- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilஅரிசி கழுவிய தண்ணீரில் இந்த 1 பொருளை சேர்த்து முடியை அலசினால், முடி காடு போல...

அரிசி கழுவிய தண்ணீரில் இந்த 1 பொருளை சேர்த்து முடியை அலசினால், முடி காடு போல வளரும்.

- Advertisement -

நிறைய பேருக்கு தலை முடி வளர ஹேர் பேக் போட நேரம் இருப்பதில்லை. தலை முடியை பராமரிக்கவும் நேரம் இருப்பது கிடையாது. இப்படிப்பட்டவர்களுக்காக ஒரு சுலபமான குறிப்பு. நீங்க ஹேர் பேக் போடுபவர்களாக இருந்தாலும் இந்த குறிப்பு முயற்சி செய்து பார்க்கலாம். அதில் ஒன்றும் தவறு கிடையாது. மிக மிக சுலபமான முறையில் செலவே இல்லாமல் முடி வளர்ச்சியை அதிகரிக்கும் குறிப்பு இது. உங்களுக்கு பிடிச்சிருந்தா மட்டும் ட்ரை பண்ணி பாருங்க.

இந்தக் குறிப்புக்கு அரசி கழுவிய தண்ணீர், செம்பருத்தி பூ, அலோவேரா ஜெல், இந்த 3 பொருட்கள் இருந்தால் போதும். அரிசி கலைந்த தண்ணீரை ஒரு நாள் புளிக்க வைத்துக் கொள்ளுங்கள். (இன்னைக்கு அரசியல் தண்ணீர் ஊற்றி, கழுவி ஒரு பாத்திரத்தில் ஊற்றி மூடி போட்டு வைத்திடுங்கள். நாளைக்கு அந்த தண்ணீர் புளித்து கிடைக்கும்.) ஒரு மிக்ஸி ஜாரில் ஆலோவிராஜெல் 2 ஸ்பூன் மற்றும் செம்பருத்திப் பூ 6-7, போட்டு அரைத்து, வடிகட்டி அதனுடைய சாறை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் விருப்பம் போல ஏழிலிருந்து பத்து செம்பருத்தி பூ கூட போட்டுக் கொள்ளலாம். சிவப்பு ஒற்றை நாட்டு செம்பருத்தி பூவை குறிப்புக்கு பயன்படுத்துவது மிகவும் சிறப்பு.

- Advertisement -

ஒரு பெரிய கிண்ணத்தில் புளித்த அரிசி கலைந்த தண்ணீரை ஊற்றி, வடிகட்டி எடுத்து வைத்திருக்கும் இந்த செம்பருத்தி பூ, அலோவேரா ஜெல் சாறையும் ஊற்றி, நன்றாக ஒரு கரண்டியை வைத்து கலக்கினால் ஜெல் போல தண்ணீர் உங்களுக்கு கிடைத்திருக்கும். அந்த தண்ணீரை தலையில் ஊற்றி அலச வேண்டும். உங்களுடைய அழுக்கு இல்லாத தலையை நல்ல தண்ணீரி ஊற்றி நனைத்துக் கொள்ளுங்கள்.

ஈரமாக இருக்கும் முடியில் நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் இந்த தண்ணீரை ஊற்றி அப்படியே மசாஜ் செய்து தலையை கசக்குவது போல நன்றாக கசக்கி விடுங்கள். முடியின் நுனி பாகம் வரை இந்த தண்ணீரை ஊற்றுங்கள். அப்படியே கொண்டை கட்டிக் கொள்ளுங்கள். உடம்பு முழுவதும் சோப்பு போட்டு தேய்த்து குளிக்கும் அந்த பத்து நிமிடங்கள் உங்களுடைய தலையில் இந்த தண்ணீர் இருந்தால் போதும். அதன் பின்பு நல்ல தண்ணீரை ஊற்றி முடியை அலசி விடுங்கள். ஷாம்பு போட வேண்டாம்.

- Advertisement -

பிறகு பாருங்கள் உங்களுடைய முடிவில் இருக்கக்கூடிய வித்தியாசத்தை. முடி பார்ப்பதற்கு பளபளப்பாக இருக்கும். சிக்கு இல்லாமல் இருக்கும். முடியில் வறட்சித் தன்மை இருக்காது. முடி உதிர்வது நன்றாக குறைந்துவிடும். அது மட்டும் இல்லாமல் வாரத்தில் இரண்டு நாள் இந்த தண்ணீரை ஊற்றி தலையை அலச உங்களுடைய முடி காடு போல வளரத் தொடங்கும். பிடித்திருந்தால் ட்ரை பண்ணி பாருங்க.

பின்குறிப்பு: உங்களுக்கு ஆலுவேரா ஜெல் இயற்கையாக கிடைத்தால், அதாவது கற்றாழையிலிருந்து எடுத்த ஜெல்லையும் இந்த குறிப்புக்கு பயன்படுத்தலாம். அப்படி இல்லை என்றால் கலர் சேர்க்காத அலோவேரா ஜெல்லை கடையில் இருந்து வாங்கி பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

சற்று முன்