வீட்டில் இந்த செடியை வளர்த்தால் செல்வ வளம் அதிகரிக்குமாம்! பிரமாதமான தூக்கமும் வரும். அப்படி என்ன செடி அது?

maruthani-with-cash

ஒரு சில செடி வகைகளுக்கு தேவ குணமும், ஒரு சில செடி வகைகளுக்கு அசுர குணமும் இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகிறது. சில செடிகளில் இருக்கும் பூக்கள் தோஷம் போக்க தெய்வீக காரியங்களில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அதையே வீட்டில் வளர்ப்பது என்பது எதிர்மறை எண்ணங்களை வெளியிடும் என்றும் கூறப்படுகிறது. எனவே எல்லா வகை செடிகளும் வீட்டிற்கு முன்னால் வைப்பது அவ்வளவு நல்லதல்ல. அவ்வகையில் இந்த செடியும் வீட்டிற்கு முன்னால் வளர்ப்பது சரியல்ல என்று கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் இது தவறான கருத்தாகும். இந்த செடியை வீட்டிற்கு முன்னால் வளர்ப்பது நிறைய நல்ல விஷயங்களை உங்களுக்கு சேர்க்கும் தன்மை கொண்டது. அப்படியான செடி வகையை பற்றி தான் இப்பதிவில் பார்க்க இருக்கிறோம்.

இந்தச்செடி மகாலட்சுமிக்கு இணையாக கருதப்படுகிறது. நெல்லி மரம், மாதுளை மரம் போன்ற மரங்கள் மகாலட்சுமிக்கு உகந்தவை. அவ்வகையில் இந்த மரமும் வீட்டில் இருக்கும் எதிர்மறை எண்ணங்களை நீக்கி நேர்மறை ஆற்றல்களை வெளியிடும். பொதுவாகவே முட்செடிகளை வீட்டில் வளர்ப்பது கூடாது என்பது நியதி. ஆனால் அதிலிருக்கும் முட்களும் தெய்வீக அம்சம் பொருந்திய தான் என்றால் அது மிகையாகாது.

இந்தச் செடியின் பூக்களை பறித்து முகர்ந்து பார்த்தாலே பிரமாதமான தூக்கம் வரும். மனதில் ஒரு அமைதி கிடைக்கும். இது பலரும் அறியாத ரகசியமாகவே இருந்து வருகிறது. இந்தச் செடியின் பூக்களைப் பறித்து தினமும் தூங்கும் போது தலையணைக்கு அடியில் வைத்து தூங்கி பாருங்கள். நிம்மதியான தூக்கம் நிச்சயம் வரும். மனதை சாந்தப்படுத்தி அலைபாய்வதை தடுத்து நிறுத்தி உறக்கம் வரவைக்கும் ஆற்றல் இதன் பூக்களுக்கு உண்டு. அப்படி என்ன செடி வகை அது? என்பதை பார்ப்போமா?

maruthani 2-compressed

இந்தச் செடியின் இலைகளை அரைத்து கைகளில் வைத்துக் கொண்டால் சிவந்து விடும். ஆமாங்க மருதாணி செடி தான் அது. மருதாணி செடியில் இருக்கும் முட்களும் ஆபத்தானவை என்பதால் மற்றும் அதனுடைய இலைகள் துவர்ப்புச் சுவையை கொண்டுள்ளது என்பதால் மட்டுமே வீடுகளில் வளர்க்க கூடாது என்று கூறப்படுகிறது. ஆனால் அதற்கான பராமரிப்பு கொடுத்து வீட்டிற்கு முன்னால் மருதாணி செடியை வளர்ப்பது வீட்டில் செல்வ வளத்தை அதிகரிக்கும். காடு போல் படர்ந்து வளர விடாமல் அவ்வப்போது வெட்டி விட்டு அழகாக சிக்கென்று வளர்ப்பது பார்ப்பதற்கே அவ்வளவு அழகாக காட்சி தரும் தெரியுமா?

- Advertisement -

ராமாயணத்தில் சீதை மருதாணி செடிக்கு அருள் புரிந்ததாகவும் புராணங்களில் உள்ளது. மருதாணி செடி உண்மையில் ஸ்ரீதேவி அம்சத்தைக் கொண்டது. மருதாணி செடியில் மூதேவி வாசம் செய்வதாக தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். வீட்டில் மருதாணி செடி வளர்ப்பதால் பணவரவு தாராளமாக இருக்கும். அதனை காடு போல் படரவிட்டால் கடன்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. எனவே முறையாக பராமரித்து அதன் பயனை அனுபவிக்கலாம். அடிக்கடி கைகளில் மருதாணி இட்டுக் கொள்வதால் அந்த கைகளில் பணம் நிரந்தரமாக தங்கும் என்பது ஜோதிட கூற்று.

Maruthaani

நீங்களும் ஒரு முறை இவ்வாறு முயற்சி செய்து பாருங்கள் உண்மை உங்களுக்கே தெரிந்து விடும். மருதாணி செடியில் நிறைய மருத்துவ குணங்களும் நிரம்பியிருக்கிறது. அதன் இலைகள் கருமையான கூந்தல் வளர்ச்சிக்கு உதவி புரிகிறது. இளநரையை போக்குகிறது. உடல் உஷ்ணத்தை தணித்து உடலை குளிர்ச்சியுடன் பாதுகாக்கிறது. நீங்களும் உங்கள் வீட்டில் மருதாணி செடி வளர்த்து செல்வ வளத்தை பெருக்கிக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே
சதா சண்டை போட்டுக் கொண்டே இருக்கும் கணவன் மனைவி சந்தோஷமாக மாற இந்த தெய்வத்திற்கு இந்த விளக்கு ஏற்றினால் போதுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.