- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஆடிப்பூர ஆண்டாள் வழிபாடு

ஆடிப்பூர ஆண்டாள் வழிபாடு

- Advertisement -

ஆடி மாதம் என்பது அம்மனுக்குரிய மாதம் என்றும் அந்த மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு நாட்களும் அம்மனை வழிபாடு செய்வதற்கு உகந்த நாட்கள் என்றும் நம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட ஆடி மாதத்தில் வரக்கூடிய ஆடிப்பூரம் நாள் அன்று தான் ஆண்டாள் அவதரித்தார் என்றும் அன்றைய நாளில் நாம் ஆண்டாளை வழிபாடு செய்யும் பொழுது ஆண்டாளின் அருளால் நமக்கு சகல காரியங்களிலும் வெற்றிகள் உண்டாகும் என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட ஆண்டாளை நாம் நம்முடைய வீட்டில் எளிமையான முறையில் எப்படி வழிபாடு செய்யலாம் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

ஆடிப்பூர ஆண்டாள் வழிபாடு

சூடித் தந்த சுடர்கொடியாள் என்று கூறக் கூடியவள் தான் ஆண்டாள். ஆண்டாள் என்றதும் பலருக்கும் மார்கழி மாதம் தான் ஞாபகத்திற்கு வரும். எந்த அளவிற்கு மார்கழி மாதத்தில் ஆண்டாளின் திருப்பாவையை பாடி வழிபாடு செய்கிறோமோ அந்த அளவிற்கு ஆண்டாள் அவதரித்த ஆடி மாதத்தின் பூரம் நட்சத்திர நாளன்றும் ஆண்டாளை நாம் வழிபாடு செய்ய வேண்டும். அன்றைய தினத்தில் ஆண்டாளை நாம் வழிபாடு செய்யும்பொழுது வீட்டில் தடைபட்டிருக்கக் கூடிய சுப காரியங்கள் அனைத்தும் தடையின்றி நடைபெறும் என்றும் நாம் தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றிகளை பெற முடியும் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

ஜூலை மாதம் 28ஆம் தேதி திங்கட்கிழமை அன்று ஆடிப்பூரம் வருகிறது. இன்றைய நாளில் ராகு காலம், எமகண்ட நேரத்தை தவிர்த்து நல்ல நேரம் பார்த்து வீட்டிலேயே ஆண்டாள் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். வீட்டில் ஆண்டாளின் படம் இருக்கும் பட்சத்தில் அந்த படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்து தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு மனை பலகையை வைத்து அதில் பச்சரிசி மாவினால் கோலம் போட்டு அந்த கோலத்திற்கு மேல் ஆண்டாளின் படத்தை வைக்க வேண்டும். ஆண்டாளுக்கு மலர்கள் என்பது மிகவும் பிடிக்கும். அதிலும் மல்லிகைப்பூ மிக மிக பிடிக்கும். மல்லிகை பூவை மாலையாக தொடுத்து ஆண்டாளின் படத்திற்கு சாற்றி கொள்ளுங்கள்.

அதேபோல் வளையலையும் வாங்கி அதையும் மாலையாக தொடுத்து ஆண்டாளுக்கு சாற்ற வேண்டும். வளையலை மாலையாக தொடுக்க முடியவில்லை என்னும் பட்சத்தில் ஆண்டாளின் படத்திற்கு முன்பாக வளையலை வைத்துக் கொள்ளலாம். இதோடு மருதாணி, மஞ்சள் குங்குமம், பழங்கள், வெற்றிலை பாக்கு போன்றவற்றை வைக்க வேண்டும். பிறகு ஆண்டாளுக்கு அக்காரவடிசலை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். இப்பொழுது கையில் உதிரி பூக்களை எடுத்துக் கொண்டு ஆண்டாளின் இந்த ஒரு மந்திரத்தை 108 முறை கூறி அர்ச்சனை செய்ய வேண்டும்.

- Advertisement -

மந்திரம்

“ஓம் நமோ கோதை நாச்சியார் நமோ நம”

அர்ச்சனை செய்து முடித்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள். வீட்டிற்கு அருகில் இருக்கக்கூடிய சுமங்கலி பெண்களை ஒற்றைப்படை எண்ணிக்கையில் வீட்டிற்கு அழைத்து ஆண்டாளுக்கு முன்பாக வைத்திருந்த மலர்கள், வளையல், மருதாணி, அக்காரவடிசல், பழங்கள் போன்றவற்றை அவர்களுக்கு தந்து அவர்களிடமிருந்து ஆசிர்வாதம் வாங்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் ஆண்டாளின் அருளை பரிபூரணமாக பெறுவதோடு நாம் செய்யக்கூடிய காரியங்கள் அனைத்திலும் வெற்றிகள் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே: பண வரவு அதிகரிக்க சொல்ல வேண்டிய மந்திரம்

ஆண்டாளை வழிபாடு செய்வதற்கு உரிய நாளான ஆடிப்பூரம் நாள் அன்று வீட்டில் இப்படி ஒரு முறை வழிபாடு செய்து பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் பல வெற்றிகளை அடைவீர்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்