- Advertisement -
Homeவீட்டு குறிப்புகள்மழைக்கால ஈரவாடை போக இப்படியெல்லாம் கூடவா செய்வாங்க. எங்கிருந்து தான் இப்படி எல்லாம் யோசிக்கிறார்களோ என்று...

மழைக்கால ஈரவாடை போக இப்படியெல்லாம் கூடவா செய்வாங்க. எங்கிருந்து தான் இப்படி எல்லாம் யோசிக்கிறார்களோ என்று நினைக்கும் வகையில் செம்ம ஐடியா இருக்குங்க. இதை படிச்ச பிறகு நீங்க அப்படியே ஷாக் ஆயிடுவீங்க

- Advertisement -

மழைக்காலம் வந்து விட்டாலே இல்லத்தரசிகளுக்கு பெரும் பாடு தான். துணி துவைக்க முடியாது,வீடு துடைக்க முடியாது, போட்ட பொருட்களை எடுத்து ஒதுங்க வைக்க முடியாது, கஷ்டப்பட்டு துவைத்து மடித்து வைத்தாலும் ஈரவாடை அடித்து வீடு முழுவதும் நாற்றம் அடிக்கும். இப்படி மழைக்கால அவஸ்தைகளை சொல்லிக் கொண்டே போகலாம். மழை என்பது அழகான ஒரு விஷயம் ரசித்து மகிழக் கூடியது ஆனால் அது ஒரு குறிப்பிட்ட காலம் தான். வீட்டு பயன்பாட்டை பொருத்த வரையில் மழைக் காலங்களில் வீடு பராமரிப்பதும், துணிகளை பராமரிப்பதும், மிகவும் சிரமமான ஒரு காரியம் தான். இந்த மழைக்கால ஈரவாடையில் இருந்து தப்பிக்க சில குறிப்புகளை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

மழைக் காலங்களில் ஜீன்ஸ், பெட்ஷீட் போன்றவைகளை துவைத்து காய வைத்தாலும் கூட ஈர வாடை வந்து கொண்டே இருக்கும். அதற்கு துவைத்து காயவைத்த துணியை நல்ல ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு பேக் செய்த பிறகு பிரீசரில்கொஞ்ச நேரம் வைத்தால் கெட்ட வாடையை உருவாக்கும் பாக்டீரியாக்கள் இறந்து விடும். துணியில் உள்ள ஈர வாடையும் நீங்கி விடும். இந்த குறிப்பை படிக்கும் போது துணியை ஃப்ரீசரில் வைப்பாத என்ற கேள்வியும் எழும். ஆனால் இது உண்மையில் நல்ல பலன் தர கூடிய குறிப்பு தான்.

- Advertisement -

அதே போல் துணிகள் மடித்து வைத்த பிறகு பீரோவிலும் இதைப் போல ஈர வாடை அடித்துக் கொண்டே இருக்கும். அதற்கு வேப்பிலையை நன்றாக காய வைத்து அந்த காய்ந்த வேப்ப இலையை துணிகளுக்கிடையில் போட்டு வைத்தால், உங்களுக்கு அந்த ஈர வாடை வராது. அது மட்டுமின்றி துணிகளில் இந்த மழைக் காலங்களில் வரும் சிறு கொசுக்கள்,பூச்சிகளும் கூட வராது.

இந்த காய்ந்த இலை போட்டு வைக்கும் டிப்ஸ் நாம் அரிசி, பருப்பு போட்டு வைத்திருக்கும் பாத்திரத்தில் கூட போடலாம். ஆனால் காய்ந்த வேப்பிலை தான் போட வேண்டும்.

- Advertisement -

வீட்டில் சமையலறையில் மழைக்காலங்களில் இந்த ஈர வாடை சற்று அதிகமாகவே இருக்கும். ஏனென்றால் அங்கு நாம் பாத்திரங்கள் தேய்ப்பது, சமைப்பது, காய்கறிகள் நறுக்குவது போன்ற அதிக வேலைகள் அங்கு நடந்து கொண்ட இருக்கும். எனவே இங்கு இந்த வாடை கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். அதற்கு ஒரு கேண்டில் இப்போது சின்ன மூடியில் எறிவதுபோல கேண்டில் வருகிறதல்லவா அந்த கேண்டில் எடுத்துக் கொள்ளுங்கள். அதை பற்ற வைத்த பிறகு அதை சுற்றிலும் கொஞ்சம் கற்பூரம் நுணுக்கி போட்டு விட்டு அதை ஏற்றி வைத்தால் வாடை நீங்கி கற்பூரவாடை நன்றாக வீசத் தொடங்கும். அது மட்டும் இன்றி மழைக்காலங்களில் வரும் இந்த குட்டி குட்டி கொசுக்கள் கூட இந்த வாடைக்கு வராது. இதையே அகல் விளக்கு ஏற்றி வைத்தும் இது போல செய்யலாம். ஆனால் அகல் விளக்கை எல்லோரும் ஏற்றுவார்களாக என தெரியாது அகல் விளக்கை ஏற்ற முடியாதவர்கள் கேண்டில் பயன்படுத்தலாம்.

அதே போல் இந்த மழைக்காலத்தில் வீட்டிலேயே கூட ஒரு வித ஈர வாடை வீசிக் கொண்டே இருக்கும். அதற்கு நீங்கள் லிக்விட் பயன்படுத்தி தேய்ப்பதை காட்டிலும், அந்த தண்ணீரிலும் கொஞ்சம் கற்பூரம் சேர்த்து துடைக்கும் போது வாசமும் நன்றாக இருக்கும். இந்த பூச்சி கொசுக்களும் வராமல் வீடு சுத்தமாகவும் நறுமணத்துடன் இருக்கும்.

இந்த மழைக் காலத்தில் வீசும் வாடைகளிலிருந்து உங்கள் துணிகளையும் வீட்டையும் காக்க இந்த குறிப்புகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நீங்களும் பயன்படுத்தி பலன் அடையுங்கள்.

சற்று முன்