- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்உடல் சோர்வை நீக்கி சுறுசுறுப்பை தரும் ஜவ்வரிசி கேசரியை, சுவையாக செய்வது எப்படி?

உடல் சோர்வை நீக்கி சுறுசுறுப்பை தரும் ஜவ்வரிசி கேசரியை, சுவையாக செய்வது எப்படி?

- Advertisement -

நம்முடைய பழங்காலம் தொட்டு நம் வீட்டின் அனைத்து நிகழ்வுகளிலும் இந்த ஜவ்வரிசி இல்லாத உணவுவே இருக்காது. அந்த அளவிற்கு நம் சமையலில் இதற்கென தனி இடம் உண்டு. நாம் எந்த விரதத்தை மேற் கொண்டாலும், விரத நாட்களில் சோர்ந்து போகாமல் இருப்பதற்காக ஜவ்வரிசி சேர்த்த பாயாசத்தை அருந்தலாம் என்பதை கேள்வி பட்டு இருப்பீர்கள். காரணம் ஜவ்வரிசி நம் உடலில் ஆற்றலை அதிகப்படுத்தும். அது மட்டும் இல்லாமல் இது எலும்புகளுக்கும் ஒரு நல்ல ஊட்டச்சத்து நிறைந்த உணவாகும். இவ்வளவு ஊட்டச்சத்து மிகுந்த இந்த ஜவ்வரிசியை நம் சமையலில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது உடலுக்கு மிகவும் நன்மையை தரும். இப்போது இந்த ஜவ்வரிசியை கொண்டு நாம் ஒரு சுவையான கேசரியை சூப்பரா செய்யலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:
ஜவ்வரிசி -1 கப் , சர்க்கரை -1 கப், ஏலக்காய் தூள் – 1/4 டீஸ்பூன், குங்குமப்பூ -1 சிட்டிகை, முந்திரி -10, உப்பு -1சிட்டிகை.

- Advertisement -

முதலில் ஜவ்வரிசி ஒரு கப் எடுத்து நன்றாக அலசிய பின் அதில் 1 கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து குறைந்தது ஒரு மணி நேரமாவது ஊற வைத்த பிறகு, தண்ணீரை நன்றாக வடித்து விட்டு ஜவ்வரிசியை எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்து ஒரு கப் சர்க்கரையை மிக்ஸி ஜாரில் சேர்த்து நல்ல பவுடராக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு பின்ச் அளவு குங்குமபூவை எடுத்து தண்ணீர் ஊற்றி ஊற வைத்து விடுங்கள். இப்படி செய்வதால் குங்குமபூவில் உள்ள நிறம் முழுவதும் இந்த நீரில் இறங்கி விடும்.

இப்போது அடுப்பைப் பற்ற வைத்து அதில் ஒரு பேனை வைத்து விடுங்கள். இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றி அதில் முந்திரியை போட்டு நன்கு சிவக்க வறுத்து தனியே எடுத்து வைத்து விடுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு அதே பேனில் கொஞ்சம் நெய் இருக்கும் அல்லவா அதில், ஊற வைத்து தண்ணீர் வடித்து வைத்துள்ள ஜவ்வரிசியை போட்டு நன்றாக கிளறி விடுங்கள். ஜவ்வரிசியில் உள்ள தண்ணீர் மொத்தமும் வற்றும் வரை இந்த ஜவ்வரிசியை கிளறிக் கொண்டே இருங்கள். அதன் பிறகு அரை கப் அளவு தண்ணீரை ஊற்றி ஜவ்வரிசியை 10 நிமிடங்கள் மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.

ஜவ்வரிசி வெந்து வந்தவுடன் அரைத்து வைத்துள்ள சர்க்கரை பவுடரை, கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிண்டிக்கொண்டே இருங்கள். சர்க்கரை முழுவதுமாக போட்டால் இந்த ஜவ்வரிசியில் அதன் பாகு முழுவதுமாக இறங்காது, எனவே இப்படி சர்க்கரையை அரைத்து சேர்த்தால் தான் இதன் சுவை கூடுதலாக இருக்கும். சர்க்கரையை சேர்க்கும் போதே மீதம் இருக்கும் நெய்யை இதில் சிறிது சிறிதாக சேர்த்துக் விடுங்கள்.

இத்துடன் ஏலக்காய் தூளையும் போட்டு, தண்ணீரில் கலந்து வைத்த குங்குமப்பூவையும் இதன் மேல் ஊற்றி, கிளறி இறக்கி விடுங்கள். கடைசியாக இறக்கும் போது கேசரி மீது முந்திரியை தூவி இறக்கி விடுங்கள். அவ்வளவு தான். சுவையான ஜவ்வரிசி கேசரி ரெடி.

சற்று முன்