எப்படிப்பட்ட கடனையும் 48 நாட்களில் தீர்த்து வைக்கும் அபிராமி அந்தாதி பாடல்.

abirami-anthathi1

எப்படிப்பட்ட சந்தோஷமான வாழ்க்கையை ஒருவர் வாழ்ந்து வந்திருந்தாலும் அவருக்கு கெட்ட காலம் வந்துவிட்டது என்றால் கஷ்டங்கள் பின் தொடரத்தான் செய்யும். நமக்கு ஏற்படும் கஷ்டங்களில், மனக்கஷ்டம் ஒரு பக்கம் இருக்க, பணக்கஷ்டமானது நம்மை துரத்திக் கொண்டே வரும். அதனை சமாளிக்க ஒருகட்டத்தில் நாம் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப் படுகின்றோம். வாங்கிய கடனை சிலசமயங்களில் சுலபமாக திருப்பி கொடுத்து விடலாம். ஆனால் சிலசமயங்களில் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் சிக்கி தவித்துக் கொண்டிருப்போம். அப்படிப்பட்ட கடன் பிரச்சனையிலிருந்து வெளிவர ஒரு சுலபமான வழி உள்ளது. அதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

salt

முதலில் கடன் பிரச்சனை உள்ளவர்கள் சிவன் கோவில்களில் இருக்கும் மடபள்ளிக்கு கல் உப்பை தானமாக கொடுப்பது என்பது மிகவும் சிறப்பான ஒன்று. இதை வாரம்தோறும் சனிக்கிழமை மற்றும் திங்கள் கிழமைகளில் வாங்கி கொடுப்பது நல்லது.

அடுத்ததாக பட்டர் பாடிய அபிராமி அந்தாதி பாடலில் மொத்தமாக நூறு பாடல்கள் உள்ளது. நூறு பாடல்களையும் தினம்தோறும் உச்சரிப்பது என்பது கொஞ்சம் கஷ்டமானது தான். இதனால் இந்த நூறு பாடல்களையும் உச்சரித்த பலனை இந்த ஒரு பாடலை உச்சரிப்பதன் மூலம் நாம் பெறலாம். அபிராமி அந்தாதியில் அம்மனை நினைத்து துதித்து பாடும் அந்தப் பாடல் உங்களுக்காக இதோ.

abirami

அபிராமி அந்தாதி நூற்பயன்:
ஆத்தாளை, எங்கள் அபிராமவல்லியை, அண்டம் எல்லாம்
பூத்தாளை, மாதுளம் பூநிறத்தாளை, புவிஅடங்காக்
காத்தாளை ஐங்கணை பாசாங்குசமும், கரும்பும், அங்கை
சேர்த்தாளை, முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே.

- Advertisement -

முதலில் காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் கண்விழித்து குளிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. முகம் கை கால்களை கழுவிக்கொண்டு அம்பாளை நினைத்து இந்தப் பாடலை மூன்று முறை உச்சரிக்க வேண்டும். பின்பு கடன் தீருவதற்கு என்று அபிராமி அந்தாதியில் பிரத்தியேகமாக ஒரு பாடல் உள்ளது. உங்களுக்காக கடன் பிரச்சனையை தீர்க்கும் அபிராமி அந்தாதி பாடல் இதோ.

abirami-anthathi

கடன் தீர:
இல்லாமை சொல்லி ஒருவர் தம்பால்சென்று இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல், நித்தம் நீடுதவம்
கல்லாமை கற்ற கயவர்தம்பால் ஒரு காலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.

முதலில் அபிராமி அந்தாதி நூற்பயன் பாடலை மூன்று முறை பாடி விட்டு பின்பு, கடனை தீர்ப்பதற்கான பாடலையும் மூன்று முறை பாடிவிட்டு மனதார இறைவனை நினைத்து கடன் பிரச்சனை விரைவாக தீர வேண்டும் என்ற வேண்டுதலை வைக்க வேண்டும்.

kadan-loan

இந்த பரிகாரத்தை தொடர்ந்து 48 நாட்கள் செய்து வரும்போதே கடன் பிரச்சனைக்கான ஒரு நல்ல தீர்வு உங்களுக்கு கிடைத்துவிடும். பிரச்சினைக்கான தீர்வு கிடைத்து விட்டாலும் இந்த பரிகாரத்தை விட்டுவிட வேண்டாம் தொடர்ந்து 90 நாட்கள் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பது உறுதி. இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் தைரியமும் நமக்கு அதிகரிப்பதை நம்மால் கண்கூடாக உணர முடியும்.

இதையும் படிக்கலாமே
வீட்டில் தங்கம் சேர்ந்து கொண்டே இருக்க இதில் ஏதாவது ஒரு வழியை பின்பற்றினால் கூட போதும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Abirami andhadhi. Abirami andhadhi tamil lyrics. Abirami anthathi miracles in tamil. Abirami anthathi benefits tamil.