நூறு வருடங்களுக்கு ஒருமுறை வரும் இந்த ஆடி அமாவாசையை தவறவிடாதீர்கள்! பல தலைமுறைகளுக்கு நம்முடைய குடும்பம் சகல சௌபாக்யங்களுடன் வாழ முன்னோர்களுக்கு இதை மட்டும் செய்தாலே போதும்

aani-amavasai
- Advertisement -

எல்லா நாட்களும் இறைவனையும், முன்னோர்களையும் வணங்குவதற்கான சிறந்த நாட்களே. இருப்பினும் சில குறிப்பிட்ட தினங்களில், சில விசேஷ வழிபாடுகளுக்கு நாம் முன்னுரிமை கொடுத்து தான் ஆக வேண்டும். மாதந்தோறும் வரக்கூடிய அமாவாசை தினத்தன்று முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள் கூட குறிப்பிட்ட இந்த ஆடி அமாவாசை தினத்தில் மட்டுமாவது முன்னோர்கள் வழிபாட்டை தவறாமல் செய்து விட வேண்டும். இந்த மாதம் 08–08–2021 ஆம் தேதியன்று வரக்கூடிய ஆடி அமாவாசை அன்று முன்னோர்களை நினைத்து நம் வீட்டில் இருந்தபடியே முன்னோர்களை எப்படி வழிபாடு செய்வது, எப்படி தர்ப்பணம் கொடுப்பது என்பதைப்பற்றிய ஆன்மீக ரீதியான தகவலை இந்தப் பதிவின் மூலம் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

amavasai

பொதுவாக பித்ரு உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் நம் முன்னோர்கள் ஆடி அமாவாசை அன்று தங்கள் சந்ததியினரை பார்க்க பூமிக்கு வர தொடங்கி, புரட்டாசி அமாவாசையன்று பூமியை வந்தடைந்து, பிறகு தை அமாவாசை அன்று பித்ரு லோகத்திற்கு திரும்பி சென்று விடுவார்கள் என்பது ஐதீகம். எனவே இந்த மூன்று அமாவாசைகளிலும் முன்னோர்களை வணங்கும் பொழுது அவர்களது பரிபூரண ஆசி உங்களுக்கு கிடைக்கும். இந்த வருட ஆடி அமாவாசை சனிக்கிழமை அன்று தொடங்கி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முடிவடைகிறது. சனி மற்றும் ஞாயிறு தினங்கள் பித்ருக்களை வணங்குவதற்கு சிறப்பு வாய்ந்த தினங்களாக கருதப்படுகின்றது. எனவே இந்த சனி மற்றும் ஞாயிறு தினங்களில் பூசம் நட்சத்திரத்தில் வரும் அமாவாசை பித்ருக்களின் ஆசியை நாம் முழுமையாக பெறுவதற்கு மிகவும் சிறப்பு வாய்ந்த தினமாக உள்ளது.

- Advertisement -

அமாவாசை சிறப்புகள்:
ஒருவர் இறந்த பிறகு 16 நாட்களுக்குள் அவர்களுக்கு செய்ய வேண்டிய கர்மாக்கள் 16 இருக்கின்றன. இவற்றை செய்து முடித்த பிறகு மாதம் மாதம் வரும் அமாவாசை அன்று அவர்களுக்கு திதி கொடுக்க வேண்டும். இதனை தொடர்ந்து செய்ய முடியாதவர்கள் புரட்டாசி, ஆடி, தை மாதங்களில் வரும் அமாவாசையில் நிச்சயம் முன்னோர்களுக்கு திதி கொடுக்க வேண்டும்.

சிராத்தம் அல்லது திதி கொடுத்தல் என்பது ஐந்து வகையாக உள்ளது. அவை அன்ன சிரார்த்தம், ஹிரண்ய சிராத்தம், ஆம சிரார்த்தம், பார்வன சிராத்தம், சபிண்டீகரண சிராத்தம் மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு எந்த ஒரு தோஷமும் இல்லாமல் செய்யக்கூடிய கர்மாக்களை சிராத்தம் என்று கூறுவார்கள்.

- Advertisement -

முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தல்:
சுகமாக வாழ வேண்டும் என்ற ஆசை அனைவருக்குமே உண்டு. இதற்கு கண்டிப்பாக பித்ருக்களின் ஆசி நமக்கு இருக்க வேண்டும். எனவே ஆடி அமாவாசையன்று தர்ப்பணம் செய்வதால் பித்ரு தோஷம் நீங்கி முன்னோர்களின் மனம் மகிழ்ந்து அவர்களின் பரிபூரண ஆசி உங்களுக்கு கிடைக்கும்.

ஆடி அமாவாசையில் பித்ருக்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொடுத்து தர்ப்பணம் செய்ய வேண்டும். எள் என்றால் வடமொழியில் திலம் என்று பொருளாகும். திலம் என்றால் “விஷ்ணோர் அம்ச சமத்பவ” என்று பொருள். விஷ்ணுவில் இருந்து விஷ்ணுபகவான் அம்சமாக தோன்றியது தான் எள். இவ்வாறாக எள்ளை தானமாக கொடுத்தால் சகல பாவங்களும் நீங்கி விடுமாம். எனவே அமாவாசை தினத்தன்று எள்ளோடு தண்ணீர் சேர்த்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷமானதாகும்.

amavasai1

பெற்றோர்கள் உயிருடன் இருக்கும் பொழுது அவர்களை சரியாக பார்த்துக் கொள்ளாமல் இருப்பது மகா பாவமாகும். அவர்கள் இறந்த பிறகும் அவர்களை நினைத்து தர்ப்பணம் கொடுத்து, பித்ரு கர்மாவை நிறைவேற்றாமல் இருப்பதும் உங்களுக்கு தீராத பாவத்தை சேர்க்கும்.

agathi-keerai-dhanam

அமாவாசை அன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்யும் முன்னர் வீட்டில் எந்த பூஜைகளும் செய்தல் கூடாது. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து முடித்த பின்னரே வீட்டில் பூஜை செய்து வீட்டில் சமைத்த உணவினை காகத்திற்கு படைத்து, கோதுமை தவிடு அல்லது அகத்திக் கீரையை பசுவிற்கு தானமாக வழங்குதல் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்.

- Advertisement -