- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamil3 வாரத்தில், 3 இன்ச் குட்டி குட்டி பேபி ஹேர் வளர, இந்த 3 இலைகள்...

3 வாரத்தில், 3 இன்ச் குட்டி குட்டி பேபி ஹேர் வளர, இந்த 3 இலைகள் போதும். மூன்றே மாதத்தில் உங்கள் முடியைப் பார்த்து ஊரே மூக்கின் மேல் விரலை வைக்கும்.

- Advertisement -

நமக்கு எவ்வளவு தான் முடி உதிர்வு இருந்தாலும் அதற்கு தகுந்தது போல, முடி உதிர்ந்த இடத்தில் புதிதாக குட்டி குட்டி முடிகள் வளர ஆரம்பிக்க வேண்டும். ஆனால் சில பேருக்கு முடி உதிர்வு இருக்கும். புதியதாக முடி வளர்ச்சி இருக்காது. பின்பு முடி மெல்லிசாக மாறிவிடும். பின்னல் போட்டு தொங்க விடும் அளவிற்கு அடர்த்தி இருக்காது. எலிவால் போல மாறிவிடும். இந்த பிரச்சனைக்கு சுலபமாக ஒரு தீர்வு உள்ளது. நிறைய செலவு இல்லாமல், உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் செடி கொடிகளில் இருந்து இந்த இலைகளைப் பறித்து இப்படி பயன்படுத்தினாலே போதும். சூப்பராக குட்டி குட்டி முடிகள் வளர தொடங்கிவிடும்.

இன்று ஒரு டோனர் தான் நம் வீட்டிலேயே தயார் செய்யப் போகின்றோம். முதலில் இந்த டோனரை தயார் செய்ய நமக்கு 3 இலைகள் தேவை. வேப்ப இலை, வெற்றிலை, கொய்யா இலை. வேப்ப இலைகள் ஒரு கொத்து, கொய்யா இலைகள் 5 லிருந்து 6, வெற்றிலை 3 லிருந்து 5. தயாராக இந்த இலைகளை கழுவி விட்டு சிறிய சிறிய துண்டுகளாக கையாலேயே கிழித்தோ அல்லது கத்தரிக்கோலால் வெட்டியோ வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு டம்ளர் அளவு குடிக்கும் நல்ல தண்ணீரை வைத்து, தயாராக வைத்திருக்கும் இலைகளை போட்டு 10 லிருந்து 15 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க வையுங்கள். இலையில் இருக்கும் அந்த சத்து, தண்ணீரில் இறங்கி இருக்கும். ஒரு டம்ளர் அளவு தண்ணீர், அரை டம்ளர் அளவு தண்ணீராக சுண்டி வந்த பிறகு அடுப்பை அணைத்துவிட்டு, இதை ஆற வைத்து வடிகட்டி ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைத்து கொள்ள வேண்டும். அவ்வளவு தான். நமக்கு தேவையான டோனர் தயார்.

இதை ஒரு நாள் விட்டு ஒரு நாள் உங்களுடைய தலையில் ஸ்பிரே செய்து வர வேண்டும். ஸ்ப்ரே செய்த பிறகு தலைக்கு குளிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. 7 நாட்கள் இந்த தண்ணீரை பிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். இந்த டோனரை தலையில் ஸ்கால்ப்பில் மயிர் கால்களில் படும்படி ஸ்ப்ரே செய்து விட்டு லேசாக மசாஜ் செய்துவிட்டு, அப்படியே ஃபேன் காற்றில் அமர்ந்து உலர வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

மூன்று வாரங்கள், ஒரு நாள் விட்டு ஒரு நாள் இந்த டோனரை பயன்படுத்தி பாருங்கள். உங்களுக்கே முடி வளர்ச்சியில் வித்தியாசம் நிச்சயமாக தெரியும். குழந்தைகள் பெரியவர்கள் யார் வேண்டுமென்றாலும் இந்த டோனரை பயன்படுத்தலாம். குழந்தைகள் என்றால் ஏழு வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு இந்த டோனரை பயன்படுத்தலாம். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் மிஸ் பண்ணாம உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

உங்களுக்கு தலையில் பேன் பொடுகு தொல்லை அதிகமாக இருந்தால் அதன் மூலம் முடி உதிர்வு அதிகரித்தால் வாரத்தில் ஒரு நாள் தலையில் வேப்பெண்ணெயை தேய்த்து 10 நிமிடம் வரை ஊற வைத்து அதன் பின்பு தலைக்கு குளித்தால் பொடுகுத்தொல்லை பேன் தொல்லை முற்றிலுமாக சீக்கிரத்தில் நீங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்