- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஆடி கிருத்திகை வழிபாடு

ஆடி கிருத்திகை வழிபாடு

- Advertisement -

முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரங்களாக பூச நட்சத்திரம், விசாக நட்சத்திரம், கிருத்திகை நட்சத்திரம் விளங்குகிறது. ஆடி மாதத்தில் வரக்கூடிய கிருத்திகை நட்சத்திரத்திற்கு மட்டும் அப்படி என்ன விசேஷம் என்று பலரும் கேள்வி எழுப்புவார்கள். ஆடி மாதம் என்றாலே அது அம்மனுக்குரிய மாதம் என்று கருதப்படுகிறது. அதாவது பெண் தெய்வ வழிபாடு என்பது ஆடி மாதத்தில் சிறப்பு மிகுந்த வழிபாடாக கருதப்படுகிறது.

கிருத்திகை நட்சத்திரத்தில் முருகப்பெருமானை நாம் வழிபடுவதற்கு காரணம் முருகப்பெருமானை வளர்த்த ஆறு கார்த்திகை பெண்கள் தான். இந்த ஆறு கார்த்திகை பெண்களை நினைத்து முருகப்பெருமானை நாம் வழிபாடு செய்யும்பொழுது முருகப்பெருமானின் அருள் நமக்கு கிடைக்கும் என்பதால் தான் ஆடி மாதத்தின் வரக்கூடிய கிருத்திகை நட்சத்திரம் என்பது மிகவும் விசேஷமான ஒன்றாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட ஆடி கிருத்திகை அன்று வீட்டிலேயே வழிபாடு செய்வதற்குரிய வழிமுறைகளை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவு நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

ஆடி கிருத்திகை வழிபாடு

பொதுவாகவே கிருத்திகை விரதம் இருப்பவர்கள் பரணி நட்சத்திரத்தில் தங்களுடைய விரதத்தை ஆரம்பித்து கிருத்திகை நட்சத்திரம் முடியும் பொழுது தங்களுடைய விரதத்தை பூர்த்தி செய்வார்கள். இன்னும் சிலரோ கிருத்திகை நட்சத்திரம் ஆரம்பிக்கும் பொழுது விரதத்தை ஆரம்பித்து கிருத்திகை நட்சத்திரம் முடியும்பொழுது தங்களுடைய விரதத்தை நிறைவு செய்வார்கள்.

ஒரு சிலர் திரவ உணவுகளை மட்டும் உண்டு விரதம் இருப்பார்கள். இன்னும் சிலரோ பழங்களை சாப்பிட்டு கொண்டு விரதம் இருப்பார்கள். இன்னும் சிலரோ உப்பு போடாத திட உணவுகளை சாப்பிட்டு விரதம் இருப்பார்கள். உங்களுடைய உடல் நலத்தை பொறுத்து உங்களால் எந்த விரதத்தை இருக்க முடியுமோ அந்த விரதத்தை இருந்து முருகப்பெருமானை வழிபாடு செய்யலாம். விரதம் இருக்க இயலாத பட்சத்தில் இருப்பவர்கள் முருகப்பெருமானை வழிபாடு மட்டும் செய்தாலே போதும்.

- Advertisement -

ஆடி கிருத்திகை என்பது 29ஆம் தேதி மதியம் 2:41 க்கு ஆரம்பித்து 30ஆம் தேதி 1:40க்கு நிறைவடைகிறது. பலரும் மாலை நேரத்தில் தான் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்வார்கள் என்பதால் 29ஆம் தேதி ஆடி கிருத்திகை என்று கூறுவார்கள். இன்னும் சிலரோ சூரிய உதயம் ஆகும் போது இருக்கக்கூடிய நட்சத்திரத்தை பொருத்து 30 ஆம் தேதி ஆடி கிருத்திகை என்று சொல்வார்கள். 29ஆம் தேதி மாலை வீட்டில் இருக்கக்கூடிய முருகனின் சிலைக்கோ அல்லது வேலிற்யோ பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வது என்பது மிகவும் சிறப்பு.

இப்படி அபிஷேகம் செய்து முடித்த பிறகு முருகப்பெருமானுக்கு முன்பாக ஒரு தாம்பாள தட்டில் நட்சத்திர கோலம் வரைந்து “ஓம் சரவணபவ” என்று எழுதி வடக்கு அல்லது கிழக்கு பார்த்தவாறு ஆறு அகல் விளக்குகளில் நெய் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். பிறகு “ஓம் சரவணபவ” என்னும் மந்திரத்தை 111 முறை உச்சரித்து மலர்களால் முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.

- Advertisement -

முருகப்பெருமானுக்கு நெய்வேத்தியமாக பால், தேன், திணை மாவு, பஞ்சாமிர்தம், சர்க்கரை பொங்கல், பாசிப்பருப்பு பாயாசம் போன்றவற்றில் ஏதாவது ஒன்று உங்களால் இயன்றதை நெய்வேத்தியமாக வைத்து வழிபாடு செய்யலாம். இப்படி வழிபாடு செய்வதால் முருகப்பெருமானின் அருளும் கார்த்திகை பெண்களின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும்.

இவர்களின் அருள் பரிபூரணமாக கிடைத்தால் வேலை இல்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு உண்டாகும். அரசியலில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கையில் கவுரவம் அதிகரிக்கும். ராசி, நட்சத்திரத்தால் ஏற்பட்ட தோஷங்கள் அனைத்தும் நீங்கும். காரிய தடை விலகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமண தடை நீங்கி விரைவிலேயே திருமணம் நடைபெறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:நினைத்தது நடக்க, பிரச்சனைகள் தீர, செல்வம் சேர நரசிம்மர் வழிபாடு
மிகவும் எளிமையான முறையில் முருகப்பெருமானை ஆடி கிருத்திகை நட்சத்திர நாளன்று வழிபாடு செய்வதோடு மோரை தானமாக தருவதன் மூலம் அனைத்து விதமான நன்மைகளையும் நம்மால் பெற முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்