ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு விதமான தெய்வங்களை வழிபடுவோம். அப்படிப்பட்ட வழிபாட்டில் மிகவும் முக்கியமான கிழமையாக திகழ்வதுதான் செவ்வாய்க்கிழமை. செவ்வாய்க்கிழமை என்பது மங்கள காரனுக்குரிய கிழமையாகவும் அந்த கிழமையில் நாம் முருக பெருமானை வழிபட்டால் அவரால் ஏற்பட்ட தாக்கங்கள் அனைத்தும் தீரும் என்றும் கூறப்படுகிறது. இதோடு மட்டுமல்லாமல் அம்பாள் மற்றும் மகாலட்சுமி அருளை பெறுவதற்கும் மிகவும் எளிமையான ஒரு தீப வழிபாடு என்பது இருக்கிறது. அந்த தீப வழிபாட்டை எப்படி செய்வது என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
ஆடி செவ்வாய் அன்று ஏற்ற வேண்டிய தீபம்
இந்த தீப வழிபாட்டை நாம் முழு மனதுடன் செய்யும் பொழுது கண்டிப்பாக நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேறும். கேட்டது அனைத்தும் கிடைக்கும். இந்த தீபத்தை காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் தான் ஏற்ற வேண்டும். அவ்வாறு ஏற்ற இயலாதவர்கள் காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் தீபத்தை ஏற்றி விட வேண்டும். சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறைக்கு வந்து சுவாமி படங்களை துடைத்து சந்தனம் குங்குமம் வைத்து அவர்களுக்கு மலர்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள்.
பிறகு ஒரு தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு நமக்கு டைமண்ட் கற்கண்டு மற்றும் விரலி மஞ்சள் தேவைப்படும். காம்பு நுனி உடையாத விரலி மஞ்சளை ஒற்றைப்படை எண்ணிக்கையில் எடுத்துக் கொள்ளுங்கள். தாம்பாளத்திற்குள் தாம்பாளத்தை சுற்றி விரலி மஞ்சளை வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதற்கு நடுவே சிறிது டைமண்ட் கற்கண்டு போட்டு அந்த டைமண்ட் கற்கண்டுக்கு மேலாக ஒரு அகல் விளக்கை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.
இந்த தீபத்தை மகாலட்சுமி தாயாரின் பாதத்தில் வைத்து வழிபாடு செய்ய வேண்டும். மேலும் இன்றைய தினத்தில் அம்பாளுக்கு, அல்லது மகாலட்சுமிக்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்து வழிபாடு செய்வதும் அந்த குங்குமத்தை தினமும் நெற்றியில் வைத்துக் கொள்வதும், அவர்களின் அருளை பரிபூரணமாக பெறுவதற்கு உதவும். இந்த முறையில் நாம் வழிபாடு செய்வதன் மூலம் கடன் பிரச்சனை தீரும். மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். செல்வ செழிப்பு ஏற்படும். நாம் வேண்டும் வேண்டுதல் விரைவிலேயே நிறைவேறும். நல்ல முன்னேற்றகரமான வாழ்க்கையை வாழ முடியும்.
இந்த வழிபாட்டை செய்து முடித்த பிறகு மறுநாள் அதாவது புதன்கிழமை அன்று இதில் இருக்கக்கூடிய டைமண்ட் கற்கண்டை பொடி செய்து எறும்புகள் இருக்கும் இடத்தில் போட்டு விட வேண்டும். அடுத்ததாக இதில் இருக்கக்கூடிய மஞ்சளையும் பொடி செய்து அதை தண்ணீரில் கரைத்து வேப்பிலை மற்றும் மாயிலையை பயன்படுத்தி வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் வீட்டில் இருக்கக் கூடிய எதிர்மறை ஆற்றல்கள் நீக்கும் என்பதோடு மட்டுமல்லாமல் மகாலட்சுமி தாயாரின் அருளையும் நம்மால் பரிபூரணமாக பெற முடியும்.
இதையும் படிக்கலாமே: கடன் தீர செய்ய வேண்டிய தானம்
மிகவும் எளிமையான இந்த தீப வழிபாட்டை முழு நம்பிக்கையுடன் செவ்வாய்க்கிழமை அன்று ஏற்றி வழிபாடு செய்பவர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கையில் அனைத்து விதமான நன்மைகளையும் பெற்று சிறப்புடன் வாழ்வார்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.