- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்குக்கரில் மூன்று விசில் வைத்தால் போதும், சுவையான சிக்கன் குழம்பு தயாராகிவிடும். இந்த குழம்பை சுட...

குக்கரில் மூன்று விசில் வைத்தால் போதும், சுவையான சிக்கன் குழம்பு தயாராகிவிடும். இந்த குழம்பை சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டுப் பாருங்கள், அவ்வளவு அருமையாக இருக்கும்.

- Advertisement -

தினமும் வேலைக்கு செல்லும் அவசரத்தில் கையில் கிடைக்கும் காய்கறிகளை வைத்து ஏதேனும் குழம்பு, பொரியல் செய்து, குழந்தைகளுக்கு கட்டிக்கொடுத்து, கணவருக்கும் அதையே கொடுத்து அனுப்பி விடுவார்கள். அடுத்ததாக இரவு வேளை உணவு என்றால் இட்லி, தோசை இவற்றுடன் ஏதேனும் தொட்டுக்கொள்ள சட்னி இருக்கும். இவ்வாறு அனைத்து நாட்களுமே உணவு சாப்பிடுவதற்கு அந்த அளவிற்கு விருப்பம் இல்லாதது போல் இருக்கும். ஆனால் வீட்டில் இருக்கின்ற நேரத்தில் கடைக்குச் சென்று அசைவ உணவுகளை வாங்கி வந்து அருமையாக, பக்குவமாக சமைத்து வீட்டில் உள்ளவர்களுக்கு பரிமாறி கொடுத்துப் பாருங்கள். அன்று அவர்கள் சாப்பிடும் அழகை பார்த்துக்கொண்டே இருக்கலாம். மிகவும் விருப்பமாகவும், நிதானமாகவும் ருசித்து சாப்பிட்டு முடிப்பார்கள். அப்படி மசாலா அரைத்து விட்டு குக்கரில் செய்யக்கூடிய ஒரு சிக்கன் குழம்பை எவ்வாறு செய்வது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்:
சிக்கன் – அரை கிலோ, சின்ன வெங்காயம் – 10, பெரிய வெங்காயம் – 3, தக்காளி – 3, பச்சை மிளகாய் – 5, மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது – ஒன்றரை ஸ்பூன், எண்ணெய் – அரை ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், சோம்பு – ஒரு ஸ்பூன், பட்டை சிறிய துண்டு – ஒன்று, பிரியாணி இலை – ஒன்று, தனி மிளகாய் தூள் – இரண்டு ஸ்பூன், தனியாத்தூள் – 3 ஸ்பூன், உப்பு – ஒன்றரை ஸ்பூன், தயிர் – கால் கப், கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் சிக்கனை நன்றாக சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பிறகு இதனுடன் கால் கப் தயிர், மஞ்சள்தூள் மற்றும் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட்டு, ஊற வைக்கவேண்டும். பின்னர் பெரிய வெங்காயம் மற்றும் தக்காளியை நான்கு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். பிறகு சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்க வேண்டும்.

பின்னர் அடுப்பின் மீது ஒரு கடாயை வைத்து, இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் இவை மூன்றையும் சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு இவற்றை ஆறவைத்து, மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் மீதமுள்ள எண்ணையை ஊற்றவேண்டும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, சோம்பு, பட்டை, கிராம்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு ஒன்றரை ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் இதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு ஊற வைத்த சிக்கனை சேர்த்து 5 நிமிடத்திற்கு நன்றாக வதக்கவேண்டும். பிறகு மிளகாய்த் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை சேர்த்து நன்றாக கலந்து விட்டு, இரண்டு அல்லது மூன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி, கொத்தமல்லித்தழை சேர்த்து, மூடி போட்டு 4 விசில் விட்டு இறக்கினால் சுவையான கறி குழம்பு தயாராகிவிடும்.

சற்று முன்