- Advertisement -
Homeவீட்டு தோட்டம்நீங்கள் ஆசையை வளர்க்கும் செடிகளை எல்லாம் இந்த பூச்சிகள் பாழாக்கி விடுகிறதா? அதை சரி செய்ய...

நீங்கள் ஆசையை வளர்க்கும் செடிகளை எல்லாம் இந்த பூச்சிகள் பாழாக்கி விடுகிறதா? அதை சரி செய்ய உங்கள் வீட்டு சமையல் அறையில் இருக்கும் இந்த பொருள்கள் போதும்.

- Advertisement -

வீட்டில் வளர்க்கும் செடிகளில் ஒரு முக்கியமான தொல்லை இந்த பூச்சிகள். இந்த பூச்சிகள் வந்து விட்டால் செடி எல்லாம் அரித்து, ஒரு சில பூச்சிகள் செடிகளை எல்லாம் அரித்து தின்றே விடும். இதனால் செடியின் வளர்ச்சியும் கூட அப்படியே நின்று விடும். இந்த பூச்சிகள் பல வகைகள் உள்ளது வெள்ளை பூச்சி, மாவு பூச்சி என்று பூச்சிகளின் வகை பல உண்டு. இது போல எந்த பூச்சியும் நாம் வளர்க்கும் செடிகளை தாக்காமல் இருக்க நாம் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் இந்தப் பொருட்களை வைத்தே வராமல் பார்த்துக் கொள்ளலாம் அது என்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இந்தப் பூச்சி கொல்லி மருந்து தயாரிக்க பெரிய அளவில் பொருட்கள் எல்லாம் எதுவும் வாங்க வேண்டியதில்லை. தினமும் சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்கள் தான் அவை அது வேறொன்றும் இல்லை இஞ்சி, பூண்,டு பச்சை மிளகாய், இந்த மூன்று பொருட்களையும் இருக்கும் காரத்தன்மையும் அமிலத்தன்மையும் தான் செடிகளில் உள்ள பூச்சிகளை போக்கும்.

- Advertisement -

இந்த மருந்து தயாரிக்க ஒரு 20 பல் பூண்டு எடுத்துக் கொள்ளுங்கள் 10 கிராம் இஞ்சி, 5 பச்சை மிளகாய். இஞ்சி பூண்டு எல்லாம் தோல் நீக்க வேண்டாம் அப்படியே மிக்ஸி ஜாரில் சேர்த்து நல்ல பைன் பேஸ்ட் ஆக அரைத்துக் கொள்ளுங்கள். எவ்வளவு நைசாக அரைக்க முடியுமோ அந்த அளவுக்கு அரைத்து எடுத்து கொள்ளுங்கள். அரைத்த விழுதை ஒரு கப்பில் அளந்து எடுத்து கொள்ளுங்கள்.

இந்த அரைத்த விழுது ஒரு பங்குக்கு ஐந்து மடங்கு தண்ணீர் கலந்து கொள்ளுங்கள். தண்ணீர் கலந்த பிறகு இதை ஒரு வடிகட்டியில் நன்றாக வடித்த பிறகு ஸ்ப்ரே பாட்டில் ஊற்றிக் கொள்ளுங்கள். ஒரு வேளை நீங்கள் ஸ்ப்ரே பாட்டில் ஊற்றாமல் கையிலே எடுத்து தெளிக்கிறீர்கள் என்றால் வடிகட்ட வேண்டிய அவசியம் இல்லை.

- Advertisement -

உங்கள் வீட்டில் ஒரு சிறிய மாடித் தோட்டத்தில் ( 20 செடிகளுக்கு) உள்ள செடிகள் அனைத்திற்கும் இந்த ஒரு முறை அரைக்கும் இந்த கரைசல் போதுமானது. இதை 15 நாட்களுக்கு ஒரு முறை லேசாக தெளித்து விட்டால் போதும். இந்த கரைசலை செடிகளின் சுற்றி உள்ள இடங்களில் கூட இந்த தெளித்து விடலாம் இதனால் தரையில் இருக்கும் பூச்சிகள் கூட செடியை தாக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: உங்க மல்லி செடியை சரம் சரமா பூக்க வைக்கணுமா? இதோ கொஞ்சம் கூட செலவே இல்லாத இந்த உரத்தை கொடுத்துப் பாருங்க. உங்க செடி பூத்துக் குலுங்குவது நாளெல்லாம் பாத்துட்டே இருப்பீங்க.

இதையெல்லாம் கூடவா செடிகளுக்கு ஊற்றுவார்கள் என்று நினைக்க வேண்டாம். எந்த முறை செடியில் பூச்சி வராமல் தடுக்க மிகவும் சிறந்த மிக மிக எளிய வழி தான். இது பலரும் பயன்படுத்தும் முறை தான் பயமில்லாமல் அனைத்து செடிக்குமே இந்த முறையில் பயன்படுத்தலாம்.

சற்று முன்