காலை உணவாக சுவையான ஆப்பம் செய்வது எப்படி ?

aapam

தினமும் காலையில் இட்லி தோசை மற்றும் பூரி போன்றவற்றை மட்டுமே அதிகமாக நாம் சாப்பிடுவது வழக்கம். ஆனால் அதைவிட சுவையான மற்றும் ஆரோக்கியமான டிபன் வகைதான் ஆப்பம். தற்போதுள்ள குழந்தைகளுக்கு இந்த மாதிரியான ஆப்பம் ஊற்றி காலையில் குடுத்து பாருங்கள் தினமும் அவர்கள் அதை விரும்பி கேட்பார்கள். ஆப்பம் தயார்செய்வது எப்படி என்று பார்ப்போம் வாருங்கள்.

aapam_1

ஆப்பம் செய்ய தேவையான பொருட்கள்:

இட்லி அரிசி – 1 கப்
பச்சரிசி – 1 கப்
உளுத்தம் பருப்பு – 1/4 கப்
தேங்காய் – 1/2 மூடி
வெந்தயம் – 2 ஸ்பூன்
சமைத்த சாதம் – 1/4 கப்
உப்பு – தேவையான அளவு

ஆப்பம் செய்முறை :

முதலில் இட்லி அரிசி மற்றும் பச்சரிசியினை ஒரு பாத்திரத்தில் போட்டு 2 மணிநேரம் ஊறவைக்கவும் . அதேபோன்று உளுத்தம்பருப்பு மற்றும் வெந்தயம் ஆகியவற்றினை ஒரு பாத்திரத்தில் 2 மணி நேரம் ஊறவைக்கவும்.

aapam_2

- Advertisement -

பிறகு ஊறவைத்த உளுத்தம்பருப்பு மற்றும் வெந்தயத்தினை கிரைண்டரில் போட்டு அரைக்கவும். அது நன்றாக அரைத்த உடன் அதனுடன் ஊறவைத்த அரிசியினையும் கொட்டி அரைக்கவும். பிறகு அதனுடன் தேங்காய் மற்றும் சமைத்த சாதம் போன்றவைகளையும் சேர்த்து நன்றாக அரைக்கவும்.

இப்போது அரைத்த மாவினை ஒரு கின்னத்தில் ஊற்றி 8 மணிநேரம் அதை புளிக்க வைக்கவேண்டும். எட்டு மணிநேரம் கழித்து அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். தற்போது ஆப்பம் செய்ய தேவையான மாவு தயாராகிவிட்டது.

aapam_4

இதனை ஆப்பகாடாயில் ஊற்றி மெலிதாக எண்ணெய் ஊற்றி ஒரு பக்கம் வேகவைத்து எடுத்தால் சுவையான ஆப்பம் தயார்.

இந்த அளவிற்கான ஆப்பத்தின் எண்ணிக்கை – 15
சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை – 5

இதையும் படிக்கலாமே:
மஸ்ரூம் மசாலா செய்வது எப்படி

இது போன்று மேலும் பல சமையல் குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்

Here we have Aappam recipe in Tamil. It is also called as Aappam seimurai or Aappam seivathu eppadi in Tamil or Aappam preparation in Tamil.