ஆடி மாதம் என்றாலே அம்மனுக்குரிய மாதம் தான். அந்த மாதத்தில் வரக்கூடிய செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் அம்மனுக்கு மிகவும் விசேஷகரமான தினங்களாக கருதப்படுகிறது. ஆடி மாதம் முழுவதும் வழிபட இயலாதவர்கள் ஆடி வெள்ளி ஆடி செவ்வாய் போன்ற கிழமைகள் மட்டுமாவது அம்மனை வழிபாடு செய்வார்கள் அல்லது அம்மனின் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வார்கள். அவ்வளவு சிறப்பு மிகுந்த இந்த ஆடி வெள்ளி அன்று பிரதோஷமும் சேர்ந்து வருவதால் அம்மன் அப்பன் இவர்கள் இருவரின் அருளையும் நம்மால் பரிபூரணமாக பெற முடியும். அப்படி இருவரின் அருளையும் பெறுவதோடு மட்டுமல்லாமல் அனைத்து விதமான சௌபாக்கியங்களையும் பெறுவதற்கு வீட்டில் ஏற்ற வேண்டிய ஒரு தீபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஆடி முதல் வெள்ளி ஏற்ற வேண்டிய தீபம்
பொதுவார்த்தமாகவே வெள்ளிக்கிழமை என்பது மகாலட்சுமிக்கும் சுக்கிர பகவானுக்கும் உரிய கிழமையாக திகழ்கிறது. அதிலும் குறிப்பாக வெள்ளிக்கிழமையில் வரக்கூடிய சுக்கிர ஹோரை என்பது மிகவும் விசேஷமான ஒன்றுதான். அந்த நேரத்தில் நாம் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்தோம் என்றால் சுக்கிர பகவானின் அருள் நமக்கு கிடைக்கும். நாளைய தினம் ஆடி முதல் வெள்ளி அதனால் அன்றைய தினத்தில் அந்த நேரத்தில் நாம் தீப வழிபாடு செய்தோம் என்றால் அம்மனின் அருளும் கிடைக்கும் மகாலட்சுமி தாயாரின் அருளும் கிடைக்கும்.
இவர்கள் அருளோடு சேர்த்து சிவபெருமானின் அருளும் நமக்கு கிடைத்தால் நம் வாழ்க்கை எந்த அளவிற்கு உயரும்? அந்த உயரத்தை பெறுவதற்குரிய தீபத்தை பற்றி பார்ப்போம். இந்த தீபத்தை நாம் ஏற்றுவதற்கு நமக்கு இரண்டு தானியங்கள் வேண்டும். ஒன்று வெள்ளை மூச்சை. இது சுக்கிர பகவானுக்கு உரிய தானியமாக கருதப்படுகிறது. மேலும் இந்த தானியத்தை பயன்படுத்தி நாம் மகாலட்சுமி தாயாரையும் வழிபாடு செய்வோம். அடுத்ததாக நமக்கு தேவைப்படுவது நெல் அல்லது பச்சரிசி இது சந்திரனை குறிக்கக்கூடிய தானியம் நாளை பிரதோஷம் என்பதால் சிவபெருமானுக்காக இந்த சந்திரனுக்குரிய தானியத்தை வைத்தும் நாம் தீபம் ஏற்றுகிறோம்.
ஒரு சிறிய தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பாதி அளவு வெள்ளை மொச்சை சேர்த்துக் கொள்ளுங்கள். பாதி அளவு நெல் அல்லது பச்சரிசியை சேர்த்துக் கொள்ளுங்கள். இதற்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்துக் கொள்ளுங்கள். அந்த அகல் விளக்கிற்கு மஞ்சள் குங்குமம் அனைத்தும் வைத்து விட்டு நெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்றுங்கள். இயன்றவர்கள் தாமரை தண்டு திரி போட்டு கூட தீபம் ஏற்றலாம்.
இப்படி ஏற்றி முடித்துவிட்டு உங்களுடைய வேண்டுதல் என்னவோ அதை அந்த தீபத்திடம் முன்வைக்க வேண்டும். மறுநாள் காலையில் இந்த மொச்சை மற்றும் பச்சரிசியை காயப்படாத இடத்திலோ அல்லது ஓடுகின்ற நீரிலோ போட்டு விட வேண்டும். இந்த வழிபாட்டை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அதாவது ஆடி மாதத்தில் வரக்கூடிய வெள்ளிக்கிழமை மட்டுமல்லாமல் சாதாரணமாக வரக்கூடிய ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சுக்கிர ஹோரையில் மொச்சையை பரப்பி அதற்கு மேல் அகல் விளக்கை வைத்து தீபம் ஏற்றினால் சுக்கிர பகவானின் அருளும் மகாலட்சுமி தாயாரின் அருளும் நமக்கு கிடைக்கும்.
அப்படி கிடைக்கக்கூடிய அந்த அருளை நாம் ஆடி வெள்ளி அன்று செய்யும்பொழுது கூடுதலாக அம்மன் மற்றும் சிவபெருமானின் அருளையும் பரிபூரணமாக பெற முடியும்.
இதையும் படிக்கலாமே: மகாலட்சுமியின் அருளைப் பெற வழிபாடு
மிகவும் எளிமையான அதேசமயம் சக்தி வாய்ந்த தீப வழிபாடாக கருதக்கூடிய இந்த வழிபாட்டை முழு நம்பிக்கையுடன் செய்து சிவபெருமான், அம்பாள், மகாலட்சுமி, சுக்கிர பகவான் இவர்களின் அருளையும் பரிபூரணமாக பெறலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.