- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilவெள்ளையாக மாவு படிந்து இருக்கும் நாக்கை சுலபமாக சுத்தம் செய்ய இந்த குறிப்பே போதும். இதை...

வெள்ளையாக மாவு படிந்து இருக்கும் நாக்கை சுலபமாக சுத்தம் செய்ய இந்த குறிப்பே போதும். இதை செய்தால் துர்நாற்றம் வீசும் உங்கள் வாய் கூட சீக்கிரம் சரியாகும்.

- Advertisement -

பொதுவாக நாம் நம் உடலின் வெளியே தெரியும் பாகங்களின் பிரச்சனையை தான் சரி செய்து கொள்கிறோம். வெளியே தெரியாமல் இருக்கும் பிரச்சனைகள் பற்றி நாம் கவலைபடுவதே இல்லை. அதில் ஒன்று தான் இந்த நாக்கு. நாக்கின் மீது படிந்து இருக்கும் வெண்மை நிறம். நாக்கில் இது போல வெண்மை நிறம் படிந்தால் நமது வாய் சுத்தமாக இல்லை என்று அர்த்தம். அது மட்டும் இல்லாமல் நோய் எதிரிப்பு தன்மையும் குறைவாக இருந்தால் தான் இப்படி நிறம் மாறும். நீங்கள் என்ன தான் உங்களை அழகு படுத்தி கொண்டாலும், மற்றவருடன் பேசும் போது இது போல இருந்தால் நன்றாகவாக இருக்கும். நாக்கு மிகவும் மென்மையான பகுதி. அது மட்டும் இல்லாமல் இதை நாம் சுத்தம் செய்ய பயன்படுத்தும் எந்த பொருளாக இருந்தாலும் அது நம் வயிற்றுக்குள் சென்று விடும். எனவே நாம் சற்று கவனமாக தான் இந்த பிரச்சினையை சரி செய்ய வேண்டும். அது எப்படி என்பதை தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

இதற்க்கு நம் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் சிறு சிறு பொருட்களை கொண்டு தான் சரி செய்ய போகிறோம். இதனால் உடலுக்கு எந்த வித கெடுதலும் இல்லை. நாக்கு வழிப்பதற்கென்றே டங்க் கிளீனர் உண்டு. அதை கொண்டு சுத்தம் செய்தும் பலன் இல்லாத சமயத்தில் இதில் எதாவது ஒன்றை முயற்சித்து பாருங்கள்.

- Advertisement -

உங்கள் நாக்கின் மீது சிறிதளவு தயிர் எடுத்து தடவி விட்டு, இரண்டு நிமிடம் கழித்து விரல்களாலே நாக்கின் மெது லேசாக தேய்த்து விட்டு வாய் கொப்பளித்து விடுங்கள். இதே போல கற்றாழை சாறு கொண்டும் செய்யலாம்.

மஞ்சள் ஒரு ஸ்பூன், லெமன் ஜூஸ் அரை ஸ்பூன், இரண்டையும் ஒன்றாக கலந்து ஒரு பேஸ்ட் போல செய்து இதையும் உங்கள் நாக்கில் மேல் தடவி, விரல் அல்லது பிரஷ் கொண்டு ஒரு நிமிடம் தேய்த்தால் போதும். நான்கு பூண்டு எடுத்து அரைத்து அதன் சாறை நாக்கின் மீது தடவி பிரஷ் கொண்டு சிறிது நேரம் தேய்த்தாலும் இந்த வெண்மை நிறம் மாறி விடும்.

- Advertisement -

வெதுவெதுப்பான சுடுதண்ணீரில் கல்லுப்பை சேர்த்து ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை வாய் கொப்பளித்தாலும் இது சரியாகும். ஆயில் புல்லிங் இதற்கு ஒரு நல்ல தீர்வு சுத்தமான தேங்காய் எண்ணெய் எடுத்து அதையும் ஒரு நாளைக்கு இரண்டு முறை இது போல் ஆயில் புல்லிங் செய்யும் போது உங்கள் வாயில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சுத்தமாவதுடன் நாக்கில் படிந்துள்ள வெண்மையும் போய் விடும்.

மேலே சொன்ன குறிப்புகளில் நீங்கள் எதை செய்வதாக இருந்தாலும் அதை செய்த பின் கட்டாயமாக வாய் கொப்பளிக்க வேண்டும். இந்த குறிப்புகள் அனைத்தும் நல்ல பலன் தரக்கூடியவை. முயற்சி செய்து பாருங்கள்.

சற்று முன்