இன்று ஆடி பவுர்ணமி! உங்கள் குடும்பம், பல தலைமுறைகளுக்கு சுபிட்சமாக வாழ, பெண்கள் செய்ய வேண்டிய முக்கியமான பூஜை.

aadi-pournami
- Advertisement -

ஆடி மாதம் முழுவதுமே அம்மனுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த நாட்கள் தான். அதிலும் குறிப்பாக, சிவபெருமானுக்கும் அம்மனுக்கும் உகந்த நாளாக சொல்லப்படும், இந்த ஆடி பவுர்ணமி தினத்தை யாரும் தவற விட வேண்டாம். இன்றைய தினம் கோவிலுக்கு செல்ல முடியவில்லை என்றாலும், நம்முடைய வீட்டிலேயே குலதெய்வத்தின் ஆசீர்வாதத்தை பெறவும், அம்மனின் அருள் ஆசி கிடைக்கவும், வீட்டில் இருக்கும் பெண்கள் எப்படி பூஜை செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இன்றைய தினம் திங்கட்கிழமை! சிவனுக்கு உகந்த நாளான சோம வாரத்தில், இந்த ஆடி பவுர்ணமி தினம் வந்திருக்கின்றது. அம்மனுக்குரிய இந்த தினம், சிவனுக்கு உரிய கிழமையில் வந்திருப்பது, மேலும் சிறப்பினை சேர்த்து இருக்கின்றது. ஆகவே சிவபெருமானையும், பார்வதி தேவியையும் ஒருசேர வணங்க இந்த நாள் மிகவும் சிறப்பான நாளாக சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

சக்தி ஸ்வரூபத்தில் இருக்கும், பெண்கள் இன்று மாலை, அலங்காரமாக இருப்பது அவசியமானது. பெண்கள் மகாலட்சுமி அம்சத்தோடு, முழுமையான அலங்காரத்தோடு, இந்த பூஜையை செய்தால் வீட்டில் இருக்கும் தரித்திரம் கட்டாயம் நீங்கும். அலங்காரத்திற்கு எதற்கு இவ்வளவு முக்கியத்துவம் என்று சிலர் சிந்திக்கலாம்? பொதுவாகவே, எந்த வீட்டில் பெண்கள் அலங்காரத்தோடு, மங்களகரமாக இருக்கின்றார்களோ, அந்த இடத்தில் மகாலட்சுமி, நிரந்தரமாக நிறைந்து இருப்பாள் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. செல்வ செழிப்பை தரப்போகும் இந்த பூஜையை, பெண்கள் பூ, பொட்டு, பட்டுப் புடவையோடு, கண்ணாடி வளையல் அணிந்து நிறைவாக செய்வது நல்ல பலனை கொடுக்கும்.

chitra pournami sivan

வெளியில் செல்லக் கூடிய சூழ்நிலை இருந்தால், தங்களுடைய குலதெய்வ கோவிலுக்கு சென்று சிலர் குலதெய்வ வழிபாட்டை இன்றையதினம் மேற்கொள்வார்கள். இந்த வருடம் குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலை நிலவுகிறது. பரவாயில்லை! வீட்டிலேயே, இந்த ஆடி பவுர்ணமி தினத்தில், குலதெய்வ வழிபாடு செய்வது, குலதெய்வத்தின் ஆசீர்வாதத்தை முழுமையாகப் பெற்று தரும் என்று சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

உங்கள் வீட்டில் சர்க்கரைப் பொங்கலை நெய்வேதியமாக தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். சிறிய கிண்ணத்தில் கொஞ்சமாக குங்குமத்தையும் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் வீட்டு பூஜை அறையை பூக்களால் அலங்காரம் செய்துவிட்டு, நெய்தீபம் ஏற்றி வைத்து, நைவேத்யத்தை படைத்து, சிறிய கிண்ணத்தில் எடுத்து வைத்திருக்கும் குங்குமத்தால் அம்மனுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.

chitra-pournami

உங்களுக்கு அம்மன் போற்றிகள் தெரிந்தால், அதை சொல்லி அர்ச்சனை செய்யலாம். மந்திரம் தெரியாதவர்கள், ‘ஓம் சக்தி’ என்று உச்சரித்து அர்ச்சனை செய்யலாம். ‘ஓம் நமசிவாய’ என்ற மந்திரத்தை சொல்லி அர்ச்சனை செய்யலாம். அது அவரவருடைய விருப்பம் தான். ஆனால் 108 முறை அந்த குங்குமத்தால் அம்பாளுக்கு கட்டாயம் அர்ச்சனை செய்யப்படவேண்டும். அம்பாள் பாதத்தின் முன்பு, அந்த குங்குமம் சென்றடைய வேண்டும்.

- Advertisement -

அம்பாள் பாதத்தில் ஒரு சிறிய கிண்ணத்தை வைத்து, அந்த குங்குமத்தை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். பூஜை முடிந்தவுடன் தினம்தோறும் நெற்றியில் இட்டுக்கொள்ள, அந்த குங்குமத்தை பயன்படுத்தினால், வீட்டில் ஐஸ்வர்யம் நிலைத்திருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. (பூஜையில் அம்பாளை வழிபடும் போதும், அம்பாள் பாதத்தில் சேர்த்த குங்குமத்தை, நெற்றியில் இட்டுக் கொள்ளும் போதும், உங்களுடைய குடும்பம் தலைமுறை தலைமுறையாக, சுபிட்சமாக வாழ வேண்டும் என்றும், உங்களுடைய குலம் தழைத்து கொண்டே இருக்க வேண்டும் என்ற வேண்டுதலை அம்பாளிடம் வைக்க வேண்டும்.)

irukkankudi-amman

இதேபோல், இன்றைய தினம் சரஸ்வதி தேவியின் குருவான ஹயக்ரீவர், அவதரித்த நாளாகவும் சொல்லப்பட்டுள்ளது. ஆகவே, உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால், அவர்கள் கல்வியில் சிறப்பாக விளங்க, சரஸ்வதி தேவியை மனதார நினைத்து வழிபட வேண்டியது அவசியம்.

mariyamman

இன்றைய தினம், கட்டாயம் நீங்கள் அன்னதானம் செய்தே ஆகவேண்டும். உங்கள் கைகளால் இன்றைக்கு செய்யப்போகும் அன்னதானம், கோடி புண்ணியத்தை தேடித்தரும் என்பதை மறந்து விடாதீர்கள்! முடிந்தால் வறுமையில் உள்ளவர்களுக்கு சாப்பாடு போடலாம். முடியாதவர்கள் பசு மாட்டிற்கு ஒரு வாழைப்பழமாவது கொடுப்பது சிறப்பு. அதுவும் முடியவில்லை என்றால், ஒரு கைப்பிடி சர்க்கரையை, எறும்புகள் உள்ள இடத்தில் தூவியாவது விட்டுவிடுங்கள்! அதுவே போதுமானது.

saraswathi 2

உங்கள் கைகளால் ஏதாவது ஒரு ஜீவராசி, இன்றைக்கு உணவு அருந்துவது மிகவும் விசேஷமானது என்றும் சொல்லப்பட்டுள்ளது. வீட்டில் இருந்தபடியே அனைவரும் சிவனையும், சக்தியையும் வழிபாடு செய்து, பிரகாசமான எதிர்காலத்தை பெறவேண்டும் என்ற கருத்தை முன் வைத்து, இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
உங்கள் ஜாதக கட்டத்தில் நவகிரகங்கள் சரியான இடத்தில் அமர்ந்திருந்தாலும் கூட, உங்களது வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பே இல்லை. இந்த தவறுகளை நீங்கள் செய்தால்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -