செல்வ செழிப்புடன் வாழ ஆனி மாத பௌர்ணமி வழிபாடு

moon vishnu
- Advertisement -

ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி வரும். இந்த பௌர்ணமி நாள் என்பது மிகவும் விசேஷமான நாளாக கருதப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் பௌர்ணமி தினத்தன்று பெண் தெய்வ வழிபாடு என்பது மேலும் சிறப்புக்குரியதாக திகழும். அப்படிப்பட்ட பௌர்ணமி வருகின்ற வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. பொதுவாக வெள்ளிக்கிழமை என்றாலே அம்மன் மற்றும் மகாலட்சுமி தாயாரின் வழிபாட்டிற்கு உகந்த கிழமையாக திகழும். அந்த கிழமையோடு சேர்ந்து பௌர்ணமி தினமும் வருவதால் இன்னும் பல நன்மைகள் நமக்கு கிடைக்கும். அப்படிப்பட்ட ஆனி பௌர்ணமி தினத்தன்று நாம் செய்யக்கூடிய ஒரு எளிமையான வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

செல்வ செழிப்பு உயர ஆனி பௌர்ணமி வழிபாடு

ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய பௌர்ணமி நாள் அன்று நம்முடைய பிரபஞ்சம் அதிக அளவு ஆற்றலை வெளிப்படுத்தும் என்றும் அந்த நேரத்தில் நாம் நல்லதையே நினைத்து நல்லதற்காக வழிபாடு செய்தோம் என்றால் நமக்கு நன்மையை நடைபெறும் என்று கூறப்படுகிறது. அன்றைய தினம் அசைவம் சாப்பிடுவதையும் எதிர்மறை வார்த்தைகளை உபயோகப்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். இதோடு சில சூட்சமமான வழிபாட்டு முறைகளையும் நாம் பின்பற்றும் பொழுது நம் வாழ்க்கையில் செல்வ செழிப்பு உயரும்.

- Advertisement -

அன்றைய தினம் வெள்ளிக்கிழமை என்பதால் காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய மகாலட்சுமி மற்றும் மஹாவிஷ்ணுவிற்கு சிறப்பான வழிபாடை செய்ய வேண்டும். அதோடு அனைத்து சிவாலயங்களிலும் முக்கனிகளை வைத்து வழிபடும் பழக்கம் என்பது இந்த ஆனி மாத பௌர்ணமிக்குரிய சிறப்பாக கருதப்படுகிறது. அதனால் நாமும் மா, பலா, வாழை போன்ற முக்கனிகளையும் நம்மால் இயன்ற அளவு வாங்கி பூஜையறையில் வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

இதோடு மட்டுமல்லாமல் வியாழக்கிழமை அன்றே ஒரு நல்ல மாம்பழத்தை வாங்கி வந்து அதன் சதைகளை எச்சில் படாமல் நீக்கிவிட்டு அதன் கொட்டையை மட்டும் சுத்தம் செய்து உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்துக் கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமை வீட்டில் எப்பொழுதும் போல் வழிபாடு அனைத்தையும் நிறைவு செய்துவிட்டு இந்த மாங்கொட்டையை எடுத்துக் கொண்ட அருகில் இருக்கக்கூடிய ஆலயத்திற்கு செல்ல வேண்டும்.

- Advertisement -

கண்டிப்பான முறையில் அனைத்து ஆலயங்களிலும் சுற்று வட்டாரத்தில் மண் இருக்கும் அப்படி இருக்கக்கூடிய மண்ணில் இந்த மாங்கொட்டையை புதைத்து விட்டு வர வேண்டும். நம்முடைய நேரம் நன்றாக இருக்கும் பட்சத்தில் அந்த மாங்கொட்டை ஆனது துளிர்விட்டு வளர ஆரம்பிக்கும். இப்படி எந்த அளவிற்கு அந்த மாங்கொட்டை வளர்ந்து கொண்டே இருக்கிறதோ அந்த அளவிற்கு நம்முடைய வாழ்க்கையில் நாம் முன்னேறி கொண்டே செல்வோம். செல்வ செழிப்பும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த மாங்கொட்டையை எந்த ஆலயத்தில் வேண்டுமானாலும் நாம் புதைத்து வைக்கலாம்.

இதையும் படிக்கலாமே: செல்லும் காரியம் வெற்றி அடைய சூட்சும பரிகாரம்

மிகவும் எளிமையான அதே சமயம் சக்தி வாய்ந்த இந்த வழிபாட்டை நம்பிக்கை இருப்பவர்கள் பின்பற்றி தங்கள் வாழ்க்கையில் மேலும் மேலும் பல முன்னேற்றங்களை பெற வேண்டும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -