திங்கட்கிழமையில் சிவனுக்கு எந்த பொருளை கொண்டு அபிஷேகம் செய்தால்! என்ன பலன் கிடைக்கும்? என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா? அபிஷேகத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் இப்படி ஒரு சம்மந்தமா?

sivan-abishegam

அபிஷேகம் செய்வது என்பது இறைவனை குளிர்வித்து அவன் அருள் பெற நாம் செய்யும் எளிய பரிகாரமாகும். கோவிலில் தினமும் நடக்கும் அபிஷேகத்தால் அங்கு சுற்றுப்புற சூழல் குளிர்ச்சி அடைகிறது, இதனால் எதிர் மின்னோட்டம் அதிகரிக்கும். எந்த இடத்தில் எதிர் மின்னோட்டமும், ஈரப்பதமும் இருக்கிறதோ! அந்த இடத்தில் ஆக்சிஜன் அதிகமாக வெளியாகும். பக்தர்கள் சுத்தமான ஆக்சிஜனை சுவாசிக்கும் பொழுது ரத்த ஓட்டம் சீராகி இதயத் துடிப்பு சமநிலைப்படும்.

இறை வழிபாடு மற்றும் ஆரோக்கியம் இரண்டிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை இதன் மூலம் நம்மால் புரிந்து கொள்ள முடியும். அப்படி செய்யப்படும் அபிஷேகங்கள் நமக்கு நற்பலன்களை வாரி வழங்கக் கூடியது ஆகும். அந்த வகையில் திங்கட் கிழமைகளில் சிவபெருமானுக்கு நடக்கும் அபிஷேகங்களில் எந்த பொருளை வாங்கிக் கொடுத்தால்! நமக்கு என்ன பலன்கள் கிடைக்கும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

கந்த தைலம்: இன்பம்
மாப்பொடி: கடன் தீரும்
மஞ்சள் பொடி: அரச வசியம்
நெல்லிப் பருப்பு பொடி: நோய் தீரும்
திருமஞ்சன திரவியம்: நோய் தீரும்

panjamirtham

ரச பஞ்சாமிர்தம்: முக்தி
பழம் பஞ்சாமிர்தம்: முக்தி
பால்: நீண்ட ஆயுள்
பஞ்சகவ்வியம்: பாவங்கள் நீங்கும்
இளம் சூடான நீர்: முக்தி

- Advertisement -

தேன்: குரல் வளம் சிறக்கும்
இளநீர்: ராஜயோகம்
சர்க்கரை பாகு: பகைவர் ஒழிவர்
கரும்புச் சாறு: ஆரோக்கியம் சீராகும்
தமரத்தம் பழச்சாறு: மகிழ்ச்சி பெற

abishegam1

எலுமிச்சை சாறு: எமபயம் நீங்கும்
நாரத்தம் பழச்சாறு: மந்திர சித்தி
கொழிச்சி பழச்சாறு: சோகம் நீங்கும்
மாதுளம் பழச்சாறு: பகை தீரும்
அன்னாபிஷேகம்: மகசூல் பெருகும்

வில்வ இலை நீர்: புத்திர பாக்கியம்
தர்ப்பை நீர்: ஞானம் பெறுவீர்கள்
பன்னீர்: குளிர்ச்சி ஏற்படும்
விபூதி: ஐஸ்வரியம் கிடைக்கும்
தங்கம் கலந்த நீர்: சகல சௌபாக்கியம்

abishegam2

ரத்தினம் கலந்த நீர்: சகல சௌபாக்கியம்
சந்தனம்: பதவி, செல்வம்
கோரோசனை: ஆரோக்கியம், புகழ்
ஜவ்வாது: ஆரோக்கியம், புகழ்
புனுகு: ஆரோக்கியம், புகழ்

பச்சை கற்பூரம்: ஆரோக்கியம், புகழ்
குங்குமப்பூ: ஆரோக்கியம், புகழ்
தயிர்: புத்திர பாக்கியம்
சங்காபிஷேகம்: சகல செல்வமும் கிடைக்கும்
ஸ்நபன கும்பாபிஷேகம்: சித்தி சுத்தி ஆகி சிவ தரிசனம் கிடைக்கும்.

கோவில்களில் மட்டுமல்ல வீடுகளிலும் நாம் செய்யும் அபிஷேகத்திற்கு இதே பலன்கள் உண்டு. வீட்டில் லிங்கம் வைத்திருப்பவர்கள் திங்கட்கிழமை மற்றும் பிரதோஷ வேளைகளில் உங்கள் பிரச்சினைக்கு உரிய பொருளைக் கொண்டு அபிஷேகம் செய்து பலனை பெறலாம். அபிஷேகம் செய்யும் பொழுது இறைவன் குளிர்ச்சி அடைந்து நம்முடைய வேண்டுதல்களை உடனடியாக ஏற்ப்பார் என்பது பக்தர்களுடைய நம்பிக்கையாக இருந்து வருகிறது. அபிஷேகம் செய்யும் நேரத்தில் கோவிலுக்குள் இருந்தாலே நமக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.

abishegam

ஞாயிற்றுக்கிழமையில் விநாயகப் பெருமானுக்கும், நவ கிரகங்களுக்கும் அபிஷேகம் செய்தால் காரிய சித்தி உண்டாகும். திங்கட்கிழமையில் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்ய வேண்டிய வரம் கிடைக்கும். செவ்வாய்க் கிழமையில் முருகனுக்கு அபிஷேகம் செய்ய நினைத்ததெல்லாம் நடக்கும். புதன் கிழமையில் பெருமாளுக்கு அபிஷேகம் செய்தால் துன்பங்கள் தொலையும். வியாழன் கிழமையில் தட்சிணா மூர்த்திக்கு அபிஷேகம் செய்தால் சுபகாரியத் தடைகள் நீங்கும். வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமிக்கு அபிஷேகம் செய்தால் செல்வ வளம் பெருகும். சனிக்கிழமையில் ஆஞ்சனேயருக்கு அபிஷேகம் செய்தால் மனோபலம் கூடும்.