- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவீடு கட்ட சொல்ல வேண்டிய மந்திரம்

வீடு கட்ட சொல்ல வேண்டிய மந்திரம்

- Advertisement -

காக்கை குருவிகளாக இருந்தாலும் அது, தான் வசிப்பதற்காக கஷ்டப்பட்டு சொந்தமாக ஒரு கூட்டை கட்டிக் கொள்கிறது. ஆனால் மனிதர்களான நமக்கு சொந்தமாக வீடு கட்டிக் கொள்வதில் இன்றைய சூழ்நிலையில் நிறைய சிரமங்கள் இருக்கிறது. பூர்வீக சொத்து இல்லாமல், இன்று சொந்தமாக உழைத்து சம்பாதித்து தான் வீடு கட்ட வேண்டும் என்றால் அது நடக்காத காரியம் என்றே சொல்லலாம்.

நடக்காத காரியத்தையும் நடத்திக் காட்டக் கூடிய சக்தி, அந்த கடவுக்குதான் இருக்கு. சொந்த வீடு கட்டவும், நிறைய பணம் சம்பாதிக்கவும், நான் செய்ய வேண்டிய ஒரு எளிமையான பரிகாரத்தை தான் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவு மூலம் நான் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

சொந்த வீடு கட்ட சொல்ல வேண்டிய மந்திரம்

வீடு கட்ட வேண்டும் என்றால் அந்த செவ்வாய் பகவானின் அருள் ஆசி நிறைவாக கிடைக்க வேண்டும். செவ்வாய் பகவானை, ‘அங்காரகன்’ என்று சொல்லுவார்கள். அங்காரகன் மனது வைத்தால் நாம் சொந்த வீடு கட்டி விடலாம். இந்த அங்காரகன் வழிபாட்டை செவ்வாய்க்கிழமை அன்று தான் செய்ய வேண்டும்.

செவ்வாய்க்கிழமை காலை 6:00 மணியிலிருந்து 7:00 மணிக்குள் செவ்வாய் ஹோரை இருக்கிறது. செவ்வாய்க்கிழமை காலையில் சீக்கிரமே எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு ‘ஓம் அங்காரகாய நமஹ’ என்ற மந்திரத்தை 9 முறை சொல்லுங்கள். மனதில் சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற வேண்டுதல் மட்டும் வைத்து இந்த மந்திரத்தை சொல்லி வந்தால் சீக்கிரம் சொந்த வீடு கட்டும் யோகம் வரும்.

- Advertisement -

உங்களுக்கு இன்னும் கொஞ்சம் கூடுதல் நேரம் இருக்கிறது எனும் பட்சத்தில் ஒரு புது நோட்டை வாங்கி, அதில் தினமும் இந்த மந்திரத்தை 9 முறை எழுதத் தொடங்குங்கள். அந்த சின்ன நோட்டுப் புத்தகத்தகம் முழுவதும் இந்த மந்திரத்தை எழுதி முடிப்பதற்குள் உங்களுக்கு சொந்த வீடு கட்டுவதற்கான யோகம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஆனால் வெறும் மந்திரத்தை மட்டும் எழுதிவிட்டு வீடு வாங்க வேண்டும் என்ற கனவை நினைவாக்க முடியாது.

அதற்கான பணம் சம்பாதிக்க கூடிய முயற்சிகளையும் நீங்கள் தான் மேற்கொள்ள வேண்டும். பணத்தை நம் பக்கம் ஈர்க்க, பணம் வசியம் செய்யக்கூடிய ஒரு மந்திர வார்த்தையையும் இங்கே நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். 656 என்ற நம்பரை அடிக்கடி சொல்லிக் கொண்டே இருந்தால் நமக்கு பண வசியம் ஏற்படும். அதேபோல ‘Money Loves Me – பணம் என்னை விரும்புகிறது’ என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருங்கள்.

- Advertisement -

நேரம் கிடைக்கும் போதெல்லாம், பணத்தை எண்ணும் போதெல்லாம், பணக்கஷ்டம் வரும் போதெல்லாம், பணத்தேவை இருக்கும்போதெல்லாம், இந்த வார்த்தையை சொல்லும்போது பணம் உங்களை நேசித்து, உங்கள் பக்கம் வர தொடங்கிவிடும். பிறகு பண கஷ்டமும் தீரும். சொந்த வீடு வாங்க வேண்டிய கனவும் நிறைவேறும். பரிகாரங்கள் என்பது நம்பிக்கை. நம்பிக்கையோடு நாம் செய்யக்கூடிய பரிகாரங்கள் நிச்சயம் பலன் தராமல் போகாது.

இதையும் படிக்கலாமே: குடும்ப கஷ்டம் நீங்க வாராஹி வழிபாடு

மேல் சொன்ன அங்காரகன் வழிபாட்டை தொடர்ந்து ஒன்பது செவ்வாய்க்கிழமை செய்வது சிறப்பு என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல அங்காரகன் என்பவன் முருகன். முருகனை வழிபாடு செய்தாலும், செவ்வாய் பகவானை வழிபாடு செய்ததற்கு சமம். வீட்டு பக்கத்தில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று செவ்வாய்க்கிழமை விளக்கு போட்டு சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற பிரார்த்தனை வைத்தாலும் நிச்சயம் உங்கள் வேண்டுதல் நிறைவேறும். உங்களுக்கும் நம்பிக்கை இருந்தால் மட்டும் மேல் சொன்ன ஆன்மீகம் வழிபாட்டை பின்பற்றி பலன் பெறவும்.

சற்று முன்