- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஅட்சய திருதியை அபிராமி அந்தாதி பாடல்

அட்சய திருதியை அபிராமி அந்தாதி பாடல்

- Advertisement -

ஒட்டுமொத்த அட்சய திருதியின் நல்ல பலனையும் உங்கள் கையில் கொண்டு வந்து சேர்க்கப் போகிறது இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவு. அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க வேண்டும், வெள்ளி வாங்க வேண்டும், என்ற சலசலப்புக்கு நடுவில், இந்த அபிராமி அந்தாதியின் பாடல்கள் உங்களுடைய வாழ்க்கையை ஜொலிக்க வைக்க உங்களை நோக்கி வந்திருக்கிறது.

வாழ்க்கையில் உங்களுக்கு என்ன வரம் வேண்டும். அந்த அபிராமி அன்னையை வேண்டி இந்த பாடல்களை இன்றைய தினம் படிக்க துவங்கி பாருங்கள். பிறகு உங்கள் வாழ்க்கையில் இருக்கும் தீராத துன்பங்கள் எல்லாம் ஒரு நொடி பொழுதில் தீர, அந்த இறைவனின் ஆசீர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும். அட்சய திருதியையின் பொக்கிஷமான பரிகாரம் என்றால் அது இதுதான்.

- Advertisement -

செய்த பாவங்கள் தீர வேண்டுமா, பிள்ளைகள் எதிர்காலத்தில் நல்ல நிலைமைக்கு வர வேண்டுமா, கடன் தொல்லை தீர வேண்டுமா, ஆரோக்கியம் கிடைக்க வேண்டுமா, இதில் உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அல்லது இந்த எல்லாமே வரமாக கிடைக்க வேண்டும் என்று நினைத்தால், இன்று முதல் அபிராமி அந்தாதியின் இந்தப் பாடல் வரிகளை தினம் தோறும் தொடர்ந்து படித்து வர, உங்களுடைய வாழ்க்கையில் அனைத்து நலன்களும் கிடைக்கும். அட்சயம் என்றால் வளரக்கூடியது.

அள்ள அள்ள குறையாதது என்று அர்த்தம். இன்று நீங்கள் இந்த மந்திரத்தை படிக்க துவங்கினால், தினமும் இந்த மந்திரத்தை படிக்கக்கூடிய பாக்கியம் கிடைக்கும். அபிராமி பட்டர் எழுதிய அபிராமி அந்தாதி பாடலில் இருந்து ஒரு சில முக்கியமான பாடல்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது. இன்று மாலை பூஜை அறையில் விளக்கு ஏற்றி இன்றைய தினம் இந்த பாடல்களை படிக்கத் தொடங்குங்கள். தொடர்ந்து 48 நாள் முதல் 60 நாளுக்குள் தினம் தினம் இந்த பாடலை படிக்க உங்களுடைய கஷ்டங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக குறைவதை கண்கூடாக பார்க்கலாம்.

- Advertisement -

பூர்வ புண்ணியம் பலன்தர

வாணுதல் கண்ணியை, விண்ணவர் யாவரும் வந்திறைஞ்சிப்
பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியைப் பேதைநெஞ்சில்
காணதற்கு அண்ணியள் அல்லாத கன்னியைக் காணும் அன்பு
பூணுதற்கு எண்ணிய எண்ணமன்றோ முன்செய் புண்ணியமே.

கடன் தீர


இல்லாமை சொல்லி, ஒருவர் தம்பால் சென்று, இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல், நித்தம் நீடு தவம்
கல்லாமை கற்ற கயவர் தம்பால் ஒரு காலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மிண்களே

- Advertisement -

பிள்ளைகள் நல்லவர்களாக வளர

தஞ்சம் பிறதில்லை ஈதல்லது என்று உன் தவநெறிக்கே
நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன் ஒன்றை; நீள்சிலையும்
அஞ்சும் அம்பும் மிக்கலராக நின்றாய்; அறியார் எனினும்
பஞ்சு அஞ்சும் மெல்லடியார் அடியார் பெற்ற பாலரையே.

விதியை வெல்ல

தங்குவர் கற்பகத் தருவின் நீழலில்; தாயரின்றி
மங்குவர், மண்ணில் வழுவாப் பிறவியை; மால்வரையும்
பொங்குவர் அழியும்! ஈரேழ்புவனமும் பூத்த உந்திக்
கொங்கிவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே.

நோய் நொடி தீர !

மணியே! மணியின் ஒளியே! ஒளிரும் மணிபுனைந்த
அணியே! அணியும் அணிக்கு அழகே! அணுகாதவர்க்குப்
பிணியே! பிணிக்கு மருந்தே! அமரர் பெருவிருந்தே!
பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்தபின்னே

இதையும் படிக்கலாமே: கோடீஸ்வர யோகம் கிடைக்க

இவ்வளவு தாங்க. இந்த பாடல் வரிகள் எளிமையாக தமிழில் கொடுக்கப்பட்டுள்ள பாடல் வரிகள் தான். மனப்பூர்வமாக இன்று மாலை பூஜையில் இந்த பாடலை படியுங்கள். உங்களுடைய குடும்ப நலன் ஒவ்வொரு நாளும் கூடிக் கொண்டே செல்வதை கண்கூடாக பார்ப்பீர்கள். இத்தகைய சக்தி வாய்ந்த பரிகாரத்தை அட்சய திருதியையான இன்று உங்களோடு பகிர்ந்து கொண்டதில் மன மகிழ்ச்சியுடன் இந்த ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்