டயட் என்றாலே கஷ்டப்பட்டு தான் இருக்கணுமா என்ன? ஏன் ஜாலியா இந்த லட்டு சாப்பிட்டு கூட டயட் இருக்கலாமே. அழகுடன் ஆரோக்கியத்தையும் சேர்த்த பராமரிக்க தினமும் இந்த ஒரு லட்டு போதும்.

- Advertisement -

அழகிற்காக பயன்படுத்தப்படும் இந்த பிளக்ஸ் சீட்ஸ் வைத்து சுவையான லட்டு தயாரிக்கலாம். இது தலை முடி, சருமம் போன்றவற்றை அழகாக்குவதோடு, முடி  வளர்ச்சிக்கும் பயன்படுத்தும் இந்த பிளேக்ஸ் ஸீட் ட்டால் ஒரு முழு நேர உணவு சாப்பிட்து போல இருக்கும், இதனால் உடல் எடை குறைக்க டயட் இருப்பவர்களுக்கு எது ஒரு நல்ல உணவு . அது மட்டுமின்றி இதில் சேர்க்கும் மற்ற பொருட்களும் உடலுக்கு நன்மை செய்யக்கூடியவை தான். இந்த லட்டு மிக சிறந்த ஒரு உணவு இந்த லட்டை எப்படி செய்வது என்று இப்போது தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்: பிளக்ஸ் சீட்ஸ் – 1/2 கப், எள் – 1/2 கப், வேர்க்கடலை -1/4 கப், தேங்காய் துருவியது – 1கப், பேசிச்சை பழம் -1கப்.

- Advertisement -

இந்த லட்டு செய்ய முதலில் பிளக்ஸ் சீட்ஸ் விதைகளை நல்ல வாசம் வரும் வரை அடுப்பை லோ ஃபிலிமில் வைத்து வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். வறுத்த இதை ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்து விடுங்கள்.

அதன் பிறகு எள்ளை வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதுவும் நன்றாக பொரிந்து வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளுங்கள். இதற்கு கருப்பு எள், வெள்ளை எள் எதை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த வறுத்த எள்ளையும் ஆளி விதை வறுத்து கொட்டிய தட்டிலே சேர்த்து இதையும் அப்படியே ஆற வைத்து விடுங்கள்.

- Advertisement -

மூன்றாவதாக துருவிய தேங்காய் இதையும் நன்றாக வாசம் வரும் வரை சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதையும் வறுத்து ஏற்கனவே வறுத்து வைத்த பொருட்களுடன் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இப்போது கடைசியாக வறுத்த வேர்க்கடலையை லேசாக வறுத்துக் கொள்ளுங்கள். இதையும் வறுத்த பொருட்களுடன் சேர்த்து எல்லாம் ஆறும் வரை விட்டு விட்டு, இவை அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒரு முறை அரைத்து விடுங்கள். அதன் பிறகு எடுத்து வைத்த பேரிச்சம் பழத்தை இதில் சேர்த்துக் கொள்ளுங்கள். பேரீச்சம் பழம் கொட்டை இல்லாமல் சாஃப்டாக இருக்கும் பேரிச்சம்பழத்தை சேர்த்தால் இந்த லட்டு சுவையாக இருக்கும். மிக்ஸியில் அரைக்கவும் சுலபமாக இருக்கும். உங்களுக்கு பேரிச்சம்பழம் சேர்க்க விருப்பம் இல்லை என்றால் அதற்கு பதில் வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம்.

- Advertisement -

இதை அரைக்க தண்ணீர் சேர்க்க வேண்டாம். வறுத்த பொருட்கள் அனைத்துமே, அரைக்கும் போது அதிலிருந்து எண்ணெய் விடும். ஆகையால் தண்ணீர் எதையும் சேர்க்காமல் வறுத்த பொருட்கள் பேரீச்சம்பழம் இவற்றை மட்டும் அரைத்து ஒரு தட்டில் கொட்டி உருண்டை பிடித்து வைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: இதுவரைக்கும் எத்தனையோ வெரைட்டி கட்லெட் சாப்பிட்டு இருப்பீங்க, ஆனா இந்த சோயா சங்க்ஸ், கொண்டைக்கடலை சேர்ந்து கட்லெட் சாப்பிட்டு இருக்கீங்களா? ஒரு முறை செஞ்சு சாப்பிட்டு பாருங்க இனி எல்லா நேரமும் ஈவினிங் ஸ்நாக்ஸ்னா இந்த கட்லெட் தான்.

பிளேக்ஸ் சீட் லட்டு தயாராகி விட்டது இதை தினமும் ஒரு லட்டு வீதம் மட்டும் தான் சாப்பிட வேண்டும். ஏனென்றால் ஆளி விதை அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இதை வெளியில் வைத்திருந்தாலும் கூட ஒரு வாரம் வரை நன்றாக இருக்கும் . தினமும் உண்ணும் உணவுகளுடன் இதுபோல ஆரோக்கியம் சார்ந்த உணவையும் கொஞ்சம் நம் உணவில் சேர்த்து உடல் நலனை காத்துக் கொள்ளலாம்.

- Advertisement -