நாளை ஆடி பௌர்ணமி – இவற்றை செய்வதால் மிகுதியான பலன்களை பெறலாம்

aadi-pournami
- Advertisement -

தமிழ் மாதங்களில் பற்பல சிறப்புகளை கொண்ட ஒரு அற்புத மாதமாக ஆடி மாதம் திகழ்கிறது. இந்த ஆடி மாதத்தில் தான் பெண் தெய்வங்களுக்கான வழிபாடுகள் பூஜைகள், போன்றவை மிகச் சிறப்பாக செய்யப்படுகின்றன. மேலும் இந்த ஆடி மாதம் இனி வரவிருக்கும் பண்டிகை நாட்களின் தொடக்க மாதமாக இருக்கிறது. தெய்வங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுவதால் இந்த ஆடி மாதத்தில் திருமணம், புது வீடு புகுதல் போன்ற சுபகாரியங்கள் செய்வது தவிர்க்கப்படுகிறது. அத்தகைய ஆடி மாதத்தில் வருகின்ற ஒரு மிக அற்புதமான தினம் தான் ஆடிப்பௌர்ணமி தினம். இந்த ஆடிப் பௌர்ணமி தினத்தில் நாம் செய்ய வேண்டியவை என்ன என்பதையும் அதனால் நமக்கு ஏற்படும் சிறப்பான பலன்கள் என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

தமிழர்களின் நாட்காட்டி சூரியனின் நகர்வை அடிப்படையாகக் கொண்டதாகும். அந்த வகையில் சித்திரை மாதம் மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கும் போது தமிழர்களின் வருடப்பிறப்பு தொடங்குகிறது. அப்படி 12 ராசிக் கட்டங்களில் நான்காவது ராசியான கடக ராசியில் சூரியன் வருகின்ற மாதம் தான் ஆடி மாதம். ஆடி மாதம் என்பது அம்மன் தெய்வங்கள் வழிபாட்டிற்குரிய ஒரு சிறப்பான மாத காலமாகும். அதுவும் மிக சிறப்பான தினமான ஆடிப் பௌர்ணமி தினத்தில் அம்மன் வழிபாடு செய்பவர்களின் வாழ்வில் மிக அற்புதமான மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி.

- Advertisement -

ஆடி மாத பௌர்ணமி தினத்தன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்துவிட்டு உணவேதும் அருந்தாமல், வீட்டின் பூஜை அறையில் அம்பாள் படத்திற்கு விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். அன்றைய தினம் அருகிலுள்ள அம்மன் அல்லது அம்பாள் கோயிலுக்கு சென்று அம்மன் அல்லது அம்பாள் தெய்வங்களுக்கு சிவப்பு மற்றும் மஞ்சள் கலந்த வஸ்திரம் சாற்றி, சிவப்புக்கல் ஆபரணம் அணிவித்து வழிபாடு செய்வது சிறந்தது. பல வகையான வாசம் மிக்க பூக்களால் அர்ச்சனை செய்வதோடு, அறுகம்புல்லாலும் அம்மனுக்கு அர்ச்சனை மிகவும் சிறப்பானதாகும். மேலும் அடி பௌர்ணமி தினத்தன்று அம்பிகைக்கு பாலாபிஷேகம் செய்து, வாழைப்பழம் கலந்த சாதம் நைவேத்தியம் செய்து வழிபாடு செய்வது மிக அற்புதமான பலன்களை கொடுக்கவல்லதாக இருக்கின்றது.

மேற்படி பூஜையை முடித்த பின்பு நைவேத்தியப் பிரசாதத்தையும், தயிர் சாதம், சாம்பார் சாதம் போன்றவற்றை கோயிலில் உள்ள பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க வேண்டும். அம்மனை மேற்கூறிய வழியில் வழிபடுபவர்களுக்கு மிகுதியான புண்ணிய பலன்கள் ஏற்படும். திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தைப்பேறு கிடைக்காமல் தவிப்பவர்களுக்கு குழந்தை பாக்கியங்கள் உண்டாகும். வியாபாரங்களில் நேரடி மற்றும் மறைமுக எதிர்ப்புகள் அறவே நீங்கி லாபங்கள் பெருகும். நோய்நொடிகள் ஏற்படாமல் காக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். விபத்துக்கள், துர்மரணங்கள் ஏற்படுவதை தடுக்கும். மேலும் இந்த ஆடி பௌர்ணமி தினத்தில் வேதம் அறிந்த பிராமணர்களுக்கு புது வஸ்திரம் மற்றும் உங்களால் முடிந்த தொகையை தட்சிணையாக தானம் தருவது உங்களின் அத்தனை விதமான தோஷங்களை போக்குகின்ற ஒரு சிறந்த பரிகாரமாக இருக்கிறது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
உங்களுக்கு செய்வினை பாதிப்பு ஏற்படாமல் காக்கும் பரிகாரம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Aadi pournami in Tamil. It is also called as Pournami viratham palangal in Tamil or Aadi pournami valipadu in Tamil or Pournami valipadu in Tamil or Pournami poojai in Tamil.

- Advertisement -