ஆஷாட நவராத்திரி இருக்கக்கூடிய மாதமாக தான் ஆனி மாதம் திகழ்கிறது. மேலும் இந்த ஆனி மாதத்தில் தான் ஆனி திருமஞ்சனம் என்ற ஒரு விசேஷமான நடராஜரின் வழிபாடும் இருந்தது. அப்படிப்பட்ட இந்த ஆனி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை அன்று நாம் மகாலட்சுமி தாயாருக்கு இந்த ஒரு தீபத்தை ஏற்றி வைத்து வழிபாடு செய்ய நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேறுவதோடு நம்மை தேடி அனைத்து விதமான நன்மைகளும் வந்து சேரும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு தீபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஆனி மாதத்தின் கடைசி வெள்ளி வழிபாடு
வெள்ளிக்கிழமை என்றாலே அது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகவே கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக பெண் தெய்வ வழிபாட்டிற்கு உகந்த கிழமையாக இந்த கிழமை திகழ்கிறது. இதோடு மட்டுமல்லாமல் பணம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் வெள்ளிக்கிழமை வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக சுக்கிர ஹோரையில் வழிபாட்டை செய்யும் பொழுது சுக்கிர பகவானின் அருளும் மகாலட்சுமி தாயாரின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும். அதன் மூலம் பண பிரச்சினைகள் தீரும் என்பதும் நாம் அறிந்ததே. அந்த வகையில் ஆனி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை அன்று எந்த ஒரு தீபத்தை ஏற்றும்பொழுது அனைத்து விதமான நன்மைகளும் நம்மை தேடி வரும் என்று பார்ப்போம்.
இந்த தீபத்தை ஏற்றுவதற்கு நமக்கு முக்கியமாக தேவைப்படக்கூடியது இரண்டு பொருட்கள். இவை இரண்டுமே பணத்தை வசியம் செய்யக்கூடிய பொருட்களாகவும் பண ஆகர்ஷன பொருட்களாகவும் திகழக்கூடியவை. அப்படிப்பட்ட பொருட்கள் தான் வெந்தயம் மற்றும் சுருள்பட்டை. இந்த இரண்டு பொருட்களை வைத்து பலவிதமான பரிகாரங்களை நாம் செய்வது உண்டு. அப்படிப்பட்ட இந்த இரண்டு பொருட்களை வைத்து தான் ஆனி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை நாம் தீபம் ஏற்ற போகிறோம்.
இந்த தீபத்தை சுக்கிர ஹோரையில் ஏற்றலாம் அல்லது அபிஜித் நேரம் என்று கூறக்கூடிய மதியம் 11:45 இல் இருந்து 12:15க்குள் ஏற்றலாம். முதலில் ஒரு அகல் விளக்கை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த அகல் விளக்கு நிரம்ப வெந்தயத்தை போட வேண்டும். அந்த வெந்தயத்திற்கு மேல் ஒரே ஒரு சுருள்பட்டையை வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது இந்த அகல் விளக்கை உங்களுடைய கையில் வைத்துக்கொண்டு மகாலட்சுமி தாயாரை முழுமனதோடு நினைத்துக் கொண்டு உங்களுடைய சுமைகள் அனைத்தும் விலக வேண்டும், கஷ்டங்கள் அனைத்தும் தீரவேண்டும் என்று மனதார வேண்டிக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு வேண்டி முடித்த பிறகு ஒரு வெள்ளை நிற காட்டன் துணியை எடுத்து அதில் இந்த வெந்தயத்தையும் சுருள்பட்டியையும் வைத்து ஒரு மூட்டையாக கட்ட வேண்டும். சுருள்பட்டை நீளமாக இருக்கும் பட்சத்தில் அதை உடைத்து சிறுசிறு துண்டுகளாக போட்டு மூட்டை கட்டிக் கொள்ளலாம். இப்பொழுது இந்த மூட்டையில் நெய் ஊற்றி இந்த மூட்டையை நாம் தீபமாக ஏற்ற வேண்டும். இந்த தீபம் முழுமையாக எரிந்து முடிய வேண்டும். அன்றைய தினம் முழுவதும் இது அப்படியே இருக்கட்டும். மறுநாள் இந்த சாம்பலை எடுத்து தண்ணீரில் கரைத்து துளசி செடி அல்லது வேறு ஏதாவது தெய்வீக செடிகளில் வேர்களில் ஊற்றி விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நமக்கு எப்பேற்பட்ட பிரச்சினைகள் இருந்தாலும் எப்பேர்ப்பட்ட சுமைகள் இருந்தாலும் அவை அனைத்தும் தீர்வதோடு நம்மை தேடி நன்மைகள் வர ஆரம்பிக்கும்.
இதையும் படிக்கலாமே: திருவோண விரதம்
ஆனி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை இந்த ஒரு தீபத்தை ஏற்றி வைத்து மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்பவர்களுக்கு அவர்களுடைய கஷ்டங்கள் அனைத்தும் நீங்குவதோடு அவர்கள் தேடி நன்மைகள் வந்து சேரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.