- Advertisement -

ஆடி மாதம் மூன்றாம் பிறை தரிசன வழிபாடு

- Advertisement -

அமாவாசை கழித்து மூன்றாவது நாள், பிறை தரிசனம் செய்தால் கோடி புண்ணியம் என்று சொல்லுவார்கள். சிவபெருமான் தன்னுடைய தலையில் பிறை நிலாவை சூடிக் கொண்டிருக்கிறார். ஆகவே, பிறை நிலவை பார்ப்பதும், அந்த சிவபெருமானை பார்ப்பதும் வேறு வேறு அல்ல. இரண்டும் ஒன்றுதான்.

நீங்கள் சிவபெருமானை நேரில் காண வேண்டும் என்றால், மூன்றாம் பிறை அன்று, பிறை நிலவை தரிசனம் செய்தாலே போதும். ஆடி அமாவாசை முடிந்து பிறை தரிசனமானது நாளைய தினம் வரவிருக்கின்றது. 6/8/2024 செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வந்திருக்க கூடிய இந்த பிறை தரிசன நாளில், இறைவனின் பரிபூரண ஆசையைப் பெற மனதில் நினைத்த வேண்டுதல் நிறைவேற, வழிபாட்டை எப்படி மேற்கொள்ளலாம், ஆன்மீகம் சார்ந்த தகவல் இதோ இந்த பதிவில் உங்களுக்காக.

- Advertisement -

ஆடி மாதம் மூன்றாம் பிறை தரிசன வழிபாடு

ஆடி மாதம் என்றாலே அம்பாள் வழிபாட்டிற்கு சிறந்த மாதம் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. நாளைய தினம் உங்கள் குடும்ப கஷ்டம் தீர வேண்டும், உங்களுடைய மனது தெளிவு பெற வேண்டும், அம்பாளின் அருள் ஆசி கிடைக்க வேண்டும், சிவபெருமானின் அருள் கிடைக்க வேண்டும் என்றால், எப்படி வழிபாடு செய்யலாம். உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் சிவன் கோவிலுக்கு நாளை மாலை 6 மணிக்கு மேல் செல்லவும்.

அங்கு சிவபெருமானை தரிசனம் செய்துவிட்டு, சக்தி தேவியை தரிசனம் செய்துவிட்டு அந்த கோவிலில் இருந்து பிறை நிலவைப் பார்த்து இரண்டு கைகளையும் ஏந்தி, வேண்டுதல் வைத்தால் உங்களுடைய வேண்டுதல் அப்படியே பலிக்கும். உங்களுக்கு என்ன வேண்டுதலாக இருந்தாலும், ஒரு வேண்டுதலை தேர்ந்தெடுத்து நாளைய தினம் இந்த முறையில் வேண்டுதல் வைத்து பாருங்கள். சந்திர பகவான் உங்களுக்கான அருள் ஆசியை நிச்சயம் நல்லபடியாக வழங்குவார்.

- Advertisement -

உங்களுடைய வீட்டு பக்கத்தில் சிவன் கோவில் இல்லையா, பெருமாள் கோவிலுக்கு சென்று பெருமாளை வழிபாடு செய்துவிட்டு தாயாரை தரிசனம் செய்து பிறகு பிறை நிலவைப் பார்த்து வேண்டுதல் வைத்தாலும் உங்களுடைய வேண்டுதல் நிச்சயம் நடக்கும். இந்த இரண்டு கோவிலுமே உங்களுக்கு வீட்டு பக்கத்தில் இல்லை என்றால், வீட்டு பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு சென்று அம்மாளை மனமார தரிசனம் செய்து பிறை நிலாவை தரிசனம் செய்து வழிபாட்டை மேற்கொள்ளலாம். நாளை பிறை தரிசனத்தை நீங்கள் ஒரு கோவிலில் நின்று செய்ய வேண்டும் அதுதான் முக்கியம்.

நாளை மாலை 6:30 மணிக்கு மேலாக 7:15 மணிக்குள் பிறை நிலவு தெரியும். ஆனால் மேகமூட்டமாக இருக்கும் சமயத்தில் சில இடங்களில் இந்த பிறை நிலவை தெளிவாக காண முடியாது. பிறை நிலா தெரியாத பட்சத்தில் மேற்கு பார்த்தவாறு நின்று சந்திர பகவானை மனதார நினைத்து வேண்டுதலை வைத்தாலும் உங்களுடைய வேண்டுதல் பலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நாளைய தினம் சந்திர தரிசனம் செய்யும் போது, உங்களுடைய வேண்டுதலை எல்லாம் நேர்மறையாக சொல்ல வேண்டும். உதாரணத்திற்கு நல்ல வேலைகிடைக்க வேண்டுதல் வைக்கிறீர்கள். எனக்கு நல்ல வேலை கிடைத்து விட்டது, கை நிறைய சம்பாதிக்கின்றேன், செல்வ வளத்தோடு சந்தோஷமாக வாழ்கின்றேன் என்றபடி வேண்டுதல் வைத்து பாருங்கள். நீங்கள் நினைத்த நல்லது அப்படியே நடக்கும்.

உங்களுடைய பிள்ளைகளுக்கு திருமணம் ஆக வேண்டும் என்றால், திருமணம் ஆகி உங்களுடைய பிள்ளைகள் குழந்தை குட்டியோடு சுகமாக வாழ்கிறார்கள் என்று நேர்மறையோடு நினைத்து பிரார்த்தனை செய்து பாருங்கள். அந்த வேண்டுதல் அப்படியே பலிக்கும். கடன் பிரச்சனை தீர வேண்டுமா, வாங்கிய கடனை எல்லாம் திருப்பி தந்து விட்டேன். கடவுளின் ஆசிர்வாதத்தால் செல்வ செழிப்போடு சுகமாக வாழ்கின்றேன் என்று சொல்லுங்கள்.

இதையும் படிக்கலாமே: வீடு கட்ட சொல்ல வேண்டிய மந்திரம்

இப்படி நேர்மறையான வேண்டுதலை சந்திர பகவானிடம் வைத்துவிட்டு ‘ஓம் சந்திரமவுலீஸ்வராய நமஹ’ என்ற மந்திரத்தை 27 முறை சொல்லி பிரார்த்தனையை நிறைவு செய்து கொள்ளுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -