கொரோனாவை தொடர்ந்து மற்றொரு பேராபத்து. அபிக்யா ஆனந்த் வெளியிட்ட புதிய வீடியோ

Abikya anand
- Advertisement -

இந்த உலகத்தையே கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டிருக்கும் கொரானா வைரஸை எப்படி அழிப்பது என்று தெரியாமல் இன்றளவும் பல போராட்டங்களை நாம் சந்தித்து வருகின்றோம். இந்த வைரஸை பற்றி சமூக வலைதளங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக செய்திகள் உலா வருவதையும் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம். இதன் அடிப்படையில் சில நாட்களுக்கு முன்பாக வெளிவந்த, ஜோதிடத்தில் சிறந்து விளங்கும் அபிக்யா என்ற சிறுவன் பேசிய வீடியோ ஒன்று நம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அபிக்யா வெளியிட்டிருந்த அந்த வீடியோவில், இந்த உலகிற்கு பேராபத்து காத்துக் கொண்டிருக்கிறது என்பதை 2019ஆம் வருடம் ஆகஸ்ட் மாதமே, தன்னுடைய ஜோதிடத்தில் கணித்து குறிப்பிட்டுள்ளார் என்ற விஷயம் நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான்.’ ஆகஸ்ட் மாதம் வெளிவந்த அந்த வீடியோவில் ‘2019 நவம்பர் மாதம் முதல், 2020 ஏப்ரல்  வரையிலான இடைப்பட்ட காலத்தில் இந்த உலகம் பெரும் அழிவை சந்திக்கப் போகிறது’ என்ற தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. இதோடு சேர்த்து 2020 ஜூன் 30ஆம் தேதி எல்லா பிரச்சினைக்கும் ஒரு தீர்வு கிடைக்கும், என்று அவர் சொன்ன ஒரு வார்த்தை நம் அனைவருக்கும் ஆறுதலை தந்தது.

- Advertisement -

எப்போதுதான் இந்த கொடிய வைரசுக்கு முடிவுகட்டும் காலம் வரப் போகிறதோ? இந்த வைரஸை தடுத்து நிறுத்த யாராவது மருந்து கண்டுபிடிக்க மாட்டார்களா! என்று எண்ணிக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில், அபிக்யா தனது மற்றொரு வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். ‘இந்த வீடியோவில் மீண்டும் இந்த உலகத்திற்கு 2020 டிசம்பர் மாதம் 20ம் தேதி பேராபத்து காத்துக்கொண்டிருக்கிறது என்ற தகவலை அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார் என்பது நம் அனைவரையும் சோகத்தில் மூழ்கடித்துள்ளது.

டிசம்பர் 2020 ஆம் ஆண்டு ஏற்படக்கூடிய அந்த பேராபத்தானது 2021 மார்ச் 31ம் தேதி வரை நீடிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தப் பேராபத்தும் ஒரு நோய் தொற்றால் தான் ஏற்படும் என்பதும் அவரது கணிப்பு! இந்த பேராபத்தில் இருந்து நம்மை நாமே காத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று அபிக்யா பின்வருமாறு கூறியுள்ளார்.

- Advertisement -

வரக்கூடிய பேராபத்துகளிலிருந்து நம்மை காத்துக் கொள்ள வேண்டுமென்றால் நம் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள வேண்டும் என்றும், செய்யும் பாவங்களை குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும், மிருகங்களை வதைக்க வேண்டாம் என்றும், அசைவ சாப்பாட்டை தவிர்க்க வேண்டும் என்றும், இயற்கை அன்னைக்கு எதிராக நாம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் நம் பாவ கணக்கில் சேர்க்கப்படும் என்றும், அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக, மனிதர்களாகிய நாம் வைரஸ் தொற்றுக்களில் இருந்து தப்ப உடலில் எதிர்ப்பு சக்திகளை அதிகரித்துக்கொள்வது அவசியம். 2020 ஆம் ஆண்டின் இறுதியில் புதியதொரு வைரஸ் உருவெடுத்தாலும் அதில் இருந்து நம்மை காத்துக்கொள்ள இப்போதில் இருந்தே எதிர்ப்புசக்தி அதிகம் உள்ள உணவை நாம் உட்கொள்ள வேண்டும் என்பதும் அபிக்யாவின் வேண்டுகோளாக உள்ளது.

2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் வெளியிட்ட வீடியோவில் சொல்லப்பட்டது பளித்திருப்பது நாம் எல்லோரும் அறிந்த உண்மை தான். தற்போது புதியதாக வெளியிட்டிருக்கும், இந்த வீடியோவில் கூறியிருக்கும், மற்றொரு அழிவும் ஏற்பட்டுவிடுமோ! என்ற அச்சுறுத்தல் கட்டாயம் ஒவ்வொரு மனிதனின் மனதிலும் எழத்தான் செய்யும். அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

புராண காலங்களில் எல்லாம், ‘இந்த ஜென்மத்தில் நாம் செய்யும் பாவத்திற்கான தண்டனையை, அடுத்த ஜென்மத்தில் தான் அனுபவிப்போம் என்று நாம் பல நூல்களில் படித்திருக்கின்றோம்.’ ஆனால் இந்த கலியுகத்தில் ‘அவரவர் செய்த பாவத்திற்கு, அவரவரே, அந்த ஜென்மத்திலேயே தண்டனையை அனுபவிப்பார்கள்’ என்று நம் முன்னோர்கள் சிலர் சொல்லிய கூற்று பலித்துவிட்டதோ? உலகத்தை பேரழிவிலிருந்து எப்படித்தான் காப்பாற்றுவது? சிறுவன் அபிக்யா சொன்னதுபோல் மனிதர்கள் செய்யும் பாவங்களை குறைத்துக் கொள்வதுதான் ஒரே வழியோ? என்று பலரும் என்னத் துவங்கியுள்ளனர்.

- Advertisement -