- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilநிரந்தர சிவப்பழகை பெற, இந்த ஹோம்மேட் குளியல் பொடி சிறந்த தீர்வை கொடுக்கிறது

நிரந்தர சிவப்பழகை பெற, இந்த ஹோம்மேட் குளியல் பொடி சிறந்த தீர்வை கொடுக்கிறது

- Advertisement -

அழகை விரும்பாத மனிதர்கள் என்று எவரும் இல்லை. எல்லோருக்கும் தான் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இதனால் ஒரு சிலர் ஆர்வமிகுதியில் கடைகளில் விற்க்கும் ரசாயனம் கலந்த க்ரீம்களை வாங்கி முகத்தில் பூசுகின்றனர். இதனால் முகம் பொலிவாகிறதோ, இல்லையோ சருமம் மட்டும் பல வித பாதிப்புகளுக்கு உள்ளாகிறது. இப்படி பலவித க்ரீம்களை பயன்படுத்தி தான் நாம் அழகாக வேண்டும் என்ற அவசியம் கிடையாது. நமது முன்னோர்கள் இயற்கையாக கிடைத்த மூலிகைகளை வைத்தே மிகவும் பொலிவுடன் இருந்தார்கள். அப்படி அவர்கள் பயன்படுத்திய மூலிகைகள் இன்றளவும் கிடைத்துக் கொண்டுதான் இருக்கின்றன. இவற்றை வைத்து நாமும் நமது வீட்டிலேயே இயற்கையான முறையில் இந்த குளியல் பொடியை தயார் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இதனை வைத்து தினமும் குளிக்கும் பொழுது உங்கள் முகம் முதல், பாதம் வரை அனைத்துமே கலராக மாறி சிவப்பழகுடனும், பொலிவுடனும் இருக்கும். வாருங்கள் இதனை எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
ஆவாரம் பூ – 150 கிராம், செம்பருத்தி பூ – 15, மரிக்கொழுந்து – 100 கிராம், பன்னீர் ரோஜா – அரை கிலோ, எலுமிச்சைத் தோல் – 150 கிராம், வெட்டிவேர் – 100 கிராம், கோரைக் கிழங்கு – 50 கிராம், வசம்பு – 5 கிராம், மகிழம்பூ – 100 கிராம், கார்போக அரிசி – 500 கிராம்.

- Advertisement -

குளியல் பவுடர் செய்முறை:
மகிழம்பூ, ஆவாரம்பூ, செம்பருத்திப்பூ, பன்னீர் ரோஜா, வெட்டிவேர், எலுமிச்சை பழத்தோல் இவை அனைத்தையும் தண்ணீரில் நன்றாக அலசி கொண்டு, ஒரு காட்டன் துணியில் வைத்து உலர வைக்க வேண்டும். இவை அனைத்துமே காயவைத்ததாக இருக்க வேண்டும். அப்படி இயற்கையாகவே கிடைக்கும் என்றால் இவற்றை பறித்து, காய வைத்து அதன் பிறகு பயன்படுத்த வேண்டும்.

கோரைக்கிழங்கு, பூலான்கிழங்கு, பச்சைப்பயிறு மற்றும் வசம்பு இவை அனைத்தையும் நன்றாக வெயிலில் வைத்து, காய வைக்க வேண்டும். இவை அனைத்தையும் நன்றாக காய வைத்தபிறகு ஒன்றாக சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு கடைக்குச் சென்று மெஷினில் இவற்றை பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

பெண்கள் மட்டும் இந்தக் குளியல் பவுடரை பயன்படுத்துவதாக இருந்தால், இவற்றுடன் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள் சேர்த்துக்கொள்ள வேண்டும். அல்லது ஆண்களும் பயன்படுத்துவதாக இருந்தால் மஞ்சள் சேர்த்து கொள்ள கூடாது. பின்னர் இவற்றை ஒரு காற்றுப் புகாத டப்பாவில் வைத்து கொள்ள வேண்டும், குளிக்கும் நேரத்தில் இதில் இருந்து இரண்டு ஸ்பூன் தூள் எடுத்து அவற்றை உடல் முழுவதும் தேய்த்துக் குளிக்க வேண்டும்.

இந்தக் குளியல் பவுடரை பயன்படுத்தி குளிக்கும்பொழுது உடம்பில் உள்ள சொரி, சிரங்கு, கரும்புள்ளிகள், முகப்பருக்கள் அனைத்தும் விரைவாக சரியாகிவிடுகிறது, ஆவாரம்பூ, பாசிப்பருப்பு இவை அனைத்தும் கருமை நிறத்தை அகற்றி, சிகப்பழகை கொடுக்கிறது. இவை அனைத்தும் உடலில் உள்ள வியர்வை நாற்றத்தை அகற்றுகிறது.

சற்று முன்