கண்ணுக்குத் தெரிந்த எதிரிகளை கூட சமாளித்து விடலாம். நாம் நன்றாகவே இருக்கக்கூடாது என்று ஏவல் பில்லி சூனியம் வைத்தால் கூட அது நமக்கு தெரியும். அதையும் நாம் சமாளித்து விடலாம். ஆனால் இந்த கண் திருஷ்டி இருக்கிறதே அது பொல்லாதது. சிரிக்கின்றவர்கள் மனதில் இருந்து மறைமுகமாக வெளிப்படக்கூடிய இந்த திருஷ்டி ஒரு குடும்பத்தை அழிக்கக்கூடிய வல்லமை கொண்டது. ஆக கண் திருஷ்டி தானே என்று யாரும் அஜாக்கிரதையாக இருந்து விடாதீர்கள். அது உங்களுடைய சந்தோஷத்தை நிலை குலைத்து விடும். ஆக வாரம் ஒரு முறையோ அல்லது மாதம் ஒரு முறையோ கட்டாயமாக குடும்பத்திற்கு கண் திருஷ்டி கழிக்கப்பட வேண்டும்.
எத்தனையோ வழிகளில் கண் திருஷ்டியை நம் பாட்டி நம்முடைய அம்மா எல்லாம் நமக்கு கழித்து இருப்பார்கள். உங்களுக்கு அதில் எது சௌகரியமாக இருக்கிறதோ அதை நீங்கள் கடைபிடிக்கலாம். கண் திருஷ்டியை கழிப்பதற்கு பச்சை கற்பூரத்தை வைத்து ஒரு சுலபமான பரிகாரத்தை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம்.
ஒரு துண்டு பச்சைக் கற்பூரம் இந்த பரிகாரம் செய்ய நமக்கு கட்டாயம் தேவை. ஒரு அடுப்புக்கரி துண்டும் நமக்கு தேவை. கெட்ட சக்தி, கண் திருஷ்டி இவைகளை விரட்டி அடிக்க கருப்பு நிற கறி துண்டு நமக்கு கை மேல் பலனை கொடுக்கும். அடுப்புக்கரி இப்போது கடைகளிலும் கிடைக்கின்றது. ஆன்லைனிலும் கிடைக்கின்றது. அதை வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள். சிறிய சிறிய துண்டுகளாகவே நமக்கு கிடைக்கின்றது.
ஒரு சிறிய தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கருப்பு கரி துண்டை வைத்துவிட்டு, அதன் மேலே பச்சை கற்பூரத்தை வைத்து ஏற்றி குறிப்பிட்ட நபரை கிழக்கு பார்த்தவாறு அமர வைத்து இந்த கற்பூரத்தை சுற்றி நிலை வாசலுக்கு வெளியே கொண்டு போய் போட்டு விட வேண்டும். கரி துண்டோடு சேர்த்து அப்படியே நிலை வாசலில் போட்டு விடுங்கள். நாம் வைத்த கரித்துண்டிலும் நெருப்பு பிடித்து நன்றாக எரிய தொடங்கி விடும். இப்படி திருஷ்டி கழித்தால் உங்களை உடம்பை பிடித்த கண்திருஷ்டி கெட்ட சக்தி அனைத்தும் உடம்பை விட்டு உடனே நீங்கிவிடும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த குறிப்பை பின்பற்றலாம். குறிப்பாக இந்த பச்சை கற்பூரத்தை கொண்டு போய் வெளியில் வைத்து அந்த கரி துண்டோடு வைத்து எரியும்போது கண் திருஷ்டி கழிக்கப்பட்ட நபர் இந்த நெருப்பை பார்க்கக் கூடாது. குழந்தைகளாக இருந்தால் இந்த நெருப்பை பார்க்க வருவார்கள் அல்லவா. அதை பார்க்க விடாமல் தவிர்த்து விடுங்கள்.
வீட்டில் இருக்கும் பெரியவர்கள் தான் இந்த கண் திருஷ்டியை அடுத்தவர்களுக்கு கழிப்பதற்கான பரிகாரத்தை செய்ய வேண்டும். வீட்டில் இருக்கும் பெண்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு கணவருக்கு திருஷ்டி கழித்து விடுவார்கள். பெண்கள் தங்களுக்கு தாங்களே திருஷ்டி கழித்துக் கொள்வதாக இருந்தால் என்ன செய்வது.
பெண்களும் தங்களுக்கு தாங்களே கற்பூரம் சுற்றி திருஷ்டி கழித்து முடித்துவிட்டு கற்பூரத்தை வீதியில் கொட்டிய பின்பு அந்த கற்பூரம் அணைந்து முடிவதற்குள் குளியலறைக்கு சென்று ஒரு சிறிய குளியலை போட்டு விடுங்கள். அவ்வளவு தான். உங்களை பிடித்து திருஷ்டி உங்கள் உடம்பை விட்டு நீங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.
அதாவது அடுத்தவர்களுக்கு திருஷ்டி சுற்றி போட்டால் நீங்கள் குளிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. உங்களுக்கு நீங்களே திருஷ்டி கழித்து அந்த கற்பூரத்தை வெளியே கொண்டு போய் கொட்டி விட்டு வரும்போது கட்டாயமாக குளிக்க வேண்டும். அப்போதுதான் உங்கள் உடம்பில் இருக்கும் நெகட்டிவ் எனர்ஜி உங்கள் உடம்பை விட்டுப் போகும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன பரிகாரத்தை செய்து பாருங்கள் வாரத்தில் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை இந்த பரிகாரத்தை செய்யலாம். அப்படி இல்லையென்றால் மாதம் ஒருமுறை அமாவாசை தினங்களிலும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.