- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஆடிப்பூரம் 2024 அம்பாள் வழிபாடு

ஆடிப்பூரம் 2024 அம்பாள் வழிபாடு

- Advertisement -

7-8-2024 நாளை புதன்கிழமையோடு சேர்ந்து ஆடிப்பூரம் வரவிருக்கின்றது. ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திர நாளை தான் ஆடிப்பூரமாக கொண்டாடுகின்றோம். ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில் ஆண்டாள் அவதரித்ததாக ஐதீகம். ஆண்டாள் அவதாரம் செய்த இந்த நாளை ஆடிப்பூரத் திருநாளாக கொண்டாடி வருகின்றோம். இன்னொரு வகையில் பார்த்தால் இந்த ஆடிப்பூர நாள் அன்று, அம்மனுக்கு வளைகாப்பு நடத்துவதும் ஐதீகமாக சொல்லப்பட்டுள்ளது.

ஆடிப்பூரம் என்றால் அது முழுக்க முழுக்க அம்பாளுக்கு உரிய தினம். இந்த நாளில் வீட்டில் இருக்கும் பெண்கள் தங்களுடைய வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்ள, அம்பாளை நினைத்து எப்படி விரதம் இருந்து வழிபாட்டை மேற்கொள்வது, ஆன்மீகம் சார்ந்த தகவலை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

ஆடிப்பூர விரதம் 2024

நாளைய தினம் அதிகாலை வேலையிலேயே பெண்கள் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு, பூஜை அறையில் விளக்கு ஏற்றி குலதெய்வத்தை நினைத்து, அம்பாளை நினைத்து விரோதத்தை தொடங்குங்கள். நாளை பெண்கள் பச்சை நிற புடவை அல்லது பிங்க் நிற புடவையை அணிந்து கொண்டு வழிபாட்டை மேற்கொள்வது சிறப்பு.

ஒரு பாத்திரம் நிரம்ப குடிக்கும் தண்ணீர் எடுத்து, அதில் கொஞ்சம் துளசி இலைகளை போட்டு இந்த துளசி தீர்த்தத்தை நாள் முழுவதும் பருகி விரதம் மேற்கொள்ளலாம். கூடவே பால் பழம் போன்ற பொருட்களை சாப்பிட்டு விரதத்தை தொடரவும். மனம் உருகி அம்பாளிடம் உங்களுடைய வேண்டுதலை வைத்து நாள் முழுவதும் அம்பாளின் நாமத்தைச் சொல்லிக் கொண்டே விரதம் இருக்கவும்.

- Advertisement -

நாளை மாலை 6:00 மணிக்கு உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் ஏதாவது ஒரு அம்மன் கோவிலுக்கு சென்று அம்பாளின் வளைகாப்பு தரிசனத்தை மேற்கொள்ளலாம். அம்பாளை பார்க்க செல்லும் போது ஒரு தாம்பூல தட்டில், வெற்றிலை, பாக்கு, பூ பழம், வளையல் வாங்கி வைத்து அம்மனுக்கு சீர் எடுத்து செல்லுங்கள்.

உங்களால் முடிந்த கலவை சாதத்தை நெய்வேத்தியமாக கொடுத்து வழிபாட்டை மேற்கொண்டு, அந்த கோவிலில் கொடுக்கும் தீர்த்தத்தை பருகி விரதத்தை முடிப்பது சிறப்பான பலனை கொடுக்கும். நீங்கள் வாங்கி சென்ற வெற்றிலை பாக்கு பூ பழம் வளையலை யாராவது ஒருவருக்கு தானம் கொடுப்பதும் சிறப்பு. அதிலிருந்து கொஞ்சம் வளையலை எடுத்து நீங்களும் போட்டு கொள்ளலாம்.  கோவிலுக்கு சென்று வழிபாட்டை மேற்கொள்பவர்கள் மேல் சொன்ன முறைப்படி செய்யுங்கள்.

- Advertisement -

குறிப்பாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும். குடும்பத்தில் நிம்மதி இல்லை, கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவோடு இருப்பவர்களும் இந்த வழிபாட்டை மேற்கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும் என்பதும் நம்பிக்கை.

வேலைக்கு செல்பவர்கள், விரதத்தை எடுக்க முடியாத சூழ்நிலையில் இருப்பவர்கள் எல்லாம் அம்பாள் ஆசிர்வாதத்தை எப்படி பெறுவது. அம்பாளின் அருள் ஆசி தேவை என்றால் என்ன செய்வது. உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் அம்பாள் கோவில்களில் வளைகாப்பு நடைபெறும். அந்த கோவிலுக்கு உங்களால் முடிந்த வளையல்களை வாங்கி கொடுங்கள்.

கோவிலில் அம்மனின் முன்பாக அமர்ந்து உங்களுடைய பிரார்த்தனையை ஐந்து நிமிடம் வையுங்கள். உங்களுக்கும் அம்பாளின் அருள் கிடைக்கும். அதேபோல நாளை தினம் கோவிலுக்கு சென்றால் அம்பாளுக்கு சாத்திய வளையல்கள் பிரசாதமாக உங்களுக்கு கிடைக்கும். அதை நீங்கள் அணிந்து கொண்டால் நல்லது.

உங்களுக்கு தெரிந்தவர்கள் யாரோ ஒருவர், திருமணமாகாமல் இருக்கிறார்கள், குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்கிறார்கள், என்றால் அம்பாள் பிரசாதமாக உங்களுக்கு கிடைத்த வளையலை, அவர்களுக்கு கொண்டு போய் கொடுத்தாலும் மிகவும் நல்லது. சந்தோஷத்தில் மிகப்பெரிய சந்தோஷம் அடுத்தவர்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பது தானே. ஆகவே முடிந்தால் இந்த நல்ல காரியத்தையும் செய்யுங்கள்.

இதையும் படிக்கலாமே: தம்பதிகள் ஒற்றுமை அதிகரிக்க சொல்ல வேண்டிய மந்திரம்

இந்த ஆடிப்பூர நாளில் ஸ்ரீரங்கம் சென்று அங்கு இருக்கும் ஆண்டாளை தரிசனம் செய்வது சிறப்பு என்பது குறிப்பிடத்தக்கது. திருமண தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் எல்லாம், வாய்ப்பு உள்ளவர்கள் நாளைய தினம் ஸ்ரீரங்கத்து ஆண்டாளை வழிபாடு செய்து வேண்டுதல் வையுங்கள். உங்களுடைய வேண்டுதல் நிச்சயம் பலிக்கும். நாளை வரும் ஆடிப்பூர நாளில் அம்பாளின் அருளாசி அனைவருக்கும் கிடைக்க பிரார்த்தனை செய்து இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை.

சற்று முன்