நம்முடைய முன்னோர்களின் அருளைப் பெற வேண்டும் என்றால் அதற்கு உகந்த நாளாக மாதத்திற்கு ஒருமுறை வரக்கூடிய அமாவாசை திகழ்ந்தது. அமாவாசை நாளில் இறந்த முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்வது, படையல் இடுவது, காக்கைக்கு சாதம் வைப்பது, பசு மாட்டிற்கு அகத்திக்கீரை தருவது, தங்களால் இயன்ற அன்னதானத்தை பிறருக்கு செய்வது போன்ற பலவிதமான காரியங்களில் பலரும் ஈடுபடுவார்கள். இப்படி செய்வதன் மூலம் முன்னோர்களின் அருளை பெற முடியும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் ஆனி மாதத்தில் எந்த முறையில் வழிபாடு செய்தால் குலதெய்வத்தின் அருளையும் முன்னோர்களின் அருளையும் பெற முடியும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஆனி அமாவாசை வழிபாட்டு முறை
அமாவாசை என்பது முன்னோர்களுக்கு உரிய நாளாக மட்டுமில்லாமல் குலதெய்வ வழிபாட்டிற்கும் உகந்த நாளாகவே கருதப்படுகிறது. அப்படிப்பட்ட நாளில் நாம் எப்படி முன்னோர்களை வழிபாடு செய்கிறோமோ அதே போல் தான் குல தெய்வத்தையும் வழிபாடு செய்ய வேண்டும். குலதெய்வ ஆலயம் அருகில் இருக்கும் பட்சத்தில் அமாவாசை தினத்தன்று குலதெய்வ ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வது கூடுதல் பலனை தரும். இயலாதவர்கள் தங்களுடைய வீட்டில் குலதெய்வத்தை நினைத்து வழிபாடு செய்வதை மறக்கக்கூடாது. குலதெய்வம் மற்றும் முன்னோர்களின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைத்துவிட்டால் நாம் தொட்ட காரியங்கள் அனைத்திலும் நமக்கு வெற்றிகளை உண்டாகும்.
ஆனி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை என்பது ஜூன் மாதம் 24 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 6:55 மணிக்கு மேல் தொடங்கி ஜூன் மாதம் 25ஆம் தேதி புதன்கிழமை மாலை 5 மணி வரை இருக்கிறது. அதனால் முன்னோர்கள் மற்றும் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்பவர்கள் ஜூன் மாதம் 25ஆம் தேதி புதன்கிழமை அன்று செய்ய வேண்டும். அன்று காலை 6:00 மணியிலிருந்து 7:20 மணிக்குள்ளும் காலை 9:30 மணியிலிருந்து 11:30 மணிக்குள்ளும் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய காரியங்கள் அனைத்தையும் செய்ய வேண்டும். அதேபோல் முன்னோர்களுக்கு படையல் இட்டு வழிபாடு செய்யும் வழக்கம் வைத்திருப்பவர்கள். அதற்கும் இந்த நேரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த ஆனி மாதத்தில் முன்னோர்களுக்கு நாம் படையல் வைக்கும் பொழுது கண்டிப்பான முறையில் ஏதாவது மூன்று காய்கறிகளை ஒன்றாக சேர்த்து ஏதாவது ஒரு சமையல் செய்து படையல் இட்டு வழிபாடு செய்ய வேண்டும். மேலும் அதே காய்கறிகள் கலந்த சாதத்தை காக்கைக்கு வைப்பதன் மூலமும் முன்னோர்களின் பரிபூரணமான அருளை பெற முடியும். இதேபோல் அன்றைய தினம் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
குலதெய்வத்திற்கு ஏதாவது ஒரு இனிப்பு பொருளை நெய்வேத்தியமாக வைத்து ஒரு இளநீரையும் உடன் வைக்க வேண்டும். இளநீர் கிடைக்கவில்லை என்பவர்கள் தேங்காய் உடைத்து தேங்காய் தண்ணீரை வைக்க வேண்டும். இப்படி வைத்துவிட்டு குலதெய்வத்திற்கு முன்பாக 5 அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வைத்து வடக்கு திசை பார்த்தவாறு அமர்ந்து கொண்டு “ஓம் குலதெய்வமே வசி வசி” என்னும் மந்திரத்தை 308 முறை கூற வேண்டும். இந்த குலதெய்வ வழிபாட்டை மாலை 6:00 மணிக்குள் ராகு காலை, எமகண்ட நேரம் தவிர்த்து மீதம் இருக்கக்கூடிய எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம்.
இதையும் படிக்கலாமே: பணவசியத்தை ஏற்படுத்தும் அமாவாசை
ஒருவர் தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தால் கண்டிப்பான முறையில் அமாவாசை தோறும் முன்னோர்களையும் குலதெய்வத்தையும் வழிபாடு செய்ய வேண்டும். இவர்களின் அருளை பரிபூரணமாக பெற்றுவிட்டால் அவர்களின் வாழ்க்கை மிகச்சிறந்த வாழ்க்கையாக அமையும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.