- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்ஆந்திரா ஸ்டைலில் புடலங்காய் வைத்து, நச்சுன்னு ஒரு பச்சடி ரெசிபி இதோ உங்களுக்காக. ஐந்து நிமிடத்தில்...

ஆந்திரா ஸ்டைலில் புடலங்காய் வைத்து, நச்சுன்னு ஒரு பச்சடி ரெசிபி இதோ உங்களுக்காக. ஐந்து நிமிடத்தில் டக்குனு செய்யக்கூடிய ஆரோக்கியம் தரும் பச்சடி இது.

- Advertisement -

புடலங்காயை வைத்து கூட்டு செய்வோம். பொரியல் செய்வோம். மிஞ்சு மிஞ்சி போனால் சில பேர் வீடுகளில் குழம்பு வைப்பார்கள். ஆனால் இந்த புடலங்காயில் சுவையான ஆரோக்கியம் தரக்கூடிய தயிர் பச்சடியும் செய்யலாம். ஆந்திரா ஸ்டைலில் சூப்பரான புடலங்காய் பச்சடி எப்படி செய்வது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் பார்க்க போகின்றோம். இதை சப்பாத்திக்கு தொட்டு சாப்பிடலாம். அப்படி இல்லை என்றால் சாம்பார் சாதம், ரசம் சாதம், காரக்குழம்பு சாதத்திற்கும் சைடிஷ் ஆக வைத்து சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும். வாங்க இந்த இன்ட்ரஸ்டிங்கான ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோம்.

இந்த ரெசிபிக்கு மீடியம் சைஸில் இருக்கும் இலசான புடலங்காயை எடுத்து தோல் சீவி ஓரளவுக்கு சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும். ஓரளவுக்கு புளித்த தயிர் 1 கப் தேவை. ரொம்பவும் கட்டியாகவும் இல்லாமல், ரொம்பவும் தண்ணியாகவும் இல்லாமல் தயிரை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதுவும் அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

ஒரு மிக்ஸி ஜார் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பச்சை மிளகாய் – 5, இஞ்சி – 1 பெரிய துண்டு, தோல் சீவி போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். அதாவது உரலில் இடித்தது போல இருக்க வேண்டும். இதை தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல அரைக்க கூடாது.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அதில் வெந்தயம் 1/4 ஸ்பூன், கடுகு 1 ஸ்பூன், கடலைப்பருப்பு 1 ஸ்பூன், உளுந்தம் பருப்பு 1 ஸ்பூன், வரமிளகாய் 2 கிள்ளி போட்டு, கருவேப்பிலை ஒரு கொத்து போட்டு, பொன்னிறமாக வறுத்து விடுங்கள். அதன் பின்பு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் புடலங்காயை போட்டு இந்த எண்ணெயிலேயே வதக்குங்கள். புடலங்காய் சீக்கிரம் வெந்துவிடும் தண்ணீர் எல்லாம் தெளிக்க தேவை கிடையாது.

- Advertisement -

இதோடு மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் பச்சை மிளகாய் இஞ்சி விழுது, போட்டு வதக்கி மூடி போட்டு இரண்டிலிருந்து மூன்று நிமிடங்கள் வேகவைத்து விடுங்கள். காய் வெந்து வெந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு, கடாயில் இருந்து இந்த புடலங்காய்களை வேறொரு கிண்ணத்திற்கு மாற்றிக்கொள்ளுங்கள்.

இப்போது இந்த வெந்திருக்கும் புடலங்காயில் தயாராக எடுத்து வைத்திருக்கும் தயிரை ஊற்றிக் கொள்ளுங்கள். ஒரு கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். தயிர் ஊற்றி இருப்பதால் உப்பு ஒரு முறை சரி பார்த்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் உப்பு போட்டு தயிர், புடலங்காய் எல்லாவற்றையும் நன்றாக கலந்தால், சூப்பரான புடலங்காய் தயிர் பச்சடி தயாராகி இருக்கும். இது உடம்புக்கு அவ்வளவு ஆரோக்கியம். டேஸ்ட் சூப்பரா இருக்குங்க. ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்