ஆடி மாதத்தில் வாகனம் வாங்கலாமா ?

aadi matham vaaganam
- Advertisement -

இந்த புனிதமான “ஆடிமாதத்தில்” நாம் காணும் கோவில்களிலும் இன்ன சில இடங்களிலும் எப்போதும், ஏதாவது ஒரு தெய்வத்திற்கு விழா மற்றும் வைபவங்கள் நடப்பதை பார்க்கலாம். அதிலும் பெண் தெய்வங்கள் மற்றும் கிராம தெய்வங்களின் வழிபாடுகள் அதிகம் இருக்கும் காலம் இது. இந்த ஆடி மாதத்தில் பொதுவாக யாருமே சுப காரியங்களை செய்வது கிடையாது. இதை காரணமாக கொண்டு பெரும்பாலானோர் இம்மாதத்தில் புதிய வாகனங்களை வாங்குவதற்கும் தயங்குகின்றனர். புதிய வாகனங்களை இம்மாதத்தில் வாங்கலாமா கூடாதா என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

amman

ஒரு காலத்தில் எவ்வளவு தொலைவானாலும் மனிதர்கள் நடை பயணமாகவே சென்றனர். அக்காலத்திலும் சற்று உயர்நிலையில் இருந்தவர்கள் எருதுகள் அல்லது குதிரைகள் போன்ற விலங்குகள் பூட்டப்பட்ட வண்டிகளில் பயணம் செய்தனர். ஆனால் எல்லாமே வேகமாக இயங்கும் நவீன யுகத்தில் அறிவியல் மற்றும் விஞ்ஞான முன்னேற்றத்தின் காரணமாக அதிவேகத்தில் செல்லும் பல இயந்திர இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. நம் நாட்டிலும் இன்று வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நம்மில் பலரும் தொழில் மற்றும் வியாபார காரணங்களுக்காகவும், சொந்த உபயோகங்களுக்காகவும் வாகனங்களை வாங்கி உபயோக படுத்துகிறோம்.

- Advertisement -

அப்படி புதிய வாகனங்களை வாங்கும் போது அதை ஆடி மாதத்தில் வாங்குவதற்கு சிலர் தயங்குகின்றனர். முதலில் நாம் ஆடி மாதத்தில் ஏன் வாகனங்களை வாங்க தயங்குகின்றோம் என்ற காரணத்தை ஆராய வேண்டும். உக்கிரமாக இருக்கும் பெண் தெய்வங்களை சாந்தப்படுத்தவே ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்திலும் மக்கள் தங்கள் சொந்த விசேஷங்களை நடத்தினால் இறைவழிபாட்டில் நாட்டம் ஏற்படாமல் போகும் என்பதாலேயே இந்த மாதத்தில் விசேஷங்கள் தவிர்க்கப்பட்டது.

amman

புதிய வாகனம் வாங்குவது என்பதும் ஒரு வித கொண்டாட்டம் தான். அதனால் ஆடி மாதத்தில் வாகனங்களை வாங்க பலர் தயங்குவதுண்டு. அப்படி தயக்கம் ஏற்படும் சூழலில் அம்மனுக்கு பூஜை போட்டு வாகனத்தை வாங்கலாம். அதாவது, ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் காலை 6 மணியிலிருந்து 9 மணிக்குள்ளாக, ஏதேனும் ஒரு அம்மன் கோவிலுக்கு சென்று அந்த அம்மனுக்கு பால் அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வழிபட்டு, அன்றைய தினத்திலேயே ராகு காலம், எமகண்டம் போன்ற நேரங்களை தவிர்த்து, காலை அல்லது மாலையில் வரும் சுப நேரத்தில் புதிய வாகனங்களை வாங்கினால் மிகவும் சிறப்பாகும். மேற்கண்ட அம்மன் வழிபாட்டை செய்து யார் வேண்டுமானாலும் ஆடி மாதத்தில் புதிய வாகனங்களை வாங்கலாம் எதைப்பற்றியும் கவலை கொள்ள தேவையில்லை.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
தான தர்மங்களை எப்போது செய்தால் அதிக புண்ணியம் பெறலாம் தெரியுமா ?

இது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள் மற்றும் குறிப்புகளை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -