- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்ரோட்டு கடை சாம்பார், குருமா எல்லாம் கேள்வி பட்டு இருப்பிங்க. ஆனா இந்த ரோட்டு கடை...

ரோட்டு கடை சாம்பார், குருமா எல்லாம் கேள்வி பட்டு இருப்பிங்க. ஆனா இந்த ரோட்டு கடை வேர்க்கடலை சட்னி செய்ற விதம் தெரியுமா? தெரிஞ்சுக்கிட்டா அடுத்த நிமிசமே உங்க வீட்ல இந்த சட்னி செய்ய தயாராகிடுவீங்க. ஏன்னா இந்த சட்னி அரைக்கிறது அவ்வளவு ஈஸி.

- Advertisement -

என்ன தான் நம்ம வகை வகையா வீட்டுல செஞ்சு சாப்பிட்டாலும், பெரிய ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சுக்கு வாங்கி சாப்பிட்டாலும், இந்த சின்ன சின்ன தள்ளுவண்டி, ரோட்டு கடைகளில் கிடைக்கிற அந்த சாப்பாட்டோட டேஸ்ட் நமக்கு வீட்டிலும் வராது, பெரிய ரெஸ்டாரண்ட்ஸையும் கிடைக்காது. அப்படி என்ன தான் போட்டு செய்வாங்க தெரியாது. சாதாரணமா எதையோ ஒன்னு போட்டு வைக்கிற மாதிரி இருக்கும். ஆனா அது அவ்வளவு ருசியா இருக்கும். அதே நேரத்துல அதனால நம்ம உடம்புக்கு பெரிய அளவுல ஒரு கெடுதலும் இருக்காது. அப்படி ரோட்டு கடைகளில் கிடைக்கிற ஒரு அருமையான வேர்க்கடலை சட்னி ரெசிபியை தான் இப்ப நாம இந்த பதிவுல தெரிஞ்சுக்க போறோம்.

தேவையான பொருட்கள்: வறுத்த வேர்க்கடலை – 50 கிராம், பூண்டு -7 பல் , வெங்காயம் – 4, தக்காளி – 4, பச்சை மிளகாய் – 8, சீரகம் -1 டீஸ்பூன், புளி -சிறிய அளவு, இஞ்சி -1 துண்டு, உப்பு – 1/4 டீஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, கடுகு-1/2 டீஸ்பூன், கறிவேப்பிலை – 1 கொத்து.

- Advertisement -

இதற்கு முதலில் அடுப்பை பற்ற வைத்து ஒரு பேனை வைத்துக் கொள்ளுங்கள். அதில் வறுத்த வேர்க்கடலை, பூண்டு இரண்டையும் சேர்த்து கொள்ளுங்கள். அதன் பிறகு அதில் வெங்காயம், தக்காளி இரண்டையும் நல்ல நீள வாக்கில் அறிந்து வதங்கி கொண்டு இருக்கும் வேர்க்கடலையில் போட்டு வதக்குங்கள். இத்துடன் பச்சை மிளகாயும் சேர்த்து வதக்குங்கள். (உங்களுக்கு காரம் அதிகம் தேவை என்றால் இன்னும் இரண்டு பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளுங்கள் இல்லை காரம் அதிகம் வேண்டாம் என்றால் குறைத்துக் கொள்ளுங்கள்).

இப்போது இதை யெல்லாம் சேர்த்தவுடன் வெங்காயம், தக்காளி இருந்து தண்ணீர் வடிந்து இருக்கும் அத்துடன் கொஞ்சமாக ஒரு கால் டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு இந்த வெங்காயம் தக்காளி வேர்க்கடலை இவையெல்லாம் வேக விடுங்கள் . ஐந்து நிமிடம் வெந்த பிறகு நறுக்கி வைத்து இஞ்சி துண்டை அதில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு சீரகம், வு புளி அனைத்தையும் சேர்த்து மீண்டும் ஒரு ஐந்து நிமிடம் வேக வைத்து அடுப்பை அணைத்து விடுங்கள் இவையெல்லாம் அப்படியே ஆறட்டும்.

- Advertisement -

ஆறிய பிறகு இதையெல்லாம் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நல்ல பைன் பேஸ்ட் ஆக உப்பு சேர்த்து அரைத்து இதை ஒரு பவுலில் மாற்றி வைத்து கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு சின்ன தாளிப்பு கரண்டியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானவுடன் கடுகு, கருவேப்பிலை போட்டு தாளித்து இதில் ஊற்றிக் கொள்ளுங்கள். தாளிக்காமலும் இந்த சட்னியை சாப்பிடலாம். ஆனால் இந்த தாளிப்பு சேர்க்கும் போது இதன் சுவை இன்னும் கொஞ்சம் கூடுதலாக நன்றாகவே இருக்கும்.

இந்த ரோட்டு கடை சட்னியை கெட்டியாக வைத்து சாப்பிடுவதாக இருந்தாலும் சரி, தண்ணியாக கலந்து கொண்டாலும் சரி, எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம். இந்த சட்னியில் வேர்க்கடலை, சீரகம், இஞ்சி, பூண்டு எல்லாம் சேர்த்து வேக வைத்து அரைத்து இருப்பதால் உடலுக்கும் இந்த சட்னி மிகவும் நல்லது. அதே நேரத்தில் சுவையும் நாம் ரோட்டு கடையில் கிடைக்கும் அந்த சுவையில் பிரமாதமாக இருக்கும். நீங்களும் ஒரு முறை இந்த சட்னி ரெசிபியை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்.

சற்று முன்