ஆடி கிருத்திகை வழிபாடு முறை

Lord Murugan

ஆடி மாதம் தெய்வங்களின் மாதமாகும். ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாதத்தில் பெரும்பாலும் பெண் தெய்வங்களின் கோவில்களில் வழிபாடு செய்யும் பக்தர்களின் கூட்டம் அதிகமிருக்கும். அக்கோவில்களில் பொங்கல் வைத்தல், தீ மிதித்தல் போன்ற சடங்குகளில் மக்கள் அதிகம் ஈடுபடுவர். இம்மாதத்தில் வேறு தெய்வங்களுக்கும் உரிய சில சிறப்பு தினங்களும் வருகின்றன. அதில் ஒன்று தான் இந்த “ஆடி கிருத்திகை” தினமாகும்.

Sivanmalai Murugan

பொதுவாக “கிருத்திகை” அல்லது “கார்த்திகை” நட்சத்திரம் “முருகனுக்குரிய” நட்சத்திரமாக கருதப்படுகிறது. அதிலும் இந்த ஆடி கிருத்திகை தினமானது சூரியன் தென் திசை நோக்கி பயணிக்கும் தட்சிணாயண காலத்தின் தொடக்கத்தில் வருகிறது. இக்காலம் பகல் வெளிச்சம் குறைந்து இரவின் இருள் நீடித்திருக்கும் பருவத்தின் தொடக்க காலமாகும். எனவே மக்கள் தங்களின் வாழ்வில் துன்பம் எனும் இருள் அதிக காலம் நீடிக்காமல் இருக்க முருக பெருமானை வேண்டுவதால் அவர்கள் வாழ்வு ஒளிமயமாக இருக்க அருள் புரிவார் முருகன்.

வேண்டிய பக்தர்களுக்கு உடனடியாக வந்து அவர்களின் வினைகளை நீக்குபவர் முருக பெருமான் ஆவார். இந்த முருகன் முழு இல்லற வாசியாக திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கிறார். அதே நேரத்தில் முற்றும் துறந்த முனிவனாக பாலதண்டாயுதபாணியாக பழனி மலையில் வீற்றிருக்கிறார். சித்தர்கள் அனைவருக்கும் விருப்பத்திற்குரிய நாயகன் முருகன். ஆகவே இவரை வழிபடுவதால் ஒருவருக்கு வாழ்வில் யாருக்கும் அஞ்சாத மனம், சிறந்த செல்வ நிலை உயர்வான ஆன்ம ஞானம் கிடைக்கும்.

murugan

நவகிரகங்களில் முதன்மையானவர் சூரிய பகவான். ஜோதிடம் மற்றும் அறிவியல் ரீதியாக பார்க்கும் போதும் சூரியன் ஒரு மனிதனின் உடலாரோக்கியம் நன்கு இருக்க அருள்புரிகிறார். முருகனக்குரிய ஆடி கிருத்திகை தினம் ஞாயிற்று கிழமை தினத்தில் வருவது சிறப்பானதாகும். இத்தினத்தில் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு கிழக்கு திசையில் சூரியன் உதிக்கும் போது சூரியனுக்குரிய மந்திரங்களை கூறி வணங்கி, பின்பு முருகன் கோவிலுக்கு சென்று வணங்கினால் உடல் உறுதி பெரும். அடிக்கடி நோய்கள் பீடிக்கும் நிலை நீங்கும். மனோவலிமை மிகும், செல்வ செழிப்பு உண்டாகும் இன்னும் பல எண்ணிலடங்கா நன்மைகளை தரவல்லது ஆடி கிருத்திகை வழிபாடு.

கந்த சஷ்டி கவசம் படிக்க இங்கு கிளிக் செய்யவும்

இது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள், மந்திரங்கள் மற்றும் ஜோதிட குறிப்புகளை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Aadi krithigai valipadu benefits in Tamil. Aadi Kiruthigai is a good day to worship Lord Murugan. Aadi krithigai vazhipadu will give many benefits in many ways. All those were explained in detail here.