இன்று ஆனிமாத பௌர்ணமி! அற்புதம் வாய்ந்த இந்த நன்னாளில், சந்திர பகவானையும் அம்மனையும் முறைப்படி இப்படி வழிபாடு செய்தால் நம்மை பிடித்த பீடையும் வறுமையும் நீங்கி, இல்லம் சுபிட்சம் பெறும்.

varahi
- Advertisement -

ஆனி மாத பவுர்ணமிக்கு எதற்காக இத்தனை சிறப்புகள். தை மாதம் சூரிய பகவான் உத்தராயனம் என்று சொல்லப்படும் வடக்கு நோக்கிய தனது பயணத்தை மேற் கொள்கிறார். இந்த ஆடி மாதத்தில் சூரியபகவானின் அந்த வடக்கு நோக்கிய பயணம், ஆனி மாதத்தில் நிறைவடைவதாக சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆடி மாத பௌர்ணமி வழிபாட்டிற்குக்கு  நம்முடைய முன்னோர்கள் அதிகப்படியான முக்கியத்துவம் கொடுத்து உள்ளார்கள். இந்த தினத்தை நாமும் தவறவிட வேண்டாம். நம்முடைய கஷ்டங்கள் தீருவதற்கு, நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும் இந்த நாளில் இறைவனை எப்படி வழிபாடு செய்யவேண்டும் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

chandra bagawan

பொதுவாகவே பௌர்ணமி தினம் என்றால் சந்திர பகவானை வழிபாடு செய்வதும், அம்மன் வழிபாடு செய்வதும் தான் நம்முடைய வழக்கம். அதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. ஆனால் இந்த ஆனி மாத பௌர்ணமி, மூலம் நட்சத்திரத்தோடு சேர்ந்து வருகின்றது. மூல நட்சத்திரம் குறிப்பாக வாராஹி அம்மனுடைய நட்சத்திரம் என்றும் சொல்லப்பட்டுவிட்டது. ஆகவே இந்த பவுர்ணமி நாளில் சந்திர பகவானுடன் சேர்த்து,  வாராஹி அம்மன் வழிபாட்டையும் மேற்கொள்ள போகின்றோம். அது எப்படி.

- Advertisement -

இன்று உங்கள் வீட்டு பூஜையறையில் உள்ள தெய்வங்களின் திருவுருவப்படத்திற்கு பூக்களால் அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். மாலை 6 மணி அளவில் உங்கள் வீட்டு பூஜையறையில் ஒரு தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். அடுத்தபடியாக சர்க்கரைப் பொங்கல், கல்கண்டு சாதம், வெள்ளை பால் பாயாசம் இப்படி உங்களால் எந்த இனிப்பு பிரசாதத்தை நிவேதனமாக வைக்க முடியுமோ அதை செய்து இறைவனுக்கு படைத்து விடுங்கள்.

Varahi amman

குறிப்பாக இந்த பவுர்ணமி நாளில் அம்மனுக்கு முக்கனிகளை வைத்து வழிபாடு செய்வது சிறப்பு என்று சொல்லப்பட்டுள்ளது. முக்கனிகளில் மா பலா வாழை மூன்றும் கிடைத்தால் சரி. அப்படி மூன்று பழங்களும் கிடைக்காதவர்கள் இதில் ஏதாவது ஒரு பழத்தை வைத்து அம்மனுக்கு நிவேதனம் செய்ய வேண்டும். இது மாம்பழ சீசன் என்பதால் மாம்பழம் சுலபமாகவே எல்லோருக்கும் கிடைக்கும்.

- Advertisement -

பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விட்டு 5 நிமிடம் உங்களுடைய மனதை அமைதிப் படுத்திக் கொண்டு வாராகி அம்மனின் காயத்ரி மந்திரத்தை ஒருமுறையாவது உச்சரிக்க வேண்டும். வாராஹி அம்மனின் காயத்ரி மந்திரம் உங்களுக்காக இதோ!

Varahi amman

ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்

- Advertisement -

பூஜை அறையில் அம்மனுக்கு தனியாக படையல் போட்டு நிவேதனம் செய்து தீப தூப ஆராதனைகள் முடித்து வாராஹி அம்மனை மனதார நினைத்து உங்களுக்கு இருக்கக்கூடிய கடன் சுமை, பண கஷ்டம், எதிரி தொல்லை, வாழ்க்கையில் தீராத துன்பங்கள் தீர இந்த வழிபாட்டினை மேற்கொள்ளலாம். இந்த வழிபாட்டினை முடிந்த வரை மாலை 6 மணியிலிருந்து 7.00 மணிக்குள் பூஜை அறையில் செய்து முடித்து விடுங்கள்.

ma-pala-vazhai

அடுத்தபடியாக நாம் செய்யப்போவது சந்திர தரிசனம். சந்திர தரிசனம் செய்யும்போது ஒரு சிறிய தட்டில் ஒரு கைப்பிடி பச்சரிசி வைத்து அந்த பச்சரிசியுடன், இன்று இந்த முக்கனி களையும் தந்திர பகவானுக்கு பிரசாதமாக வைத்து உங்களுடைய வீட்டில் சந்திர பகவான் எந்த இடத்தில் உதயமாகி தரிசனம் தருவாரோ அந்த இடத்தில் இதை சந்திர பகவானுக்கு படைக்க வேண்டும்.

Pournami days in Tamil Calendar

உங்கள் முன்பு இந்த தட்டை வைத்துவிட்டு, சந்திர பகவானின் ஒளிக்கதிர்கள் உங்கள் மீது படும்படி அமர்ந்து 10 நிமிடங்கள் கண்களை மூடி எந்த வேண்டுதலும் வைக்காமல், மனதை அலைபாயவிடாமல் அமைதிப்படுத்தி, சந்திர பகவானை மட்டும் மனதில் நினைத்துக் கொண்டு தியானம் செய்ய வேண்டும்.

‘ஓம் சந்திர தேவாய நமஹ’ என்ற மந்திரத்தை உச்சரிக்கலாம். இப்படி செய்யும்போது தேவையற்ற மனக் குழப்பங்களில் இருந்து நீங்கள் விடுபட முடியும். மனம் தெளிவு பெறும். சரியான நேரத்தில் பிரச்சினைகளுக்கு, சரியான முடிவை எடுக்கக்கூடிய தெளிவு உங்களுக்கு பிறக்கும். எல்லா கஷ்டங்களும் நிச்சயம் தீரும். சந்திர பகவானின் ஆற்றல் நம் மீது விழும் போது நமக்குள் இருக்கக்கூடிய நேர்மறை ஆற்றல் அதிகரிக்கப்படுகிறது. இதனால்தான் பவுர்ணமி தினத்தில் சந்திர தரிசனம் செய்ய சொல்கிறார்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய குழப்பங்கள் தீர இந்த நன்னாளை யாரும் தவற விட வேண்டாம்.

- Advertisement -