிப்பதில்லை. ஆனால் இதை இப்படி ஃப்ரை செய்து கொடுத்தால் வேண்டாம் என்று எவரும் சொல்ல மாட்டார்கள். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் – கால் கிலோ, தனி மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன், கரம் மசாலா தூள் – அரை ஸ்பூன், மிளகுத் தூள் – அரை ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், உப்பு – முக்கால் ஸ்பூன், எலுமிச்சை பழம் – பாதி அளவு, இஞ்சி பூண்டு விழுது – அரை ஸ்பூன், சோளமாவு – இரண்டு ஸ்பூன், எண்ணெய் – 2 ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் கத்தரிக்காய்களை காம்பு நீக்கி, அதனை வட்ட வடிவில் மெல்லியதாக வெட்டி வைக்க வேண்டும். பிறகு கத்தரிக்காய்கள் கருத்துப் போகாமல் இருக்க ஒரு கிண்ணத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு, அந்த தண்ணீரில் வெட்டிய கத்தரிக்காய் போட்டு வைக்க வேண்டும்.

பின்னர் ஒரு அகலமான தட்டை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் இரண்டு ஸ்பூன் சோள மாவு, ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள், முக்கால் ஸ்பூன் உப்பு, அரை ஸ்பூன் கரம் மசாலா தூள், அரை ஸ்பூன் மிளகுத்தூள், அரை ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது மாற்றம் கால் ஸ்பூன் மஞ்சள் தூள் இவை அனைத்தையும் சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு அரை எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு இந்த எலுமிச்சை சாறையும் கலந்து வைத்துள்ள மசாலாவுடன் சேர்த்து நன்றாக கிளறி விடவேண்டும். பிறகு இதனுடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் நறுக்கி வைத்துள்ள கத்தரிக்காய்களை இந்த மசாலாவுடன் சேர்த்து அனைத்தையும் நன்றாக பிரட்டி வைத்துக்கொள்ள வேண்டும். அதன்பின் பத்திலிருந்து பதினைந்து நிமிடம் இதனை அப்படியே ஊற வைக்க வேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு பிரட்டி வைத்துள்ள கத்தரிக்காய்களை எண்ணெயில் சிவந்து வரும் வரை பொரித்து எடுக்க வேண்டும்.

சற்று முன்