- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்இப்படி பிரிட்ஜில் வைத்து அரைச்சு உளுந்து வடை செஞ்சி இருக்கீங்களா? செஞ்சதில்லைனா இப்போ செஞ்சு பார்த்துடுங்க....

இப்படி பிரிட்ஜில் வைத்து அரைச்சு உளுந்து வடை செஞ்சி இருக்கீங்களா? செஞ்சதில்லைனா இப்போ செஞ்சு பார்த்துடுங்க. சமைக்க தெரியாதவங்க கூட சுலபமா செய்யலாம்.

- Advertisement -

வடை செய்வது ஒன்றும் பெரிய கஷ்டமான காரியம் கிடையாது. இப்படி தானே எல்லோருக்கும் தோன்றும் ஆனால் எந்த ஒரு சாதாரண உணவாக இருந்தாலும் கூட அதை செய்யக்கூடிய விதத்தில் அதன் பக்குவம் மாறாமல் செய்தால் அந்த பொருளுக்கான ருசியே தனி தான். அந்த வகையில் தான் இந்த வடையும் உளுந்தை சரியான நேரத்திற்கு ஊற வைத்து, அதை சரியான பக்குவத்தில் அரைத்து பதமாக சுட்டு எடுக்கும் போது தான் அந்த உளுந்த வடை அருமையாக இருக்கும் இல்லை என்றால் உளுந்த வடை தட்டை வடை போன்று தான் இருக்கும். இந்த பதிவில் ஒரு அருமையான உளுந்த வடையை புதிதாக சமையல் பழகுபவர்கள் கூட செய்யும் விதத்தில் எவ்வளவு எளிமையாக செய்யலாம் என்பதை சொல்லும் ஒரு பதிவு தான் இது.

தேவையான பொருட்கள்: உளுந்து – 1 கப், பச்சரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன், வெங்காயம் -1 பொடியாக நறுக்கியது, பச்சை மிளகாய் – 2 பொடியாக நறுக்கியது, இஞ்சி – ஒரு துண்டு பொடியாக நறுக்கியது, எண்ணெய் – 200 கிராம், உப்பு – 1/2 ஸ்பூன், கருவேப்பிலை, கொத்தமல்லி -1 கைப்பிடி.

- Advertisement -

உளுந்தை இரண்டு மணி தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து ஊற வைத்துக் கொள்ளுங்கள். இதை அப்படியே எடுத்து கழுவி தண்ணீர் வடித்து, மிக்ஸி ஜாரில் சேர்த்து பிறகு கொஞ்சம் லேசாக குளிர்ந்த நீர் தெளித்து மாவை நல்ல வெண்ணை பதத்துக்கு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி, அனைத்தையும் சேர்த்து உப்பையும் சேர்த்த பிறகு அரிசி மாவு கலந்து நன்றாக மாவை அடிக்க வேண்டும். இது மிகவும் முக்கியம் ஏனென்றால் இப்படி நீங்கள் மாவை நன்றாக அடித்து வைக்கும் போது தான் மாவு நன்றாக உப்பி வரும். இதை அப்படியே ஒரு பத்து நிமிடம் வரை வைத்து விடுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு அடுப்பை பற்ற வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அடுப்பை மிதமான சூட்டுல் வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு நன்றாக பழகத் தெரிந்தவர்கள் ஒரு கையில் மாவை எடுத்து வடையை எப்போதும் போல போட்டு விடுங்கள். புதிதாக பழகுவார்கள் ஒரு ஜெல்லி கரண்டி அல்லது டீ வடிகட்டி, சில்வர் கரண்டி இரண்டில் எது இருந்தாலும் எடுத்து அதன் மீது இந்த மாவை வைத்து ஒட்டை போட்ட பிறகு அந்த கரண்டியை கொண்டு அப்படியே அடுப்பில் கவுத்து விட்டால் மாவு எண்ணெயில் விழ்ந்து விடும்.

இதில் முக்கியமான குறிப்பு கையில் மாவு எடுக்கும் போதும், உங்கள் கையில் தண்ணீர் தொட்டுக் கொள்ள வேண்டும் கரண்டியோ, வடிகட்டியோ அதிலும் ஈரம் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் மாவு ஒட்டாமல் வரும்.

- Advertisement -

அவ்வளவு தான் சுலபமாக உளுந்த வடை சூப்பராக தயார் செய்து விட்டோம். முன்பெல்லாம் இந்த வடை செய்ய வேண்டும் என்றால் மாவை ஊற வைத்து கிரைண்டரில் அரைத்து இதற்கு சமையல் சோடா போன்றவைகள் எல்லாம் சேர்த்த பிறகு வடை செய்வதை ஒரு பெரிய வேலையாக நினைத்து கொண்டு இருந்தோம்.

இதையும் படிக்கலாமே: பெண்களுக்கு இருக்கும் மாதவிடாய் பிரச்சினையை சரி செய்ய, உடல் எடையை குறைக்க வாரம் ஒரு முறை இந்த பாயாசத்தை குடிங்க போதும்.

ஆனால் இந்த முறையில் ஊற வைக்கும் நேரம் மட்டுமே இதில் அதிகம் மற்றபடி 10 நிமிடத்தில் சூப்பராக வடை சுட்டு எடுத்து விடலாம் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்