- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilகால காலத்துக்கும் முடி கருப்பாகவே இருக்க, இதை மட்டும் தலையில் போட்டு, தலைக்கு குளிங்க போதும்....

கால காலத்துக்கும் முடி கருப்பாகவே இருக்க, இதை மட்டும் தலையில் போட்டு, தலைக்கு குளிங்க போதும். தாத்தா பாட்டி ஆனாலும் ஒரு வெள்ளை முடி கூட எட்டி பாக்காது.

- Advertisement -

காலாகாலத்திற்கும் உங்கள் முடி கருகருன்னு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் வளர வேண்டும் என்றால் இந்த குறிப்பை பின்பற்றலாம். ஆனால் தாத்தா பாட்டி ஆகும்போது வெள்ளை முடி எட்டிப் பார்த்தால் தானே அழகு. 40 வயதை கடக்கும்போது வெள்ளை முடி இல்லாமல் இருந்தால் சரிதான். இந்த குறிப்பை பின்பற்றுவதற்கு நீங்கள் தோட்டம் தோட்டமாக சென்று இலை பூ கற்றாழை இவைகளை பறிக்க வேண்டும் என்ற அவசியம் எல்லாம் கிடையாது. இந்த பொருட்கள் எல்லாம் பொடியாகவே நாட்டு மருந்து கடைகளிலும், ஆன்லைனிலும் கிடைக்கின்றது. அதை வாங்கி வைத்துக் கொண்டாலே நொடிப்பொழுதில் உங்களுடைய தலைமுடியை வளர்க்க பேக் தயார் செய்துவிடலாம்.

இந்த ஹேர் பேக்கை தலையில் போட்டு ஒரு மணி நேரம் கழித்து தலைக்கு குளித்து விட்டால், தலைக்கு தேவையான போஷாக்கு அனைத்தும் முழுமையாக கிடைத்துவிடும். அந்த பேக்கை தயார் செய்ய என்னென்ன பொடியை பயன்படுத்துவது செம்பருத்தி பூ பொடி – 1 ஸ்பூன், ஆலுவேரா பொடி – 1 ஸ்பூன், சீயக்காய் தூள் – 2 ஸ்பூன், இண்டிகோ பொடி – 1 ஸ்பூன், வேப்பிலை பொடி – 1 ஸ்பூன், நெல்லிக்காய் பொடி – 1 ஸ்பூன், எல்லா பொடியையும் ஒன்றாக போட்டு கலந்து அதில் 1 கப் அளவு புளித்த தயிர் ஊற்றி கரைத்து பேக் போல தயார் செய்து கொள்ள வேண்டும். உங்களுடைய தலை முடியிலும் கொஞ்சம் நன்றாக எண்ணெய் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

தேங்காய் எண்ணெய் வைத்தாலும் சரி அல்லது தேங்காய் எண்ணெயோடு விளக்கெண்ணெய் சேர்த்து தலையில் வைத்துக் கொண்டாலும் சரி. அது உங்களுடைய விருப்பம். எண்ணெய் தலையோடு இந்த ஹேர் பேக்கை தலையின் மேல் பகுதியில் இருந்து கீழ் பகுதி வரை வேர்க்கால்களில் படும்படியும் அப்ளை செய்துவிட்டு, அப்படியே விட்டுவிடுங்கள். குறைந்தபட்சம் 1 மணி நேரமாவது இந்த பேக் தலையில் இருக்க வேண்டும். அதிக பட்சம் 2 மணி நேரம் வரை கூட வைத்துக் கொள்ளலாம்.

நன்றாக ஊரட்டும். அதன் பின்பு ஒரு மயில்டான ஷாம்பு போட்டு தலையை கசக்கினால் அதில் இருக்கும் எண்ணெய் நீங்கிவிடும். ஆனால் இந்த பேகில் நாம் சீயக்காய் பொடி சேர்த்து இருக்கின்றோம். செம்பருத்தி பூ பொடி, சேர்த்து இருக்கின்றோம். அதிலிருந்தே நுரை வரும். அதுவே தலையில் இருக்கும் எண்ணெய் பிசுபிசுப்பை நீக்கி தலையை சூப்பராக மாற்றிவிடும்.

- Advertisement -

ஷாம்பு போட்டு தான் தலையை கசக்கி கொள்ள வேண்டும் என்று அவசியம் இல்லை. இந்த பேக்கின் மேலே தண்ணீரை ஊற்றி தலையை அப்படியே ஜென்டில் ஆக கசக்கி, நல்ல தண்ணீரை ஊற்றி நன்றாக அலசி விட்டால் முடி சூப்பராக இருக்கும். (அரிசி வடித்த கஞ்சி தண்ணீர் இருந்தால் அதை தலையில் சேர்த்து தலையை கசக்கினால் மேலும் நல்லது.) அழுக்கு கூட சுத்தமாக போய்விடும். இதில் அவுரி இலை பொடி சேர்த்திருப்பதால் உங்களுடைய முடி அவ்வளவு சீக்கிரத்தில் வெளுத்தும் போகாது. கருப்பாகவே நீண்ட நாட்களுக்கு இருக்கும். குறிப்பு பிடிச்சிருந்தா முயற்சி செய்து பாருங்கள்.

பொதுவாகவே பொடியை தலையில் ஹெர் பேக் போட்டால் அது தலைமுடியை வறட்சி ஆக்கிவிடும் என்று சொல்லுவார்கள். அதனால் தான் இதெல்லாம் தண்ணீர் ஊற்றி கலக்குவதற்கு பதில் தயிர் ஊற்றி கலந்து இருக்கின்றோம். தலையில் ஈரப்பதத்தை அது தக்க வைக்கும். அதோடு எண்ணெய் தலையில் தான் இந்த ஹேர் பேக்கை போட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி இருக்கின்றோம். முடி சூப்பரா வளரும். ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்