முகத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை சரி செய்ய இந்த உலகத்தில் இருக்கக்கூடிய பெஸ்ட் கிரீம் இது என்று கூட வைத்துக் கொள்ளுங்கள். மிக மிக சுலபமான முறையில் மூன்றே பொருட்களை வைத்து சீக்கிரமாக அழகாக மாற நம் கையாலேயே கலப்படம் இல்லாத கிரீம் எப்படி தயார் செய்வது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த கிரீமை தினம்தோறும் முகத்தில் போட்டு வர உங்களுடைய அழகு, மேலும் அழகாகி நீங்கள் பேரழகியாக மாறிவிடுவீர்கள். பெண்கள் ஆண்கள், ஏழு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் அனைவரும் இந்த கிரீமை தாராளமாக பயன்படுத்தலாம்.
இந்த கிரீம் தயார் செய்ய நமக்கு தேவையான பொருட்கள் மூன்று. வேக வைத்த மீடியம் சைஸில் இருக்கும் உருளைக்கிழங்கு – 1, கஸ்தூரி மஞ்சள் – 1/2 ஸ்பூன், லெமன் ஜூஸ் – 2 ஸ்பூன். சில பேருக்கு எலுமிச்சை பழச்சாறை நேரடியாக முகத்தில் போட்டால் எரிச்சல் இருக்கும். ஆனால் எலுமிச்ச பழச்சாறு உருளைக்கிழங்கோடு சேர்த்து முகத்தில் போடும்போது எந்த தொந்தரவும் வராது. உங்களுக்கு பயமாக இருந்தால் இந்த கிரீமை லேசாக பேட்ச் டெஸ்ட் எடுத்து விட்டு அதன் பின்பு முகத்தில் போட்டுக் கொள்ளுங்கள்.
வேகவைத்த உருளைக்கிழங்கை தோல் உரித்து மசித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வேக வைத்த உருளைக்கிழங்கு, கஸ்தூரி மஞ்சள் 1/2 ஸ்பூன், லெமன் ஜூஸ் 2 ஸ்பூன், உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரை ஊற்றி இதை நன்றாக மசிய ஜெல் போல அரைத்து ஒரு கண்ணாடி பாட்டிலில் ஸ்டோர் செய்து ஃப்ரிட்ஜில் வைத்தால் ஏழு நாட்கள் கெட்டுப் போகாது.
இந்த ஜெல்லை எப்போதும் வேண்டும் என்றாலும் முகத்தில் போடலாம். தயார் செய்த ஜெல்லை முகத்தில் லேசாக தடவி கழுத்து பகுதிகளிலும் தடவி, 2 நிமிடம் மசாஜ் செய்து, 10 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள். பிறகு குளிர்ந்த தண்ணீரில் முகம் கழுவி விட வேண்டும். தினமும் இதேபோல செய்து வர உங்கள் முகத்தில் வரக்கூடிய வித்தியாசத்தை நீங்களே பாருங்கள்.
கருவளையம் கரும்புள்ளி முகச்சுருக்கம் முகக் குழிகள் இவை அனைத்தும் நீங்குவதற்கு இது ஒரு சுலபமான வழி. இதற்காக கூடிய செலவு கூட பெரியதாக கிடையாது. கஸ்தூரி மஞ்சள் நாட்டு மருந்து கடைகளில் இருந்து வாங்கிக் கொள்ள வேண்டும். உங்களுக்கு லெமன் ஜூஸ் இரிடேஷனை கொடுப்பதாக இருந்தால் லெமன் ஜூஸை தவிர்த்து விடுங்கள். தவறு கிடையாது.
தேவைப்பட்டால் இந்த ஜெல்லை ஐஸ் கியூப் ட்ரேயில் ஊற்றி, ஐஸ் கட்டிகளாக மாற்றி அந்த ஐஸ் கட்டியை எடுத்து வாரத்தில் இரண்டு நாள் உங்களுடைய கண் கருவளத்தை சுற்றி மசாஜ் செய்தால் கண் கருவளையம் படிப்படியாக ஒரு சில நாட்களிலேயே குறைந்து விடும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயம் நீங்கள் பேரழகை பெறுவீர்கள்.