- Advertisement -

ஆடி பௌர்ணமி பரிகாரம்

- Advertisement -

பௌர்ணமி என்றாலே அது அம்மனுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட பௌர்ணமி அம்மனுக்கு உகந்த மாதமான ஆடி மாதத்தில் வரும் பொழுது அதற்கு மிகவும் பலன் அதிகமாக இருக்கிறது. அப்படிப்பட்ட ஆடிப் பௌர்ணமி ஆனது சனிக்கிழமை மாலையில் தொடங்கி ஞாயிற்றுக்கிழமை மாலை நிறைவடைகிறது. அதனால் இரவு பௌர்ணமி என்பது சனிக்கிழமை அன்றே நிகழ்ந்துவிடும். இருப்பினும் ஞாயிற்றுக்கிழமையும் பௌர்ணமி வழிபாடு செய்வது என்பது சிறப்பு. அப்படிப்பட்ட பௌர்ணமி தினத்தன்று செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வேண்டுதல்கள் இருக்கும். ஒவ்வொரு விதமான பிரச்சினைகள் இருக்கும். அந்த பிரச்சனைகள் தீர வேண்டும் என்பதற்காக தெய்வத்திடம் கோரிக்கை வைப்போம். பொதுவாக ஒரு பரிகாரத்தை நாம் செய்கிறோம் என்றால் அந்த பரிகாரத்தை செய்யும் பொழுது ஒரே ஒரு வேண்டுதலை மட்டுமே முன்வைத்து அந்த பரிகாரத்தையோ அல்லது வழிபாட்டையும் நாம் மேற்கொள்வோம். ஆனால் இந்த பரிகாரத்தை பொருத்தவரை நமக்கு என்னென்ன கோரிக்கைகள் இருக்கிறதோ அவை அனைத்தையுமே முன்வைத்து செய்யலாம். அவை அனைத்துமே நிறைவேறும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த பரிகாரத்தை சனிக்கிழமை அன்று மாலையோ அல்லது ஞாயிற்றுக்கிழமை அன்றோ செய்யலாம். செய்யும் நேரத்தில் பௌர்ணமி திதி இருக்க வேண்டும். அதுதான் மிகவும் முக்கியம். இதற்கு ஒரு டம்ளரோ அல்லது செம்போ வேண்டும். அதை நன்றாக சுத்தம் செய்து கொள்ளுங்கள். அதில் சுத்தமான குடி தண்ணீரை நிரப்பிக் கொள்ளுங்கள். பிறகு அதில் நல்ல உடையாத ஏலக்காயாக பார்த்து இரண்டு ஏலக்காயை போட வேண்டும். அடுத்ததாக மொட்டு உடையாத கிராம்பாக பார்த்து இரண்டு கிராம்பை போட வேண்டும். ஒரு ரூபாய் அல்லது ஐந்து ரூபாய் என்று ஏதாவது ஒரு நாணயத்தை அதற்குள் போட வேண்டும்.

அடுத்ததாக சிறிது பச்சை கற்பூரத்தை நுணுக்கி அதில் போட வேண்டும். கடைசியாக துளசி இலைகளை அதில் போட வேண்டும். துளசி இலை கிடைக்காதவர்கள் வெற்றிலையை போடலாம். இப்படி போட்டு முடித்துவிட்டு இந்த செம்பை உங்களுடைய இடது கையில் வைத்துக்கொண்டு கிழக்கு முகமாக பார்த்து அமர்ந்து கொள்ள வேண்டும். பிறகு உங்களுடைய வலது கையை வைத்து அந்த செம்பை மூடிக்கொண்டு உங்களுக்கு என்னென்ன கோரிக்கைகள் இருக்கிறதோ அந்த கோரிக்கைகள் அனைத்தையுமே மகாலட்சுமி, அம்மன், சிவன் இவர்கள் மூவரும் நினைத்து மனதார கூற வேண்டும்.

- Advertisement -

இப்படி கூறி முடித்த பிறகு இந்த செம்பில் இருக்கக் கூடிய தண்ணீரில் சிறிதளவை மட்டும் எடுத்து வீட்டில் இருக்கும் அனைவருக்கும் தீர்த்தமாக தர வேண்டும். மீதம் இருக்கும் தண்ணீரை இரவு முழுவதும் நிலா வெளிச்சத்தில் வைத்து விட வேண்டும். மறுநாள் காலையில் எழுந்து இந்த தண்ணீரை எடுத்து வீடு முழுவதும் ஒரு இடம் விடாமல் முழுவதுமாக தெளிக்க வேண்டும்.

இவ்வாறு தெளித்து முடித்த பிறகு மீதம் தண்ணீர் இருக்கும் பட்சத்தில் அந்த தண்ணீரை செடியில் ஊற்றி விட வேண்டும். அந்த தண்ணீருக்குள் போட்டு வைத்திருக்கும் நாணயத்தை எடுத்து பணம் இருக்கும் இடத்தில் வைத்து விடுங்கள். அந்த நாணயத்தை செலவு செய்யக்கூடாது. இந்த முறையில் பரிகாரம் செய்ய எண்ணி மூன்று பௌர்ணமிக்குள் நீங்கள் நினைத்தது நடக்கும். கேட்டது கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: நோய் நீங்க ஆடி சனிக்கிழமை வழிபாடு

மிகவும் எளிமையான இந்த தாந்திரீக பரிகாரத்தை செய்யும் பொழுது வீட்டில் இருக்கக்கூடிய அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்குவதோடு மட்டுமல்லாமல் நாம் நினைத்த கோரிக்கைகள் நினைத்தபடி நிறைவேறும்.

சற்று முன்