ஆண்மை குறைவு நீக்க சித்த மருத்துவம்

aanmai-kuraivu

இந்த உலகில் மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் உடல் மற்றும் மனம் ஆரோக்கியமாக இருப்பது அவசியமாகும். இளமையின் ஒரு கட்டத்தில் ஆணும் பெண்ணும் இல்லற வாழ்வில் இணைந்து, குழந்தை செல்வத்தை பெற்று வாழ்வதே ஒரு முழுமையான இல்லற வாழ்வு வாழ்வதற்கு அர்த்தமாகும். அதிலும் இக்காலத்தில் பிள்ளைப்பேறு கிட்டாத தம்பதிகள் அதிகரித்து வருகின்றனர். இதற்கு ஆண் மற்றும் பெண் இருவரின் உடல் குறைபாடுகள் காரணமாக இருக்கிறது. அப்படி அதிகளவு ஆண்களை பாதிக்கும் ஒரு குறைபாடு தான் ஆண்மை குறைவு. ஆண்மை குறைபாடு ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் ஆண்மை குறைபாடு நீங்க மருத்துவ குறிப்புகள் பற்றி காண்போம்.

Man

ஆண்மை குறைவு ஏற்பட காரணம்:

ஆண்மை குறைவு இன்று அதிகளவில் ஆண்களுக்கு ஏற்பட பல காரணங்கள் இருந்தாலும், அதில் பிரதானமாக இருப்பது, ஆண்களின் மனதில் ஏற்படும் வீண் பயங்கள் மற்றும் பதட்டங்கள் தான். இந்த பயம் மற்றும் பதட்டம் காரணமாக அவர்களின் உடலின் முக்கிய நரம்புகள் தளர்ந்து, ஆண்மை குறைவை உண்டாக்குகிறது. மேலும் சத்தான உணவுகளை உண்ணாதது, இரவில் நீண்ட நேரம் கண் விழித்திருந்தல், மற்றும் மன அழுத்தங்களும் ஆண்மை குறைவு ஏற்பட முக்கிய காரணங்களாக இருக்கிறது.

ஆண்மை குறைவு அறிகுறிகள்:

ஆண்மை குறைபாடு இருக்கும் நபரிடம் எப்போதும் ஒரு வகையான படபடப்புத்தன்மை இருக்கும்.எந்த ஒரு வேலையில் ஈடுபட்டாலும் சுலபத்தில் சோர்ந்து போவார்கள். ஆண்மை குறைபாடு தீவிர நிலையில் இருப்பவர்களுக்கு கைகள் மற்றும் கால்களில் நடுக்கம் இருக்கும் மற்றும் மனதில் தாழ்வு மனப்பான்மை உருவாகும்.

ஆண்மை குறைபாடு போக்கும் மருத்துவ குறிப்புகள்:

குறிப்பு 1:
வெண்ணை, கட்டி தயிர் மற்றும் பேரீச்சம் பழம் இம்மூன்றையும் சேர்த்து குழைத்து, தினமும் காலையில் சாப்பிட்டு வர, ஆண்மை குறைவு நீங்கி ஆரோக்கியம் உண்டாகும்.

thayir

- Advertisement -

குறிப்பு 2:
முருங்கை மரத்தின் பிசினை எடுத்து, நிழலில் காயவைத்து உலர்த்தி, நன்கு பொடித்து சூடான பசும்பாலில் கலந்து தினமும் காலையும், மாலையும் குடித்து வர ஆண்மை குறைவு நீங்கும்.

குறிப்பு 3:
தினமும் காலையில் இரண்டு செவ்வாழைப்பழத்தை சுத்தமான தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வர ஆண்மை குறைவு நீங்கும்.

குறிப்பு 4:
புலால் உணவுகளில் மற்ற எல்லாவற்றையும் விட நாட்டு கோழியின் முட்டைகளை அதிகம் சாப்பிடுவது நல்லது.

eggs

குறிப்பு 5:
போதை பொருட்களான சிகரெட், பீடி, புகையிலை, மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். இவற்றால் ஆண்மை குறைபாடு வர அதிக வாய்ப்புகள் உள்ளன.

குறிப்பு 6:
உடலாரோக்கியம் காக்கவும், மனதிலுள்ள தேவையற்ற பதட்டங்களை நீக்கவும் யோகா, தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சிகளை செய்து வருவது நலம் பயக்கும்.

இதையும் படிக்கலாமே:
தீராத இடுப்பு வலி நீங்க பாட்டி வைத்தியம்

இது போன்ற மேலும் பல தமிழ் மருத்துவம் சார்ந்த குறிப்புகள் பலவற்றை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have given Aanmai kuraivu tips in Tamil. We have said about the Aanmai kuraivu symptoms given 6 tips above to resolve the Aanamai kuraivu issue and to lead a healthy life.