பூக்கள் என்றாலே பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். பெண்கள் என்ன தான் தன்னை அழகு படுத்தி கொண்டாலும், பூ வைத்த பிறகே அவர்களின் அழகு முழுமை பெரும். தலைக்கு மட்டும் அல்ல, பூஜைக்கும் அப்படி தான், பூ இல்லாமல் பூஜை பூர்த்தியாகாது. இன்றைக்கு பெண்களும் வேலைக்கு செல்வதால், தினம் தினம் பூ வாங்கி கட்டிக்கொண்டு இருக்க முடியாது அல்லவா, வாரத்தில் ஒரு நாள் இல்லை சற்று ஓய்வாக இருக்கும் நாட்களில் பூ வாங்கி கட்டி எடுத்து வைத்து விட்டால், தினமும் பூஜைக்கும், தலைக்கும் உபயோகிக்க படுத்திக் கொள்ளலாம். ஆனால் பூக்களை அவ்வளவு நாட்கள் வரை உதிராமல் வைத்திருக்க முடியுமா? ஏன் முடியாது. இரண்டு வாரம் வரை பூக்களை வாடாமல் வைத்திருக்க முடியும் என்றால் நம்ப முடியவில்லையா? இந்த பதிவை தொடர்ந்து படிங்க உங்களுக்கே தெரியும்.
இரண்டு வாரம் வரை வாடாமல் பூவை, வைக்க நினைத்தால், முதலில் அதற்கு தகுந்த போல் பூ வாங்க வேண்டும். நீங்கள் மாலை நேரத்தில் சென்று பூ வாங்கினால் அது நன்றாக மலர்ந்திருக்கும், அந்தப் பூக்களை நீங்கள் கட்டி வைத்தால் நிச்சயமாக அடுத்த நாளே வாடி விடும்.
பூக்களை முடிந்த அளவுக்கு காலையிலே வாங்கி விடுங்கள். காலை ஒரு பத்து மணிக்கு பிறகு நல்ல புதிதாக பூத்த பூக்கள் எல்லாம் கிடைக்க தொடங்கிவிடும். பூ நல்ல மொட்டாக இருக்கும் போதே வாங்கி விடுங்கள். பூக்களை வாங்கி வந்த பிறகு பூவை கொடுத்திருக்கும் கவரில் இருந்து எடுத்து, ஒரு பேப்பரில் கொட்டி பத்து நிமிடம் ஆறவிடுங்கள்.
இது வீட்டு நிழலில் தான் ஆற வைக்க வேண்டும். பேன் காற்றில் ஆற வைக்க கூடாது. பேன் காற்றில் ஆற வைத்தால் பூ கறுத்து போய் விடும். ஆற வைத்த பூக்களை மொட்டாக இருக்கும் போதே கட்டி விடுங்கள், பூக்களை கட்டும் போதும் கவனமாக கட்ட வேண்டும். சிலர் பூவை கட்டுகிறேன் என்கிற பேரில் அந்த பூக்களை கசக்கி, காம்புகளை உடைத்து விடுவார்கள். அப்படி எல்லாம் செய்யாமல் அழகாக பூக்களை, பூ போல் எடுத்து கட்ட வேண்டும்.
இதையும் படிக்கலாமே: தலை முடியில் வெடிப்பு ஏற்படுகிறதா? முடியை பாதுகாக்க இதோ சுலபமான டிப்ஸ்.
கொஞ்சம் பெரிய சில்வர் டப்பா எடுத்துக் கொள்ளுங்கள். அதின் அடியில் ஒரு பேப்பரை போட்டு, கட்டிய பூக்களை அதில் வையுங்கள், பூக்களுக்கு இடையிடையில் சிறு, சிறு துண்டு பேப்பர் களை வைத்து விடுங்கள். அதாவது பூக்களை சுற்றும் போது, ஓவ்வொரு அடுக்கிற்கும் இடையில் பேப்பர் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். பிறகு பூக்களுக்கு மேலே ஒரு டிஷ்யூ பேப்பரை வைத்து விட்டு, டப்பாவை மூடி பிரிட்ஜில் ஸ்டோர் செய்து விடுங்கள்.
இதே போல் வாழை இலையும் சுற்றி வைக்கலாம் அல்லது மெலிதான காட்டன் துணிகளையும் சுற்றி வைக்கலாம். இனி நீங்க எப்ப பூ வாங்கினாலும் இப்படி வைங்க இரண்டு வாரம் ஆனாலும் பூ வாடாமல் இருக்கும்.