UIDAI : ஆதார் கார்டை இனிமேல் நாமே ஆப்லைனில் திருத்தங்களை செய்து கொள்ளமுடியும் – இதுதான் வழிமுறை

Aadhar
- Advertisement -

ஆதார் கார்டு இன்று இந்தியாவில் முக்கியமான அடையாள சான்றாக மாறியுள்ளது. இந்த ஆதார் கார்டு மாற்றங்களை இதனால் வரை முறையான அலுவலகத்திற்கு சென்று மட்டுமே மாற்றவேண்டிய நிலைமை இருந்தது. இதனால் சிறுசிறு மாற்றங்களுக்கு கூட அலுவலகத்தின் உதவியை நாட வேண்டி இருந்தது. இதனை போக்கும் பொருட்டு தற்போது ஆதார் நிர்வாகம் ஆன்லைன் மற்றும் ஆப்லைலில் பயனாளர்களே மாற்றங்களை செய்து கொள்ளும் ஒரு முறையினை கொண்டுவந்துள்ளது.

AadharCard

உதாரணமாக இதன்மூலம் உங்கள் முகவரியினை மாற்றிக்கொள்ளுவதற்கான வழிமுறையினை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி நீங்கள் முகவரியினை மாற்றம் செய்து கொள்ள முடியும் அதற்கான முறையான தகவல் உங்கள் செல்போன் நம்பருக்கு வரும். பெயர், பிறந்த தேதி மற்றும் பாலினம், மொபைல் நம்பர் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகிவைகளை இதன்மூலம் எளிதாக மாற்றிக்கொள்ள முடியும்.

- Advertisement -

முகவரி மாற்றங்கள் செய்யும் வழிமுறைகள் :

1 – UIDAI website: https://uidai.gov.in/ குறிப்பிடப்பட்டுள்ள இந்த இணையதள பக்கத்திற்கு செல்லவும்.

- Advertisement -

2- அந்த பக்கத்திற்கு சென்றதும் கொஞ்சம் கீழே தள்ளி பார்த்தால் “Update Aadhar” என்ற பகுதி இருக்கும் அங்கு செல்லவும்.

3- “Upadate Aadhar Online” என்ற சொல்லின் மீது கிளிக் செய்யவும். கிளிக் செய்தால் உங்களது ஆதார் மாற்றங்கள் என்னவாக இருந்தாலும் அதனை இங்கு மாற்றிக்கொள்ளலாம்.

- Advertisement -

4- பிறகு “Request for Address Validation Letter” என்ற பகுதியில் கிளிக் செய்யவும்.

5- அதனை கிளிக் செய்ததும் உங்களுடைய ஆதார் நம்பர் கேட்கும். நீங்கள் ஆதார் எண்ணை பதிவிட்டதும் உங்களுக்கு மொபைலில் ஒரு டெக்ஸ்ட் வெரிஃபிகேஷன் வரும்.

6- அதுதான் உங்களின் OTP அதனை நீங்கள் சரியாக பதிவிட வேண்டும்.

7- பிறகு “Address Verifier Aadhaar” மீது கிளிக் செய்து “Submit” கொடுக்கவேண்டும்.நீங்கள் இதனை முடித்தவுடன் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு இணைய முகவரி லிங்க் ஒன்று மெசேஜாக வரும்.

8- அப்படி வரும் லிங்க்-யை நீங்கள் ஆப்பிலைனில் பயன்படுத்தினால் கூட வேலை செய்யும். சாதாரணமாக கிளிக் செய்து தேவையான மாற்றங்களை அந்த லிங்கின் மூலம் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் செய்து கொள்ள முடியும். இதுவே அந்த எளிய வழிமுறை

- Advertisement -