- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்கொங்குநாட்டு சுவையில் இப்படி தக்காளி குழம்பு செய்தால் சட்டி நிறைய சாதம் செய்தாலும் பத்தவே பத்தாது

கொங்குநாட்டு சுவையில் இப்படி தக்காளி குழம்பு செய்தால் சட்டி நிறைய சாதம் செய்தாலும் பத்தவே பத்தாது

- Advertisement -

வீட்டில் உள்ள ஒவ்வொரு பெண்களும் தங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்வார்கள். அதிலும் சமையல் என்று வந்துவிட்டால் போதும். ஒவ்வொருவரும் நன்றாக சாப்பிட வேண்டும் என்று அவர்களுக்கு பிடித்ததை பக்குவமாக செய்து கொடுப்பார்கள். அவ்வாறு தங்கள் கணவர், குழந்தைகள், மாமனார், மாமியார் என்று அனைவரையும் நன்றாக கவனித்துக் கொள்வார்கள். அதுபோல ஒவ்வொருவரும் எவ்வளவு சாப்பிடுவார்கள் என்ற அளவையும் தெரிந்து வைத்திருப்பார்கள். எனவே அதற்கு ஏற்றார் போல் இவ்வளவு அரிசி போட்டு சாதம் வெடித்தால் அளவு சரியாக இருக்கும் என்று அவர்களுக்குத் தெரியும். ஆனால் ஒரு சில நேரங்களில் நீங்கள் செய்யும் குழம்பின் சுவை அதிகமாகி விட்டால் நீங்கள் செய்த சாதம் அனைவருக்கும் பத்தாமல் போய்விடும். அதுபோலத்தான் கொங்குநாட்டு சுவையில் இந்த தக்காளி குழம்பு செய்தால் நீங்கள் எவ்வளவு சாதம் செய்து வைத்திருந்தாலும் அது பத்தாமல் போய்விடும். வாருங்கள் அவ்வளவு அருமையான தக்காளி குழம்பை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் – 20, தக்காளி – 5, பொட்டுக்கடலை – ஒரு ஸ்பூன், தேங்காய் – கால் மூடி, கசகசா – ஒரு ஸ்பூன், சோம்பு – ஒரு ஸ்பூன், பட்டை சிறிய துண்டு – ஒன்று, கிராம்பு – 3, இஞ்சி சிறிய துண்டு – ஒன்று, பூண்டு – 6 பல், கடுகு – ஒரு ஸ்பூன், சீரகம் – ஒரு ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, பச்சை மிளகாய் – 2, எண்ணெய் – 4 ஸ்பூன், மஞ்சள்தூள் – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், மிளகாய்தூள் – ஒரு ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லி தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை தோலுரித்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஐந்து சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் பச்சை மிளகாய் மற்றும் தக்காளியைப் பொடியாக அரிந்து கொள்ள வேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைக்க வேண்டும்.

கடாய் நன்றாக சூடானதும் அதில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் பூண்டு, இஞ்சி மற்றும் 15 சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். பிறகு இதனுடன் 3 கிராம்பு, சிறிய துண்டு பட்டை, ஒரு ஸ்பூன் சோம்பு இவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

- Advertisement -

பின்னர் கசகசா, பொட்டுக்கடலை மற்றும் கால் மூடி தேங்காயைத் துருவி சேர்த்து அனைத்தையும் ஒன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு இவற்றுடன் மஞ்சள் தூள், உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து அதனையும் எண்ணெயில் நன்றாக வதக்கவேண்டும். பிறகு இவற்றை ஆற வைத்து மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதே கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கடுகு மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தையும் சேர்த்து வதக்கி, அரைத்து வைத்த விழுதை இவற்றுடன் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து, கொத்தமல்லி தழை சேர்த்தால் சுவையான தக்காளி குழம்பு தயாராகிவிடும்.

சற்று முன்